றிங் ..றிங் ...றிங் .....றிங் ......றிங் .........றிங் .......

அன்று சனிக்கிழமை காலை வேளை. டொரோண்டோ மாநகரின் பனிக்காலத்துக்குரிய அக்டோபர்   மாதக் குளிரும் மெல்ல மெல்ல அடம்பிடிக்கத்  துடித்துக் கொண்டிருந்தது. 
''அட, மகளை தமிழ் வகுப்பிற்கு அழைத்துச் செல்ல ஜக்கற் வேற அணியவேண்டும்'' என்று சற்றுநான் முணுமுணுத்துக் கொண்டு எழுந்தபோது தொலைபேசியும் அலற ஆரம்பித்துக்கொண்டது.
மறுமுனையில் ஊரிலிருந்து பாட்டி என்றதும் கைபேசியின் தொடர்பினைக் காதில் கொழுவிக்கொண்டு மகளுடன் புறப்பட்டுக்கொண்டேன்.
'' ஹலோ! பாட்டி , எப்பிடி இருக்கிறியள்?''
'' அப்பிடித்தான்!'' அலுத்துக்கொண்டார் பாட்டி.
'' என்ன பாட்டி, வெறுப்பாய்  கதைக்கிறியள் ''
''வேற என்ன! எல்லாரும் வெளிநாட்டுக்குப் போய் பெரிய மனுஷனா விட் டான்கள்.''
'' யாரைப்பற்றி சொல்லிறியள் பாட்டி?''
'' வேறயார் உன்னைப்பற்றித்தான்.'' என்றார் பாட்டி சற்றுக் கோவமாகவே.
'' என்ன பாட்டி சொல்லுறியள். அப்பிடி நான் என்ன செய்தனான்.''
'' உன்னோட எல்லே கொம்மா இருக்கிறா. உங்கை , எங்கட பரந்தாமன் ஆசுபத்திரியில இருக்கேக்கை ,ஒருக்கா பார்க்கப் போகக் க்கேட்க நீ கூட்டிக்கொண்டு போகேல்லையாம். உனக்கு அப்பிடி நேரமில்லையோ'' சற்றுச் சத்தமாகவே கொட்டிக்கொண்டார் பாட்டி.
'' ஏன்  பாட்டி , அவர் எங்களுக்கு நெருங்கின சொந்தமில்லைத்தானே!''
'' எட, சொந்தமில்லையடா பேரா ! நாலுபேர் போகேக்கை நாங்களும் போகவெல்லோ வேணும்.''
''பாட்டி, ஒண்டை செய்யமுதல் நாங்க கொஞ்சம் எண்டாலும் சிந்திக்கவேணும் பாட்டி . ஆஸ்பத்திரிக்கு ஒருத்தரை வருத்தம் பார்க்கவெண்டு அவன் போறான், இவன்   போறான் எண்டு எல்லாரும் அள்ளுப்பட இது ஒண்டும் நல்லூர் தேர் திருவிழா இல்லைப் பாட்டி. ஆசுபத்திரியில கூட் டம் கூட் டமாய் எல்லாரும் போய் ,அங்கை வேலை செய்யிற  நேசி மாருக்கும் நோயாளியாளுக்கும் கரைச்சல் குடுக்கிறதெல்லாம் நல்லதென்று நினைக்கிறியளோ பாட்டி''
'' சரி, மனுஷன் வீடு திரும்பின பிறகு அவையின்ரை வீடடை எண்டாலும் கூட்டிக்கொண்டு   போயிருக்கலாமெல்லே!'' என்றவாறு குரலைச் சற்றுத் தாழ்த்திக்கொண்டார் பாட்டி.
'' என்ன ,பாட்டி இப்பிடியே எல்லாரும் அங்கை போனால் அந்த அம்மா வருத்தக்காரனைப் பார்க்கிறதா , விருந்தினரை கவனிக்கிறதா? ஏன்  பாட்டி மற்றவர்களுக்கு நாங்கள் தொல்லையாய் வாழ வேணும்.சொல்லுங்கோ  பாட்டி.''
'' அப்ப , ஒரு மனுஷருக்கு வருத்தம் வந்தா ,பார்க்கிற,சந்திக்கிற தில்லையோ?''
''பார்க்கலாம்,சந்திக்கலாம் பாட்டி. அம்மா, டெலிபோனில சுகநலம் எல்லாம் விசாரிச்சிவிட் டா.அவரின்ரை வருத்தம் மாறட்டும்,எல்லாரும் போய்,இருந்து கதைச்சு வருவோம். சரியோ பாட்டி.''
''சரியடா பேரா! நீ கார் ஓடிக்கொண்டு கதைக்கிறாய்.கவனமடா தம்பி,நான் போனை வைக்கிறன் .அடுத்தகிழமை கதைக்கிறேன்.''
''சரி,பாட்டி . ''என்றவாறே தொடர்பினை முறித்துக்கொண்டேன் நான் .


ঐঐঐঐঐঐঐঐঐঐঐঐঐঐঐঐঐঐঐঐঐ

No comments:

Post a Comment