மீண்டும் , தினம்,தினம் .....
மூத்த தொலைக்காட்சி செய்திவாசிப்பாளர் வி. என். மதியழகன்
விஎன் மதியழகன் எழுதிய ''வி. என். மதியழகன் சொல்லும் செய்திகள்'' கருவிநூல் எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு அங்கத்தவர் சபா மண்டபத்தில் அறிமுகம் செய்து வைக்கப்படும்.
வி. என். மதியழகன் சொல்லும் செய்திகள் நூல் மின்னணு தமிழ் ஊடக வரலாற்றில் ஒரு புத்தம் புதிய வரவாகும்.
இந்த நூல் சென்னையில் கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து கிழக்கி ல் அக்கரைப்பற்றில் நூல் அறிமுக விழா இடம்பெற்றன.
நூலாசிரியர் வி. என்.மதியழகன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் மும் மொழிச் சேவைகளுக்குமான பிரதிப் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றியவர்.
இலங்கையில் 1979ஆம் ஆண்டு தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து சுயாதீன தொலைக்காட்சி சேவையில் முதல் தமிழ் செய்தியாளராக உத்தியோகபூர்வமாக த் தெரிவு செய்யப்பட்ட மதியழகன் செய்தி வாசிப்பில் 39 ஆண்டுகளை பூர்த்தி செய்தவர். இலங்கை தமிழ் ஆங்கில சிங்கள செய்தி வாசிப்பாளர்க ளில் அ தி நீண்டகாலம் செய்தி வாசிப்பில் ஈடுபட்டவர். ஒ லி பரப்பில் 45 ஆண்டு காலம் சேவையாற்றியவர். ஒ லி பரப்பு வாழ்வில் ஒரு கட்டத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன செய்தி அறையில் செய் தி நடப்பு விவகார நிகழ்ச்சி தயாரிப்பாளராக பணியாற்றியவர். ரி.வி.ஐ தொலைக்காட்சி சேவையில் செய்தி ஆசிரியராகவும் சேவை புரிந்தவர். ஒ
லி பரப்பில் இணைந்துகொள்ள முன்னர் தினபதி சிந்தாமணி ஆசிரியர் பீடத்தில் கடமையாற்றியவர்.
வானொலி, தொலைக்காட்சி பத்திரிகை சார்ந்த ஊடகவியலாளர்கள் கலைஞர்கள், பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், மேயர்கள் உறவினர்கள் நண்பர்கள் என பலதரப்பட்டவர்களும் சமூக மளித்திருக்க அறிமுக விழா நடைபெறும். அன்புடன் அழைக்கிறோம்.
தகவல்: வி.என்.மதியழகன்.
0 comments:
Post a Comment