மூளைக்குவேலை ....... சில நொடிகள்!



1🐞 . எனக்கு அம்மா இருக்கிறார், அப்பா இருக்கிறார் ஆனால் நான் அவர்களின் மகன் இல்லை. அப்படியாயின்  நான்யார் ?     
 2🏡 . நான்  என்னுடைய  வீட்டை  விட உயரமாய்ப் பாய்வேன். எப்படி?
3🔥 . மயானத்தில் பீட்டரை எரிக்க அனுமதிக்கவில்லையாம். ஏன்?
4𝍐 . சோதனைக் கேள்வியள் நல்ல சுகம் என்றாயே, அப்ப ஏன் பெயில் விட்டாய்?
5🌇 . நான் 50 வது மாடியில் இருந்து கீழை விழுந்தும் ஒரு காயமும் இல்லை. எப்படி?
6🍎 . எனது காதலியை ஒரு டொக்டரும் காதலிப்பதால் நான் அவளுக்கு தினமும்  அப்பிள் கொடுப்பேன். ஏன்?
7🌧 . கொட்டுற மழையில் அற நனைந்தும் ஒரு தலை முடிதானும் நனையவில்லை. எப்படி?
8 ⚁. குருடனுக்குத் தெரிவது, செவிடனுக்குக் கேட்பது; அதை உண்டால் மரணம் நிச்சயம். அது என்ன?
9🏇 .ஒரு குதிரைப் பயணி  ஹோட்டலுக்குசனியில் வந்து சனியிலேயே  திரும்பினான். அவன் 3 நாட்கள் தங்கினான். எப்படி?
10🚍 .அரைவாசித் தூரத்தை  40 வேகத்திலும், மிகுதியை 60 வேகத்திலும் சென்றால், எனது சராசரி  வேகம் என்ன?
விடைகள்:
1 . மகள். 2 .வீடு பாயவே மாட்டாதே. 3 . இன்னும் சாகாததால். 4 .கேள்வி விளங்கினது, பதில்தான் தெரியாது. 5 .விழுந்தது உட்பக்கம். 6 . An apple a day , keeps the doctor away . 7 . மொட்டை. 8 . வெறுமை. 9 . குதிரையின் பெயர் சனி. 10 . 48  
                                                                    --- செ.சந்திரகாசன்

சித்தர் எனப்படுபவர்கள்...


சித்தர்கள் "சித்தர்" என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள். இயமம், நியமம், ஆதனம்,பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு வகையான யோகாங்கம் முலம் எண் பெருஞ் சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள் ஆவார்.


எட்டு வகையான யோகாங்கம் அல்லது அட்டாங்க யோகம்
இயமம் - கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, பிறர் பொருள் விரும்பாமை, புலன் அடக்கம் என்பனவாம்.
நியமம் - நியமமாவது நல்லனவற்றைச் செய்து ஒழுக்க நெறி நிற்றல்.
ஆசனம் - உடலைப் பல்வேறு கோணங்களில் நிறுத்தி, பயிற்சி செய்தல்.
பிராணாயாமம்-பிரணாயாமமாவது சுவாசத்தை கட்டுப்படுத்தல். அதாவது பிராண வாயுவைத் தடுத்தல், :வாயுவை உட்செலுத்துதல், வெளிச்செலுத்துதல்.
பிராத்தியாகாரம்-புலன்கள் வாயிலாக புறத்தே செல்லும் மனத்தை உள்ளே நிறுத்திப் பழகுதலே :பிரத்தியாகாரமாம்.
தாரணை - தாரணை என்பது பிரத்தியாகாரப் பயிற்ச்சியால் உள்ளுக்கு இழுத்த மனத்தை நிலைபெறச் செய்தல்.
தியானம் - தியானம் என்பது மனதை ஒருபடுத்தி ஒரே சிந்தையில் ஆழ்தல்.
சமாதி -சமாதி என்பது மனதை கடவுளிடம் நிலைக்க செய்வது ஆகும்.
 ஆனால் இவற்றிற்கு அருகில்கூட நெருங்க முடியாத ஆசாமிகள் பலர் இன்று தங்களைச் சித்தர்கள் என்று விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
சித்தர்கள் இயல்புகள்
சித்தர்கள் பொது வாழ்க்கை நெறிக்கு உடன் படாதவர்களாகத் தங்களுக்கென்று தனி வாழ்வியல் வழி முறைகளை உருவாக்கி நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்த இயற்கையோடு இயற்கையான வாழ்க்கை வாழ்ந்தவர்கள் ஆவார்.
ஆனால் மக்களின் பணத்திற்காகவும், நகைக்காகவும் தங்க ஆசனங்களில் அமர்ந்து இங்கு சித்தர்கள் என தங்கள் அறிமுகம் செய்வோர் உண்டு.
சித் - அறிவு, சித்தை உடையவர்கள் சித்தர்கள். நிலைத்திருக்கும் பேரறிவு படைத்தவர்கள் சித்தர்கள். சித்தர்கள் என்றால் நிறைமொழி மாந்தர் என்னும் அறிஞர்கள் என்றும் பொருள்படுவதாக பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன. மருத்துவத்தோடு யோகம், சோதிடம், மந்திரம், இரசவாதம் போன்ற அரிய அறிவியலையும் தந்தவர்கள் சித்தர்கள் என்று அழைக்கப்பட்டனர்

சித்தர்கள் இயற்கையை கடந்த (supernatural) சக்திகள் உடையவர்கள் என்று சிலர் இயம்புவதுண்டு, எனினும் இவர்கள் உலகாயுத (material) இயல்புகளை சிறப்பாக அறிந்து பயன்படுத்தினர் என்பதுவே தகும். இவர்களின் மருத்துவ, கணித, இரசவாத, தத்துவ, இலக்கிய, ஆத்மீக ஈடுபாடுகள் வெளிப்பாடுகள் இவர்களின் உலகாயுத பண்பை எடுத்தியம்புகின்றன. ஆயினும் இவர்கள் வெறும் பௌதிகவாதிகள் (materialists) அல்ல. மெய்ப்புலன் காண்பது அறிவு என்பதிற்கிணங்க, உண்மை அல்லது நிஜ நிலை அடைய முயன்றவர்கள் சித்தர்கள்.
பரமாத்மா எங்கும் தனியாக இல்லை. நமது உடம்பு தான் பரமாத்மாவின் இடம் ஆதலால் கடவுளைத்தேடி எங்கும் அலைய வேண்டாம். உடம்பைப் பேணுவதே கடவுட்பணி, உடம்பினுள்ளேயே பரமாத்மாவைக் கண்டு மகிழ்ந்திரு என்பதே  சித்தர் கொள்கை.
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆

யாருமில்லாத சாலையில்....



யாருமில்லாத சாலையில்
இயற்கையின் சிரிப்போ பூத்திருக்க
ஏறிடும் எண்ணம் வாடிநிற்க
சேரும் இடம் நானறியாது
வேர்த்திருக்க
என்  பார்வை  முழுவதும்
அவள் விம்பங்கள் சூழ
அவளோ காதல் தேனாய் தென்பட
நான் அவள் மீதும்
அவள் என் மீதும்
காதல் சாரல்களின்
தூறல்கள்சிந்தியே
தனிமையை தூரம்மாக்கி
இணைபிரியாத
இனிமையில் நடந்து செல்ல
காதல் ஒளி
இருள் மறைத்து போனதால்
குளிர்ந்த காதலும்
பனி சிதறல்களை போல
சிதறிபோக செய்துவிடவே
யாருமில்லாத சாலையில் நானே..

- காலையடி , அகிலன் 

சினிமா செய்திகள்



‘’பரியேறும் பெருமாள் ‘’
🎞சாதி வெறி கொண்டு தலித் அரசியல் பேசும் சினிமாக்களில் மாரி செல்வராஜ் யாரும் அடையாத ஒரு புதிய உச்சத்தை தொட்டிருக்கிறார். பரியேறும் பெருமாள் படம் அனைவருக்கும் ஒரு மிகப்பெரியாக முன் உதாரணமாக இருக்கும்
பரியேறும் பெருமாளை செதுக்கி உருவாக்கியமாரி செல்வராஜ் ஏற்கனவே இயக்குனர் ராமிடம் 11 வருடங்கள் இருந்திருந்தாலும், அவருடைய வரவு தமிழ் சினிமாவில் ஒரு புதிய தொடக்கத்தை உருவாக்கியிருக்கிறது.
பரியேறும் பெருமாள் மாரி செல்வராஜை புகழ்ந்து  பாரதிராஜா மட்டுமல்ல சிவகார்த்திகேயன் , ரஜினிகாந்த் ஆகியோரும் பாராட்டியுள்ளனர்.
சர்வதேச படவிழாவிலும் பரியேறும் பெருமாள் பங்கேற்க உள்ளது. [pariyerum perumal ]
'விஸ்வாசம்'

🎞இயக்குனர் சிவா இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் 'தல அஜித்தின் 'விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு  முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அஜித், இயக்குனர் எச்.வினோத் இயக்கும் அடுத்த படத்திற்கான தோற்றத்திற்கு இன்னும் சில நாட்களில் மாறவுள்ளார். அஜித்-வினோத் இணையும் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
வரும் பொங்கல் அன்று 'விஸ்வாசம்' படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருக்கிறது.

 அஜித், நயன்தாரா, தம்பி ராமையா, விவேக், ரோபோசங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்து  ஐந்து பாடல்கள் எடிட்டிங் பணி முடிந்தவுடன் அவர் பின்னணி இசைப்பணியை தொடங்கிவிடுவார் என்றும் கூறப்படுகிறது. [viswasam]

''வந்தா ராஜாவாதான் வருவேன்''

 🎞டோலிவுட்டில் 2013ம் ஆண்டு பவன் கல்யாண் நடிப்பில் வெளியான 'அட்டாரினிட்டிக்கி தாரேதி' சூப்பர்  ஹிட்டானது. இதனை சுந்தர் சி தமிழில் ரீமேக் செய்து வருகிறார். இதில் சிம்பு கதாநாயகனாக நடிக்கிறார்.இந்த படத்தை லைகா புரொடக்ஷன் தயாரிக்கிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை லைகா புரொடக்ஷன் தனது டிவிட்டரில் இன்று வெளியிட்டிருக்கிறது. இந்த படத்திற்குவந்தா ராஜாவாதான் வருவேன்என பெயரிடப்பட்டிருக்கிறது.
இப்படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.
[vantha rajavaththaan varuven]
📽📽📽📽📽📽📽📽📽📽📽📽📽📽📽📽📽📽
cinema news