விடியலை தேடும் விழிகள்



மீண்டும் மீண்டும்
தழுவி கொள்ளும் துன்பங்களை
மனதோரம் சுமந்துவிடாது
கரைத்துவிட்டு
புதிய விடியலில்
புது உலகம் காண்போம் வாரீர்
மனதில் நம்பிக்கை இழந்தால்
தோல்விகள் உரசி கொண்டு
வெற்றிகளை  கனிய  விடுவதில்லை
இரவை நீக்கி
புதிய எண்ணங்களை உருவாக்கி
புதிதாய் பதிப்போம்
புதிய பாதையில் வாரீர்
மனதில்பட்ட காயங்கள்
வலிகள்  நீக்கி
உணர்வுகளையும் உக்க செய்து
கோபங்களை குறைய செய்து
புதிய சிந்தனையை உருவாக்கி
நெஞ்சம்தனை ஆறுதல் அடைய செய்து
புதிய பாதையில்
புது வழி போடுவோம்
வாரீர்!
ஆக்கம்: காலையடி,அகிலன்.

No comments:

Post a Comment