நாம் எதையெல்லாம் தொலைத்துள்ளோம் ?



நமக்கு முந்தைய தலைமுறையில் நாமும், நம் முன்னோர்களும் அனுபவித்த பல சந்தோஷங்களை நாம் இப்போது அனுபவிப்பது இல்லை. அறிவியலும் தொழில்நுட்பமும் எவ்வளவு தான் வளர்ந்தாலும், முன்னால் உபயோகபடுத்தியதை / பழகியதை நாம் நினைவில் கொள்வதில்லை.
இன்றைய அறிவியலின் அதீத வளர்ச்சியால், நாம் கடந்த நூற்றாண்டில் செய்த பல நல்ல விஷயங்களை தொலைத்துள்ளோம்.

முதலில் வருவது, தொலைப்பேசியும், கைப்பேசியும் தான். இவை இரண்டும் வருவதற்கு முன்னால், நம் தகவல்தொடர்பு, கடிதத்தின் மூலமாக தான் இருந்தது. தொலைப்பேசியின் வரவால், கடிதம் எழுதுவதே இல்லாமல் போய் விட்டது. இப்போதெல்லாம், பள்ளிகூடங்களில் ஒன்றாம்/ இரண்டாம்  வகுப்பில் 'விடுப்பு கடிதம்' எழுதுவதோடு சரி. இன்று ஒரு கல்லூரி மாணவரையோயோ / நல்ல வேலையில்  இருக்கும் யாரையாவது ஒருவரை கடிதம் எழுதுங்கள் என்று சொன்னால் "As I'm suffering from fever, I'm unable to attend.. " என்ற வழக்கமான template-ஐ தான் பெரும்பாலானோர் எழுதுவார்கள். இதை பற்றியே பல திரைப்படங்களிலும் நகைச்சுவையாக சொல்லிவிட்டார்கள்.



தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை உறவினரிடமோ, நண்பர்களிடமோ தொலைபேசியில் பேசி/நலம் விசாரித்து கொண்டு இருப்பதை விட, மாதம் ஒரு முறைகடிதத்தில் பரஸ்பரம் பரிமாரிக் கொள்வது மிகவும் சுகமானது. அதில் ஒரு வித அன்பும், பொறுமையும் இருக்கும். கடிதம் எழுதி பழகியே தமிழில் தேர்ச்சி பெற்றவரும் உண்டு. அரை நூற்றாண்டுகளுக்கு முன் ஜவகர்லால் நேரு எழுதிய கடிதங்கள், மகாத்மா காந்தியின் கடிதங்கள், முன்னால் அமெரிக்க அதிபர் சர்ச்சில் கடிதங்கள்  என கடிதங்களுக்கு சில சிறப்பு மிக்க வரலாறும் உண்டு.

முன்னதாக தொலைப்பேசி இருக்கும் போது, எல்லாருடைய பையிலும் நண்பர்கள், உறவினர்களின், முக்கிய தொலைபேசி எண்கள் என ஒரு சிறு டயரியில் எழுதி வைத்திருப்பார்கள். பின்னர் கால்குலேடருடன்   கூடிய டிஜிட்டல்  டயரியில் சேமித்து வைத்திருந்தனர். அடிக்கடி அழைக்கும் நபர்களின் எண்களை மனப்பாடமாக சொல்வார்கள். ஆனால் இப்போது,  ஒரே வீட்டில் இருப்பவர்கள் எண்கள் கூட தெரிவதில்லை. "உங்க அப்பா மொபைல் நம்பர்  என்ன?"   என்று கேட்டால், அவர்களுடைய மொபைல் போனை பார்த்து தான் சொல்கிறார்கள்.

பண்டிகை நாள்களிலும், பிறந்த நாள்களிலும் வாழ்த்து அட்டை அனுப்புவது ஒரு சிலரின் பழக்கமாகவே இருந்து வந்தது. ஆனால் காலப்போக்கில், அதெல்லாம் Out of Fashion ஆகிவிட்டது. இன்று சமூக வலைதளங்களிலும், மின்னஞ்சலிலும், குறுஞ்செய்திகளிலும் தான் வாழ்த்துகள் பரிமாறி கொள்ள படுகிறது. இப்போது வாழ்த்து அட்டை கடைகளில் பிறந்த நாள், திருமண நாள், பண்டிகை திருநாள் வாழ்த்து அட்டைகளை விட வித விதமான காதலர் தின அட்டைகள் தான் இருக்கின்றது, விற்கின்றது !

சரி ! அதை விடுங்கள். அடுத்த விஷயத்துக்கு வருவோம். சின்ன வயதில் பசங்களுக்கு ஒழுக்கமும், படிப்பும், விளையாட்டும் தான் முக்கியம். பாரதியாரே "ஓடி விளையாடு பாப்பா " என்று தான் பாடியிருக்கிறார். முன்பெல்லாம், சிறுவர்/சிறுமியர் ஓடி பிடித்து, வியர்க்க விருவிருக்க விளையாடுவார்கள். ஏனென்றால் அப்போது, தொலைக்காட்சி கிடையாது. பக்கம் பக்கமாக வீட்டுப்பாடம் எழுதவேண்டிய அவசியமெல்லாம் இருந்ததில்லை. விளையாடி விளையாடியே  களைத்து போய் விடுவார்கள். பள்ளிக்கூடம் போகாத பிள்ளைகள் கூட இருக்கலாம்; மண்ணில் புரண்டு விழுந்து விளையாடாதவர்களே இல்லை எனலாம். அப்படி விளையாடுவதால், மற்ற குழந்தைகளிடம் எப்படி பழக வேண்டும், ஒன்றாக சேர்ந்து விளையாட வேண்டும் என்ற எண்ணம் உருவாகும்.

சில காலம் முன்பு வரை, பிள்ளைகள் அப்படி தான் விளையாடி பொழுதை களித்தனர். தொலைகாட்சி சேனல்களின் வரவுக்கு பிறகு, அதுவும் Cartoon Network, POGO வில் உள்ள பொம்மை படங்களுடன் தான் இப்போது பிள்ளைகள் பொழுதை களிகின்றனர். பிறகு கம்ப்யூட்டர் வந்த பிறகு, பிள்ளைகள் வீடியோ கேம்ஸ், ப்பிளே ஸ்டேஷன் என முழ்கி விட்டனர். இப்போதெல்லாம் 2 வயது குழந்தை முதல், டச் ஸ்க்ரீன் போனில் தான் விளையாடுகின்றனர். இன்றும் கபடி, கிரிகெட் போன்ற விளையாட்டுகள் விளையாடபடுகின்றன. பெரும்பாலும், PS-2 விலும், மொபைல் கேம்களிலும்.

இந்த மாற்றங்கள் எல்லாமே மறுக்க முடியாத ஒன்று. இவை விஞ்ஞானம் மற்றும் கணினித்துறையின் அசூர வளர்ச்சியால் கண்ட மாற்றங்கள். இதனால் நாம் கடத்த காலத்தில் உள்ள பல விஷயங்களை தொலைத்துள்ளோம். இன்னும் நாம் எத்தனை சின்னசின்ன  சந்தோஷங்களை தொலைக்க போகிறோம் என தெரியவில்லை.

நன்றி !!!
-பி .விமல் ராஜ்

No comments:

Post a Comment