[நீங்கள் வேறு கருத்துகள்/நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம்
.நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த
நம்பிக்கையையும் திறனாய்வு
செய்யவில்லை.இதில் கூறியுள்ள கருத்துக்களின் தவறுகளை விமர்சியுங்கள்!]
[-கந்தையா
தில்லைவிநாயகலிங்கம்]
இந்திய உப கண்டத்தை ஆண்ட ஆரியர்கள்,இந்தியாவில் ஒரு பகுதியை ஆண்ட சூரன் என்ற அரசனை அழித்த கதையை "சூர சம்ஹாரம்" என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். அவ்வாறு சூரனை அழித்த ஆரியக் கடவுளான சுப்பிரமனியனும், முருகனும் ஒருவரா?
இதற்கு மறுமொழி தரும் முன் ,"சூரன்" ,"அசுரர்" ,"சுப்ரமணியன்". "ஸ்கந்தன்","முருகன்" என்றால் என்ன என பார்ப்போம்.
சுரன் – வீரமிக்கப் போர் வீரன், சுற்றத்தான், அறிஞன்
"அசுர" என்றால் "வலிய" அல்லது "அதிகாரமுடைய" என்று பொருள்
"அசுரர்" என்றால் "தலைவர்"“மூர்க்கத்தனமான காட்டுமிராண்டி மக்களான ஆரியர்கள் இந்தியாவில் படையெடுத்தபோது பதிலுக்கு அவர்களைத் தாக்கியவர்களை [அரசனை]அசுரர்கள் என்று அழைத்தனர். புராணக் குறிப்புகளில் இவர்களை ஆரம்பத்தில் மனிதர்களாக்க் குறிப்பிட்டனர். பின்னர் எதிரிகள் என்கின்றனர். பின்னர் பூதாகரமான உருவங்களோடும் பூதங்களோடும் இணைக்கப்பட்டிருக்கின்றனர்.
மேலும் வரலாற்று ஆசிரியர்கள் பி.டி.சீனிவாச அய்யங்காரிலிருந்து பண்டித ஜவகர்லால் நேரு, விவேகானந்தர் உள்பட கூறியிருப்பது எல்லாம் - இந்த அரக்கர்கள், அசுரர்கள் என்பவர்கள் எல்லாம் திராவிடர்கள் தான்
முருகு--அழகு, இளமை
[முருகு விம்மிய மொய் குழலேழை (சீவ.)]
அக் கால தமிழர்கள் போர் மற்றும் காதலில் சிறந்து விளங்கிய, “இளமை’ கடவுளை வணங்கினர்.அக்கடவுளுக்கு இளமை, இளைஞன் எனும் பொருள்பட முருகு அல்லது முருகன் என்ற திராவிட பெயர்கள் வழங்கப்பட்டன.அக்கடவுள், வடஇந்தியர்கள் வணங்கிய போர்கடவுளான “ஸ்கந்தா’வோடு ஒத்து காணப்படுகிறது.
தொன்மையான பழந்தமிழ் சங்க இலக்கியத்தில் பரிபாடல் நூலில் முருகன் என்ற தமிழ்க் கடவுள் பெயர்தான் வழங்கப்பட்டிருக்கிறது.அழகானவன் என்ற அர்த்தத்தில் அவனை ஒரு மலைக்கடவுளாக வணங்குகிறது தமிழ்க்குடி
சுப்ரமணியன்,கந்தன்... இவையெல்லாம்...? அர்த்தம் தெரியுமா?
வடமொழிக் கதையை தான் இங்கே வாசித்துக்காட்ட வேண்டியிருக்கிறது.
"பார்வதியின் மீது மோகனம் பொங்குகிறார் பரமசிவன். பார்வதியை நெருங்குகிறார்.இப்போது வேண்டாம். நான் தயாரில்லை... என்கிறார்.இதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் தான் மட்டுமே தயாராகி விட்டார் சிவன்.ஆனால்... பார்வதியோ... சரியாக அந்த கணத்தில் தன் உடலை சற்று விலக்கிக் கொள்ள... பரமசிவனின் உயிர்த்துளிகள் கங்கைக் கரையோரம் படர்ந்திருந்த ஒரு நாணல் காட்டுக்குள் சென்று தேங்க...அப்படியே அது குழந்தையாக அவதரித்தது."
ஸ்கந்தன் என்றால்?ஆணுடைய உயிர்த்துளிகள் பெண்ணுடைய பாகத்தில் சேராமல் வழிதவறி விழுந்தால்... அதன் பெயர்தான் ஸ்கந்தன்.
பல இடத்தில் சிவனது வீரியம் ஸ்கலிதமானதன் பலனாக அக்குழந்தை உற்பத்தியானதால் அக்குழந்தைக்கு ஸ்கந்தன் என்று பெயர்.இவ்வாறு வால்மீகி இராமாயணத்தில் "சிவன் பார்வதியை புணர்ந்தது" என்று தலைப்பெயர் கொண்ட 36ஆம் சருக்கத்திலும், "குமாரசாமி உற்பத்தி" என்கின்ற 37ஆம் சருக்கத்திலும் காணப்படுகின்றது.
சுப்ரமணியர் என்றால்?--- உயர்ந்த பிராமணன்
ஆரம்பக் காலங்களில் இந்தியாவில் வடக்கு தெற்கு என்ற பாகுபாடுகள் இருந்தது கிடையாது. இந்தியா முழுமையுமே தமிழ் பேசும் மக்களே [திராவிட மக்களே] நிறைந்து இருந்தனர்.இதற்கு இந்து சம வெளி நாகரிகம் ஒரு எடுத்துக்காட்டு.அவர்கள் லிங்கமும் யோனியும் போன்ற உருவ அமைப்பை வணங்கியதிற்க்கான ஆதாரங்கள் கண்டு எடுக்கப்பட்டுள்ளன .மனித வாழ்வில் பாலியலும் ஒரு பகுதியாக இருப்பதால் இனப் பெருக்கத்தின் அவசியம் காரணமாக அப்படி அமைக்கப்பட்டிருக்கலாம் .அத்துடன் சிவன் அல்லது பசுபதி ,"ஆமுவான்/Ahmuvan" போன்ற கடவுளரும் இருந்துள்ளனர்.சிவா என்பது ஒரு திராவிட சொல் .அது சிவந்த அல்லது கோபத்தை குறிக்கும்."ஆமுவான்/Ahmuvan " முருகனை ஒத்த வடிவத்தை கொண்டுள்ளார்.அனால் அங்கு கோவில் இருந்தத்திற்கான ஒரு அடையாளம் ஒன்றும் இல்லை. ஆனால் காலங்கள் நகர நகர இந்தியா பல அரசியல் மாற்றங்களுக்கு உட்பட்டது, உட்பட்டு வட பகுதி முழுமையாக ஆரியர் வசம் சென்று விட்டது.
தொல்காப்பியர் நிலத்தைப் பற்றிக் கூறும்போது நிலத்தோடு தொடர்புடைய தெய்வங்களையும் இணைத்துக் கூறுகின்றார்.
"மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை, குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே"(அகத்.5)
ஆகவே பழந்தமிழ் மக்கள் வணங்கியது இயற்கையை!
இன்று தமிழில் கிடைக்கக் கூடிய மிகப் பழமையான நூல் தொல்காப்பியம். அது மிகப் பழமையான தமிழ்ச் சமுதாயத்தை படம் பிடித்துக் காட்டுகிறது
மாயோன், சேயோன் என்பவர்கள் அந்தந்த நிலத்தின் வீரர்களாகக் கூட இருந்திருக்கலாம்! நடுகல் வணக்கமே நாளடைவில் சிறு தெய்வ/பெருந் தெய்வ வணக்கமாக வளர்ச்சி பெற்று இருக்கிறது.
முதலில் இயற்கை என்பது நடுகல்லானது!
பின்னர் நடுகல் என்பது தெய்வம் ஆனது!
இயற்கை வழிபாட்டின் படி, சேயோன் = முருகன் = குறிஞ்சிக் கடவுள் ஆனான்!
திருமால்/ முருகன் = விஷ்ணு/ ஸ்கந்தன் அல்லர்
இவர்கள் நிலத்தின் தலைமக்கள்
இவர்கள் பூர்வகுடி-இயற்கை வடிவினர்;
பலமுகம்-மாயாஜால வடிவினர் அல்லர்
ஆரியக் கலப்புக்குப் பின்னரோ......
* முருகன்- ஸ்கந்தன் ஆனான்!
* திருமால்- விஷ்ணு ஆனான்!
* சிவன்- ருத்திரன் ஆனான்!
* கொற்றவை- துர்க்கை ஆனால்!
உதாரணமாக சுத்த தமிழ்க்கடவுளான முருகனை, பிராமணர்கள் கந்தனாக்கி விட்டார்கள். சுப்ரமண்யனாக்கி விட்டார்கள். ஏன்... பரமசிவன் - பார்வதியின் மகனாக்கி விட்டார்கள் சமஸ்கிருதக்காரர்கள்.அப்படியென்றால் முருகன் பரமசிவனின் மகன் இல்லையா? இல்லை என்பது தமிழ் பதில். ஆமாம் என்பது சமஸ்கிருத பதில்.
அடிமைப் படுத்தப் பட்ட மக்களை, வென்றவர்களின் கலாச்சாரத்திற்குள் உள்வாங்கிய வரலாறு தான், பிற்கால இந்து மதத்தின் வரலாறு ஆகும். தென்னிந்தியர்களின் நாட்டார் தெய்வங்களை எல்லாம், இந்து மதத்திற்குள் உள்வாங்கினார்கள். அவற்றிற்கு, சமஸ்கிருதப் பெயர்கள் சூட்டப் பட்டன.
உலக வரலாறு நெடுகிலும், ஆக்கிரமிப்பாளர்கள் கடைப்பிடிக்கும் தந்திரம் அது.
தமிழரின் நாட்டார் தெய்வமான முருகன், சுப்பிரமணியன் என்று பெயர் மாற்றி இந்து மதக் கடவுளர்களில் ஒருவரானார். அதனால் தான், தமிழரை விட அதிகமாக ஆரிய மயப் பட்ட, மலையாளிகளும், கன்னடர்களும், "சுப்பிரமணியக் கடவுள்" என்றே அழைக்கின்றனர். முருகனும், சுப்ரமணியனும் வேறு வேறு என்பதை, தமிழ் இந்துக்களும் உணர்வதில்லை.
தமிழில் உள்ள, முருகன், வள்ளிக் கதையானது, குறவர்கள் போன்ற பழங்குடி இனத்தவருக்கு உரியதாகத் தெரிகின்றது.
இன்றைக்கும், பிராமணர்களின் வர்ண சாஸ்திரத்தால் தாழ்த்தப்பட்ட சாதியினர் அல்லது கிராமபுற மக்கள் மத்தியில் "முருகன்", "வள்ளி" போன்ற பெயர்கள் பிரபலமாக உள்ளன. உயர் சாதியினர் அல்லது சம்ஸ்கிருத மோகம் கொண்ட மக்கள் மத்தியில் , அதற்கு மாறாக, "ஸ்கந்தன்", "சுப்பிரமணியன்" என்று சமஸ்கிருதப் பெயர்களை வைத்துக் கொள்கின்றனர்.
நமது காலத்தில் உள்ள ஆங்கில மோகம் போன்று, பல நூறு வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த தமிழர்கள், சம்ஸ்கிருத மோகம் கொண்டிருந்ததையும் மறுப்பதற்கில்லை.
சைவ சித்தாந்த மதத்தை வளர்த்த நாயன்மார்களும், சமஸ்கிருதமயப் பட்டிருந்ததை காணக் கூடியதாக உள்ளது. முருகக் கடவுளுக்காக இயற்றப் பட்ட பக்திப் பாடல்கள் எல்லாம், "கந்தர் அலங்காரம், கந்த சஷ்டிக் கவசம்" போன்ற பெயர்களில் உள்ளன.
முருகனுக்கு தமிழில் வள்ளி என்ற மனைவி இருந்தார். ஆரியத்தோடு சேர்ந்து ஸ்கந்தன் இந்திரனின் மகளான தெய்வானையும் மனைவியாகச் சேர்ந்து கொண்டார். இதன் மூலமே, தேவேந்திரனுடன் சொந்தமாகின்றார்!
இதன் பின்னராக சாதாரண மக்களுக்குப் புரியும்படியாக அண்ணன், தம்பி, தங்கை, அக்கா, மச்சினன் என தெய்வங்களுக்கிடையே உறவுமுறை உருவாக்கப்பட்டன. முருகனும், பிள்யைாரும் சிவனுக்குக் குழந்தைகள். திருமால் மைத்துனர் .......
சிவனது மூலம், சிந்து வெளி, மொகாஞ்சிதாரோ, ஹரப்பா நாகரீகங்களுடன், தொடர்பு பட்டது!
வேதங்களில் 'உருத்திரன்; என்று ஒருவரைப் பற்றிப் பேசப் படுகின்றது! இவரைச் சிவனுடன் சேர்த்துவிட்டார்கள்.
வடநாட்டில் முன்னர் இருந்த [ 'உருத்திரன்']சிவனுக்கு தென்நாட்டு முருகனை பிள்ளையாக்கி, முன்னர் குஜராத்திலிருந்த கிருஸ்ணனை மச்சானும் ஆக்கி விட்டனர்.
மன்னர்களின் ஆட்சிக்காலங்களில், மன்னரால் கொண்டாடப்படும் விழாக்களை, மக்கள் கொண்டாடுவதும் வழக்கம்! அவ்வாறே நாங்களும், சூரன்போர் கொண்டாடுகின்றோம்! ஆனால், பத்மாசுரன், ஒரு திராவிடன் என்பதை, நீங்கள் நிச்சயமாக மறுக்கமாட்டீர்கள்.அவன் உங்கள் உறவினர் .
அழகுக் கோலத்தில் இருந்த பெண்மணி மீது ஒருசமயம் ஆசை கொண்டார் காசியப முனிவர். அதன் விளைவாக, அவர் பத்மாசுரன்[மறுஜென்மத்தில் சூரபத்மனாகப் பிறந்தான் தட்சன்], சிங்கமுகன் என்ற மகன்களையும், அஜமுகி என்ற மகளையும் பெற்றார்.
அதன்பின் தன் தவறை உணர்ந்து மீண்டும் தவம் செய்யப் போய்விட்டார். இந்தப் பத்மாசுரனே உலகை அடக்கி ஆண்டான்.
அவனை சுப்பிரமணியன் என்ற உயர் பிராமணன் அல்லது ஸ்கந்தன் என்ற சிவனின் உயிர்த்துளிகளில் உண்டாகியவன் வதம் செய்தான் .
சூரனின் ஒரு பகுதி உடலை சுப்பிரமணியன் மயிலாக மாற்றி அதன் முதுகில் அமர்ந்தார் . ஒரு பகுதியை சேவலாக்கி தன் கொடியில் அமர்த்தி, தன் கைப்பிடியில் வைத்துக்கொண்டார்.
ஆரியக் கலப்புக்குப் பின்னரே முருகன்- ஸ்கந்தன் ஆனாதால்,இந்த தடு மற்றம். தமிழ் கடவுள் முருகன் இங்கு சமஸ்கிரத கடவுளாக மாற்றப்பட்டுவிட்டர் .அந்த மாற்றத்தின் பின்பே ஸ்கந்தன் இந்த திராவிடனான சூரனை கொன்ற புராண வரலாறும் இந்திரன் தன் மகள் ஸ்கந்தனுக்கு தெய்வானையை கொடுத்ததும் முருகனுடன் இணைக்கப்படுகிறது.
“அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி“ என்ற மேற்கோளை வைத்து அணுவை அப்போதே துளைத்தாகிவிட்டது என்று கருதமுடியாது. அப்பொழுது அணு என்ற சொல்லின் கருத்து வேறு. இப்பொழுது வேறு.
முருகன் என்ற சொல்லின் பொருள்அக்காலத்தில் வேறு. சமஸ்கிரத சுப்ரமணியத்துடன் சேர்ந்த பிறகு இக்காலத்தில் வேறு..அதனாலேயே இந்த தடு மற்றம்.
சொற்கள் காலத்தால் திரிபுபடுவது, பொருள் மாறுபடுவது உண்டு! நாற்றம் என்பது நறு நாற்றத்தை, நறு மணத்தைக் குறிக்கிற சொல்லாக இருந்து; பிறகு முடை நாற்றத்தைக் குறிக்கிற சொல்லாக மாறிப்போனது. காலமாற்றத்தால் அப்படிப் பொருள் திரிந்து போதல் இயல்பானதே.
{தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்}
Compiled by:
Kandiah Thillaivinayagalingam]
ReplyDeleteஎனது நீண்ட கால சந்தேகத்தினை தீர்த்து வைத்துள்ளீர்கள்.நன்றிகள்.
aazhamaana thakavalkal.thodaraddum.
ReplyDeleteithu oru puthiya muyarchiyin velippadu.valarattum.
ReplyDeleteபாண்டியனின் சந்தேகத்தினை தீர்த்த தருமிக்கு பொற்கிழி போன்று வேந்தன் தர விரும்பியிருந்தாலும் நக்கீரனை நினைத்தால்....
ReplyDeleteசிவன் - எமது பாடலில் என்ன குறை கண்டீர்? சொல்லிலா? பொருளிலா?
Deleteநக்கீரர் - சொல்லிலிருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். பிழை பொருளில்.
சிவன் -
"கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே."
நக்கீரர் - இப்பாடலின் பொருள்.
சிவன் - புரியவில்லையா?
தலைவன் தலைவியின் கூந்தல் மணத்துக்கு இணையான மணம் வேறு மலர்களில் எங்கும் உண்டா? என்று தும்பிடம் வினவுவது போல இப்பாடலை அமைத்திருக்கிறேன்.
நக்கீரர் - பாடலின் உட்பொருள்?
சிவன் - பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயெ மணம் உண்டு என்பது.
நக்கீரர் - ஒருபோதும் இல்லை பெண்களில் கூந்தலுக்கு எக்காலத்தும் இயற்கையில் மணம் இல்லை. வாசனைத் திரவியங்களையும், மலர்களையும் தம் கூந்தலில் சூடுவதாலேயே அவர்கள் மணம் பெறுகின்றனர். அன்றி கூந்தலுக்கு இயற்கையில் ஏது மணம்?
சிவன் - ஓ உயர்ந்த குலப் பெண்களுக்கு?[ஆண்டவனே தன படைப்பில்- பிறப்பால் உயர்வு? தாழ்வு? ஏற்படுத்துகிறாரோ?சற்று சிந்திக்க வேண்டியது ?]
நக்கீரர் - அவர்களுக்கும் தான்.
சிவன் - தேவ குலப் பெண்களுக்கு?
நக்கீரர் - நான் தினமும் வணங்கும் சிவனுக்கு அருகே அமர்ந்து காட்சியளிக்கிறாளே. உமையம்மை அவளுக்கும் கூட கூந்தல் செயற்கை மணம் தான்.
சிவன் - சினமுற்ற சிவன் தன் நெற்றிக்கண்ணைத் திறந்தவராக, நக்கீரா நன்றாப் பார் என்கிறார்.
நக்கீரர் - சற்றும் தன் கொள்கையில் பின்வாங்காதவராக நக்கீரர் எதற்கும் அஞ்சாது. “ நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே“ என்றுரைக்கிறார்.
இந்த நக்கீரரை எனக்கு நன்றாக பிடிக்கும் .இவர்கள்தான் எமக்கு எமது சமுகத்திற்கு உடனடியாக வேண்டும் .மனுதர்மத்தையும் வர்ணத்தையும் கர்ம கொள்கையையும் நிலை நாட்ட நக்கீரனை எரித்த சிவனல்ல?சிவனின் பாட்டை ,படித்து அதன் உள் விளக்கத்தை அறியாமல் ,அவனை, அவர் முன்னால் மண்டி இட்டு வணங்கி ,தனது சுய நலத்திற்க்காக ஒரு பாட்டை பெற்ற[sycophantic kowtowing to authority] தருமியும் அல்ல .
ஆகவே நக்கீரனை நினைத்தால்....பயப்படாதிர்கள் ...பெருமை கொள்ளுங்கள் !!!! அப்படி ஒரு நக்கீரன் வந்து, தக்க காரணங்களுடன் பிழை இருந்தால் ,பிழை பிடித்து, எம்மை திருத்தினால் நாமும் சரியான பாதையில் போகலாம் அல்லது வளரலாம் .எம்மை வளர்க்கும் அந்த பரிசு தான் நாம் எதிர் பார்ப்பாக இருக்கட்டும். சரியா நண்பரே ??
தமிழர்களை மதம் மாற்றுவதோ அல்லது ஒரு நம்பிக்கையினுள் விழச்செய்வது மிகமிக இலகுவானது.நான் ஒரு தெருவில் செல்லும்போது அங்கே நீண்ட காலமாக இருக்கும் ஒரு கல்லினை விழுந்து வணங்கினேன் எனில் அதனை பார்த்தவர்கள் முதலாய் அக்கல்லினை வணங்குவதற்கு பெரும் சனமே திரண்டு வரும்.அவர்களுக்குள் அக்கல் தொரர்பாக புதுப்புது கதைகளும் உருண்டு வளரும்.ஆரியர்களுக்கும் நம்ம சனம் நல்ல வசதியாகவே கிடைத்திருக்கிறது.
ReplyDeleteஅதானே பாத்தேன்,தமிழ் கடவுளுக்கு எப்பிடி 2 பொண்சாதி எண்டு!
ReplyDeleteசூர சங்காரத்தின்போது சூரனின் ஒரு பகுதி உடலை சுப்பிரமணியன் மயிலாக மாற்றி அதன் முதுகில் அமர்ந்தார் . ஒரு பகுதியை சேவலாக்கி தன் கொடியில் அமர்த்தி, தன் கைப்பிடியில் வைத்துக்கொண்டார்.அன்றிலிருந்தே வாலிபன் முருகனுக்கு மயில்வாகனம் கிடைத்தது.அப்படியாயின் குழந்தை முருகன் மாம்பழத்திற்காக மயிலேறி உலகை சுற்றினார் என்று புராணம் கூறுகிறதே.இது ஒன்றே காணுமே முருகன் வேறு சுப்ரமணியன் வேறு என்பது.
ReplyDeleteமானமுள்ள தமிழர் எனில் சூரன் போர் கோவிலில் நடைபெறுவதனை தடுக்கவேண்டும்,கலந்துகொள்வதனை தவிர்க்க வேண்டும். செய்வார்களா? நாளைக்கு பிரபாகரன் கொல்லப்படடதனை கொண்டாடினாலும் அரோகரா போடுவார்கள்.நெஞ்சு பொறுக்குதில்லையே.....
ReplyDeleteயுத்தம் என்பது சம்பந்தப்படடவருடன் முடிந்ததில்லை. இக்காலத்திலேயே வகை தொகையின்றி கேட்ப்பாரின்றி வாழு சிறுபான்மையினரை கொத்துக் கொத்தாக கொன்றொழித்த அதிகார வர்க்கம் அன்று எத்தனை ஆயிரம் தமிழர்களை இராம யுத்தத்திலும் , சுப்பிரமணிய யுத்தத்திலும் அழித்திருப்பர்.இன்றய அழிப்புகளுக்கு உணர்ச்சிவசப்படும் தமிழர் அன்றய அழிப்புகளை அவர்களுடன் சேர்ந்து கொண்டாடுவது நகைப்புக்கு இடமானது.
ReplyDeleteமுருகன் மகிந்தா வேடத்தில் வந்து பிரபாகரனை அழித்தார் என்றால், அதனையும் கோவிலில் கொண்டாடுவர்
ReplyDelete