இந்த வருடத்தில் அதிக வசூல் எது?
இந்த 2018 வருடம் பிறந்து 9 மாதங்கள் முடியப்போகிறது. இவ்வருடம் இதுவரை வெளியான
ஓப்பனிங் வசூலில் டாப் 5 இடத்தில் எந்த படங்கள் இருக்கிறது என பார்க்கலாம்.
இதில் சீமா , காலா , விஸ்ப ரூபம் , தமிழ் படம் ஆகிய திரைப்படங்களில் முதலிடத்தில் உள்ளது
சிவகார்த்திகேயன் நடித்துள்ள சீமராஜா படம் தான்.
தனுஷ் படத்தில் அனு
இமானுவேல்!
தனுஷ் இயக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க நடிகை அனு இமானுவேல்
ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இந்த படத்தில் நாகார்ஜூனா, சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், அதிதிராவ் உள்பட பலர் நடிக்கின்றனர்.
இவர் விஷாலுடன் துப்பறிவாளன் படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
வருகிறது சில்க் சுமிதா வின் கடைசிப் படம்
கவர்ச்சி நடிகை சில்க் சுமிதா கடைசியாக நடித்த ராக தாளங்கள் திரைப்படத்தை
இயக்குநர் திருப்பதி ராஜன் ரிலீஸ் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இவரது வாழ்க்கை குறித்து பாலிவுட்டில் திரைப்படம் வெளியானது
குறிப்பிடத்தக்கது. இவர் அறிமுகம் செய்த இயக்குநர் திருப்பதி ராஜன் இயக்கத்தில்
சில்க் சுமிதா கடைசியாக நடித்த ராக தாளங்கள் என்ற திரைப்படம் வெளியாகம் இருந்தது.
அப்போது சென்சாரில் ஏற்பட்ட பிரச்சனையால் இந்த திரைப்படம் வெளியாகவில்லை.
தற்போது இந்த திரைப்படத்தை இயக்குநர் திருப்பதி ராஜன் வெளியிட முடிவு
செய்துள்ளார்.
ஆமா! அன்று காட்டத் தடையானவை இன்று தடையில்லைத்தானே !
2018 விருது: யாருக்கு என்னென்ன விருது?
2018 சைமா விருதுகள் வழங்கும்
விழா துபாயில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளை சேர்ந்த
கலைத்துறை கலைஞர்கள் பங்கேற்றனர்.
சைமா விருது பட்டியல் இதோ...
வாழ்நாள் சாதனையாளர் விருது: பி.சுசீலா
சிறந்த படம்: விக்ரம் வேதா
சிறந்த இயக்குனர்: அட்லீ (மெர்சல்)
சிறந்த நடிகர்: சிவகார்த்திகேயன் (வேலைக்காரன்)
சிறந்த நடிகர்: மாதவன் (விக்ரம் வேதா)
சிறந்த நடிகை: நயன்தாரா (அறம்)
சிறந்த நடிகை: அதிதி பாலன் (அருவி)
சிறந்த துணை நடிகர்: எம் எஸ் பாஸ்கர் (8 தோட்டாக்கள்)
சிறந்த துணை நடிகை: சிவதா (அதே கண்கள்)
சிறந்த வில்லன் நடிகர்: எஸ் ஜே சூர்யா (மெர்சல் & ஸ்பைடர்)
சிறந்த இசையமைப்பாளர்: ஏஆர் ரஹ்மான் (மெர்சல்)
சிறந்த பாடலாசிரியர்: விவேக் (ஆளப்போறான் தமிழன் - மெர்சல்)
சிறந்த பின்னணிப் பாடகர்: சித் ஸ்ரீராம் (மெர்சல்)
சிறந்த பின்னணிப் பாடகி: லக்ஸ்மி சிவனேஷ்வரலிங்கம் (போகன்)
சிறந்த அறிமுக நடிகர்: வசந்த் ரவி (தரமணி)
சிறந்த அறிமுக நடிகை: அதிதி ராவ் ஹைத்ரி (காற்று வெளியிடை)
சிறந்த அறிமுக இயக்குனர்: அருண் பிரபு புருஷோத்தமன் (அருவி)
சிறந்த காமெடி நடிகர்: சூரி (சங்கிளி புங்கிளி கதவ தொற)
சிறந்த ஒளிப்பதிவாளர்: ரவி வர்மன் (காற்று வெளியிடை)
வருகிறது 'வடசென்னை'
வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்து
தனுஷ் நடித்துள்ள வட சென்னை திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இதில்
ஐஸ்வர்யா, ஆண்ட்ரியா,
சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சார்லி சாப்ளின் 2
சக்தி சிதம்பரம் இயக்கித்துல, பிரபு, பிரபு தேவா, காயத்ரி ரகுராம், அபிராமி, மோனல நடிச்சிருந்த
படம் 'சார்லி சாப்ளின்'. 2002ம் ஆண்டு தமிழ் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, பெங்காலி என ஆறு மொழிகள்ல
வெளியான இந்த குடும்ப சென்டிமென்ட், நகைச்சுவையாக இருந்ததாலா சூப்பர் ஹிட்டாச்சு.
இப்ப சார்லி சாப்ளின் 2ம் பாகத்தை எடுத்துட்டு
வற்றாரு இயக்குநர் சக்தி சிதம்பரம். இந்த படத்தில் பிரபு தேவா, நிக்கி கல்ராணி, அடா சர்மா ஆகியோர்
நடிச்சுருக்காங்க.
ரஜினி - 2.0
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் பெரிய எதிர்பார்ப்பை
ஏற்படுத்தி உள்ளது. ரூ.542 கோடிக்கு மேல் செலவில்
எடுத்துள்ள இந்த படம் நவம்பரில் திரைக்கு வருகிறது. படத்தின் டிரெய்லர் நேற்று
வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. ஹாலிவுட் தரத்தில் இருந்ததாக
ரசிகர்கள்உற்சாகம் அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment