இது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல என்று அரசியல் விமர்சகர் “சோ” கூறினார்.
காரணம் கேட்டபோது, இனி எம் ஜி ஆரா? கருணாநியா? என்று தமிழக அரசியல் சொல்லும் என்றார்.
திமுக-வும் ஆதிமுக-வும் மக்கள் விரும்புகிற கட்சி அல்ல.ஆனால் அவர்களுக்கு ஓட்டுபோட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
ஒரே ஒரு ஓட்டல். இட்லியும், தோசையும் மட்டும் இருக்கு.எதையாவது ஒன்றை தின்றுதான் ஆகவேண்டும்.
இட்லி சலித்தால் தோசை, தோசை சலித்தால் இட்லி
இந்த இரண்டு பெரிய திராவிட கட்சிகளை மக்கள் விரும்புவதில்லை.
விட்டுவிட வேறுவழியும் இல்லை. ஆனால் வாய்ப்பு கிடைத்தால் “வச்சிசெய்வாங்க”
ராஜிவ்காந்தி மறைந்தபோது திமுக-வுக்கு படுதோல்வி கொடுத்தார்கள்.
ஊழலில் ஜெ-சிக்கியபோது அதிமுக-வுக்கு படுதோல்வி கொடுத்தார்கள்.
ஒரு சரியான ஆளை தமிழ்நாடு தேடிகொண்டிருக்கிறது.
அதுவரை இந்த திராவிட கட்சிகளை தவிர யாரையும் தமிழ்நாடு அனுமதிக்காது.
காரணம், வருகிறவன் திருடனாக இருப்பான் என்கிற சந்தேகத்தால், இவர்களே இருந்துவிட்டு போகட்டும் என்று நினைக்கிறார்கள்.
விஜயகாந்த் அரசியலுக்கு வந்தார்.வித்தியாசமாக வரவில்லை, கழகம் என்கிற பெயரில்தான் அவரும் வந்தார். ஊழலை ஒழிப்பேன் என்றார்.ஆரம்பத்தில் மக்கள் கொஞ்சம் நம்பினார்கள். ஊழலை ஒழிப்பேன் என்றவர், அவர் கட்சியில் ஊழல்வாதிகளையே சேர்த்துக்கொண்டார்.
MLA, MP பதவிகளுக்கு
‘ நல்லவன்’ என்கிற தகுதியை அவர் முன்வைக்கவில்லை.பணம் இருக்கிறதா, செல்வாக்கு இருக்கிறதா…இதையே முக்கியமாக பார்த்தார். பலகோடி ஊழல் செய்த மற்ற கட்சி தலைவர்களையும் தன்கட்சியில் சேர்த்துக்கொண்டார்.
ஊழல் ஒழிப்பு வெற்று கோஷமானது.
இதோ இன்று மக்களால் ஓரங்கட்டப்பட்டார்.🏃🏾🏃🏾
அன்புமனி ராமதாஸ் அறிவுள்ள மனிதர். ஊழலுக்கு எதிரானவராகவும்,
போதைபழக்கத்திற்கு எதிரானவராகவும் தன்னை காட்டிகொண்டார்.
ஒருமுறை
‘ரஜினிகாந்த்’ குடிகாரர் என்று பெரிய மாநாடு மெரினாபீச்சில் போட்டார்கள். ரஜினியை தரக்குறைவாக விமர்சித்தார்கள்.
மாநாடு முடிந்தது.மூடை மூடையாக காலிகுவார்டர் பாட்டில் மெரினாபீச்சில் காலையில் அள்ளப்பட்டது.
பேச்சிக்கும் செயலுக்கும் சம்மந்தமே இல்லை.
ஊழலுக்கு எதிரானவர்கள் என்று சொல்லும் அவர்களின் MLA, MP, தொண்டர்களை வருடங்களாக மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
பேச்சிக்கும் செயலுக்கும் சம்மந்தமே இல்லை.
ஊர்ஊராக பிரச்சாரம் செய்கிறார்கள்,
ஆனால் மக்கள் நம்பமாட்டார்கள்.
சீமான் அருமையான பேச்சாளர்.
ஒருமுறை நாட்டுநாய் வளர்க்கசொல்லி தொண்டைகிழிய பேசினார், வீட்டில் வளர்ப்பதோ வெளிநாட்டுவகை நாய்.தமிழ் தமிழ் என்று ஊருக்கு உபதேசம் செய்வார்கள்.
பேச்சிக்கும்,
செயலுக்கும் சம்மந்தமே இருக்காது.தலைகீழாக நின்றாலும் இவர்களின் முதல்வர் கனவு பலிக்காது.
இப்பொழுது ரஜனியும், அவரைத்தொடர்ந்து கமல்ஹாசன் அரசியலுக்குள் குதித்துள்ளனர். சினிமாவில் டைரக்டர் கொடுத்த அரசியல் வசனங்கள் இவர்களின் சொந்தக் கருத்துக் களாக அமைந்துவிடாது. ஒரு நாள் கிடைக்கும் பிச்சைக் காசுக்காக 5 வருடங்களை ஊழலுக்கு அடகு வைக்காமல் இவர்களை இனம்காணவேண்டியவர்கள் தமிழக வாக்காளர்கள் மட்டுமே!
உண்மையான,
நேர்மையான நல்ல மனிதனை, தமிழகம் கண்டுபிடிக்கும்போது,
ஊரை ஏமாற்றிய கூட்டம் குப்பைத்தொட்டியில் வீசப்படும்.
நல்லவன் கோபுரத்தில்உட்காரவைக்கப்படுவான்.அந்த நல்லநாள் மிக விரைவில் வந்துவிட தமிழக மக்கள் வாக்களிக்க வாழ்த்துகிறோம். [தொகுப்பு;கயல்விழி , பரந்தாமன்.]
🤼🤼🤼🤼🤼🤼🤼🤼🤼🤼🤼
No comments:
Post a Comment