சினிமாத் துளிகள்


''சர்கார்''   
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து தீபாவளி வெளியீடாகக் வெளிவர இருக்கும் ''சர்கார்'' பிரம்மாண்டமான  படமாக சர்கார் உருவாகி வருகிறது.இப்படத்தில் இடம்பெற்றுள்ள சிம்டாங்காரன் எனும் ஒரே ஒரு பாடல் மட்டும் வெளியாகி ஹிட் ஆகியுள்ளது. அக்டோபர் இரண்டாம் தேதி இப்படத்தின் இசை வெளியீடு நடக்க இருக்கும் நிலையில் இன்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக சர்கார் படத்தின் மற்றுமொரு போஸ்டர் வெளியாகி உள்ளது

96
விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் அக்டோபர் 4-ந்தேதி வெளியாக இருக்கும் 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நானி நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் . இப்படம் அடுத்தவாரம் வெளியாக இருக்கிறது.குறிப்பாக இந்த படத்தின் ‘காதலே காதலே’ பாடல் தற்போதே இளைஞர்களின் ரிங்டோனாக மாறியுள்ளது.
இந்நிலையில் ரிலீசாகும் முன்பே இப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமை விற்கப்பட்டுள்ளது. தெலுங்கு படத்திற்காக  தெலுங்கு நடிகர் நானியும் கதாநாயகியாக சம்ந்தாவும் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

கவுர தோற்றத்தில் ஐஸ்வர்யாராய்
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார்  தனது தமிழ் திரைப்பட அறிமுகத்தை மெகா பட்ஜெட்டில் தொடங்கி உள்ளார். இதில், அவர் வில்லன் வேடத்தில் நடித்தார். இந்த படம் வெளியாக  2 மாதங்கள் இருக்கும் நிலையில் படம் குறித்து ஒரு  சுவாரஸ்யமான செய்தி வெளிவந்து உள்ளது. 
இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன் கவுரவ  தோற்றத்தில் நடிக்கிறார்.ஐஸ்வர்யாராய்  2010 சூப்பர் ஹிட் படமான 'எந்திரன்' படத்தில் நடித்துள்ளார், இது 2.0 இன் முன்படமாகும்.
ஐஸ்வர்யாராய்  விஞ்ஞானியாக நடித்த ரஜினிகாந்தின் வசீகரன் பாத்திரத்துடன் உணர்ச்சித் தோற்றத்தைக் கொண்டிருப்பார் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த படம்  நவம்பர் 29 ந்தேதி  வெளியாகும் என அதிகார பூர்வமாக அறிவிக்கபட்டு உள்ளது.

No comments:

Post a Comment