அன்னை தமிழ்



அன்னை தமிழ் மீது
ஆதரவாய்ச் சாய்ந்துவிட்டால் 
மீண்டும் எழும் எம்தமிழ்
ஆதரவு இல்லை என்றால்
மீண்டும் அழிவின் மடியில் சாய்ந்து
மாண்டு போவாள் எம்தமிழ்
தமிழ் அன்னையின் வித்துக்களை
மனதில் ஊன்றி விட்டால்
எம் கரங்களில்
தமிழ் அன்னை குழந்தையாக தவழ்வால்
இல்லையெனில்
 தமிழ் அன்னை தொலைந்து போவாள்
ஆனந்தமாக தமிழ் அன்னையை வளர்த்து
அற்புதமான சிந்தனையில்
தமிழ் முத்துகளை பொருத்தி
செயல்களை 
அழகாக உருவாக்கிவிட்டால்
உலகம்மெங்கும்
 தமிழ் அன்னை நலம் கொள்ள
தமிழ் அன்னையும்
அழகாக வளந்துவிட
நிலையான வாழ்வும் கொண்டு
நம்மை வாழ வைப்பாள்.

:காலையடி,அகிலன்.

No comments:

Post a Comment