வாணி ராணி சுவாமிநாதன்
இன்னும் சில மாதங்களில் முடியவுள்ள வாணி ராணி
சீரியல் இதில் சுவாமிநாதன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல நடிகர் ப்ரித்விராஜ் ஒரு பேட்டியில்
‘என் வாழ்க்கையில் மிக கொடுமையான சீரியல் பயணம் என்றால் வாணி ராணி தான், எங்களை டம்மி பீஸாக அந்த சீரியலில் எந்த
பிரச்சனை நடந்தாலும், ஹீரோயின் தான்
கண்டுப்பிடிப்பார். வாணி ராணி முடியவுள்ளது,
இனி தான் எனக்கு நிம்மதி’
என்கிறார் ப்ரித்விராஜ்.
அஜித்
பரபரவென பிஸியாக ஆரம்பித்துவிட்டார் அஜித். பில்லா,
ஆரம்பம் படங்களை அடுத்து
விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கத் தயாராகிவருகிறார். டைட்டில்
தேர்வு நடைபெற்று வருகிறது.
கௌதம்
`சர்கார்’ ரெடி. கௌதம் மேனனுடன் ‘யோஹன் அத்தியாயம்
ஒன்று’க்கு ரெடியாகலாம் என்று பேசியிருக்கிறார்கள். ‘இப்ப விஜய் சார் ரேஞ்ச்
இன்னும் உயரம். பக்காவா ரெடிபண்ணிட்டு சொல்றேன்’ என்றிருக்கிறார் கௌதம்.
விஜய்சேதுபதி
சிறுவயதிலிருந்தே
பாரதிராஜா படங்கள் என்றால் விஜய்சேதுபதிக்கு மிகவும் இஷ்டம். விஜய்சேதுபதி
முதியவர் வேடத்தில் நடிக்கும் சீதக்காதி படத்தில் பாரதிராஜாவும் நடிக்க
இருக்கிறார். அதுவும் பாரதிராஜாவாகவே வருகிறாராம். இதனால் விசே செம உற்சாகத்தில்
இருக்கிறார்
தனுஷ்
`எழுமின்’ என்ற படத்திற்காக ஒரு பாடலை
பாடிக்கொடுத்திருக்கிறார் தனுஷ். இந்தப்பாடல் பதிவை வெறும் ஒன்றரை மணிநேரத்தில்
முடித்துக்கொடுத்திருக்கிறார்.
ரஜினி
டேராடூனில் கார்த்திக்
சுப்புராஜ் இயக்கத்தில் படப்பிடிப்பு. பீட்டர் ஹெய்ன் சண்டைக்காட்சியில் பிஸியாக
இருக்க, ‘கூப்பிடுங்க அவரை’ என்றார் ரஜினி. கேக் தயாராக
இருக்க பீட்டர் ஹெய்னின் பர்த்டே கொண்டாட்டம் தடாலடியாக நடந்தது.
நெகிழ்ந்துபோய்விட்டாராம் பீட்டர் ஹெய்ன்.
கமல்
சினிமாவில் புதிய
டெக்னாலஜி எதுவந்தாலும் சடாரென்று பின்பற்றும் கமல், தன் அன்றாட நிகழ்வுகளைக்
குறித்துவைக்க, காலக்குறிப்பேடாக உபயோகிப்பதென்னமோ டைரிதான்.
இப்போது ’மய்ய’ நிகழ்வுகளால் நிரம்பிவழிகிறதாம் அது.
No comments:
Post a Comment