செக்க சிவந்த
வானம்:
சிறந்த பொழுதுபோக்கு படமாக ''செக்க சிவந்த வானம் இயக்குனர் மணிரத்தினத்தின் படைப்புகளில்
மீண்டும் ஒரு ரத்தினம் என்று கூறலாம். கதையும், வசனங்களும் ஒத்துப் போய் காட்சிகளும் நன்றாக அமைந்து
இருந்தன. கேங்ஸ்டர் படமாக, தற்போதைய இளைய
சமுதாயத்தினருக்கு ஏற்ற வகையிலும் தன்னால் படத்தை கொடுக்க முடியும் என்பதை
இயக்குனர் மணிரத்தினம் நிரூபித்துள்ளார்.
பரியேறும்
பெருமாள்:
நீண்ட நாட்களுக்குப்
பின்னர் தமிழில் வந்த அனைவராலும் பாராட்டப்படும் படமாக ''பரியேறும் பெருமாள்'' அமைந்துள்ளது. சமூகத்தில் இன்னும் நீடிக்கும் அவலங்கள் குறித்து இயக்குனர்
மாரி செல்வராஜ் அழகாக கூறியுள்ளார். அவருக்கு இந்தப் படம் முதல் படம்தானா என்று
கூறும் அளவிற்கு எந்த மோதல்களும் ஏற்படாமல் கதையை அழகாக கூறியுள்ளார். இயக்குனர்
பா. ரஞ்ஜித் தயாரித்துள்ள இந்தப் படம் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளான படமாக
திகழ்கிறது.
மேற்குதொடர்ச்சி
மலை:
மேற்கு தொடர்ச்சி மலையில்
நிலம் இல்லாமல் அவதிப்படும் தொழிலாளர்கள் பற்றிய கதை. இந்தப் படத்தின் காட்சிகள்
அழகாக படமாக்கப்பட்டு இருக்கும். காணி நிலம் மனிதனுக்கு எவ்வளவு அவசியம் என்பதை
இந்தப் படம் அழகாக வெளிப்படுத்தி இருக்கும். லெனின் பாரதி இந்தப் படத்தை இயக்கி
இருக்க, நடிகர் விஜய் சேதுபதி
தயாரித்து இருந்தார்.
தமிழ் படம் 2:
சி.எஸ். அமுதன்
இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் மீண்டும் நடிகர் சிவாவே நடித்து இருந்தார்.
தமிழ் படம் முதல் பாகத்துடன் ஒப்பிடுகையில் இரண்டாம் பாகத்தில் நகைச்சுவைக்கு
பஞ்சம் என்றுதான் கூற வேண்டும். ஆனால்,
பாக்ஸ் ஆபீசில் நன்றாக
செய்து இருந்தது.
சாமி 2, விஸ்வரூபம் 2:
இந்த இரண்டு படங்களும்
எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு
வெளிவந்த சாமி படம் முதல் பாகம் செய்த மேஜிக்கை செய்ய இந்தப் படம் தவறிவிட்டது.
பாக்ஸ் ஆபீசிலும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
கடைக்குட்டி
சிங்கம்:
இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸ்
வெற்றி பெற்று இருந்தது. விவசாயத்தை மையமாக வைத்து, குடும்பப் படமாக எடுக்கப்பட்டு இருந்தது. மக்களிடையே இந்தப்
படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சூர்யா தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில், கார்த்தி, சாயீஷா, பிரியா பவானி சங்கர், சத்யராஜ், பானுப்ரியா நடிப்பில் வெளியாகி இருந்தது.
பியார் பிரேமா
காதல், கோலமாவு
கோகிலா:
இந்த இரு படங்களும்
பாக்ஸ் ஆபீசில் வெற்றி பெற்று இருந்தன. போதைப்பொருள் கடத்தல் கேரக்டரில் நயன்தாரா
நடித்து இருந்தார். இவரது கேரக்டர் இந்தப் படத்தில் மிகவும் பேசப்பட்டது.
கதைக்களம் இவரை வைத்தே எடுக்கப்பட்டு இருந்தது. படத்தில் நயன்தாரா நடிப்பு மிகவும்
பேசப்பட்டாலும், நகைச்சுவை நடிகர் யோகி
பாபுவின் கதாபாத்திரம் படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்து இருந்தது.
சீமராஜா:
இந்தப் படத்திற்கு இருந்த
வரவேற்பு அளவுக்கு பாக்ஸ் ஆபீஸ் வெற்றி பெறவில்லை. இது சிவகார்த்திகேயனுக்கு ஒரு
ஏமாற்றமாகவே இருந்தது.
யு டர்ன்:
இந்தப் படத்தில் நடிகை
சமந்தா நன்றாக நடித்து இருந்தார். ஆனால், பாக்ஸ் ஆபீஸ் வெற்றி
பெறவில்லை. அவரது நடிப்பு பாராட்டப்பட்டது. அவர் மட்டுமின்றி கதாநாயகனாக நடித்து
இருந்த ஆதியும் தனது பாத்திரத்தை வலுவாக செய்து இருந்தார்.
தொகுப்பு ; கயல்விழி,பரந்தாமன்.
No comments:
Post a Comment