அனுபவம் மட்டுமே ஆன்மீகத்துக்கு வழிகாட்டும்- புத்தர்

அனுபவமே உயர்ந்தது


ஒருமுறை பார்வையற்ற சிறுவன் ஒருவனை புத்தரிடம் அழைத்துவந்த அவ்வூர் பிரமுகர் சிலர் ,
 'ஒளி என்று ஒன்று உண்டு என்று நாம் எத்தனை முறை எடுத்துக் கூறினாலும் , அச்சிறுவன் நம்ப மறுக்கிறான்' என்று புகார் செய்தனர்.
அதேசமயம் ,அச்சிறுவனோ 'புத்தரே!  நான் தொட்டுப்பார்த்து ,அல்லது  சுவைத்து அல்லது  வாசனையாய் முகர்ந்து  அல்லது அதன்   ஓசையாய்   செவிமடுத்தோ அறிய முடியாத எந்த சமிக்கையும் இல்லாத  வெளிச்சத்தினை எப்படி நான் நம்புவது?' என வினவினான்.

ஆனால் அப்பிரமுகர்கள் புத்தரிடம், 'கேட்டிர்களா புத்தரே! இவனை நீங்கள்தான் வெளிச்சத்தினை இவன் நம்பும்படி செய்யவேண்டும்' என வேண்டினர்.

அதற்கு பதிலளித்த புத்தர், 'அவனால் உணரமுடியாத ஒன்றை நம்பும்படி கட்டாயப்படுத்தும் செயலை நான் செய்யமாட்டேன். இப்போது அவனுக்குத் தேவை பார்வையே அல்லாது வெளிச்சம் பற்றிய விளக்கம் அல்ல. அவனுக்குப் பார்வை வந்துவிடடால்  விளக்கம் தேவைப்படாது. அவனைத் தகுந்த மருத்துவரிடம் அழைத்துச் சென்று வைத்தியத்திற்கு வழி செய்யுங்கள் என்றார்.

புத்தர் கூறியபடி அவனுக்கு மருத்துவ வசதி மூலம் பார்வை கிடைத்தது. நன்றியுணர்வுடன் புத்தரிடம் ஓடிவந்த அச் சிறுவன்  'புத்தரே வெளிச்சம் இருக்கிறது' என்று கூறினான்.

புத்தரும் 'அப்போ வெளிச்சம் இருக்கிறது என்று பெரியோர்கள் முன்னர் கூறியபோது ஏன்  நம்ப மறுத்தாய்?' எனக் கேட்டார்.

அதற்கு அந்த சிறுவன், 'என்னால் காணமுடியாத, அறியமுடியாத ஒன்றை அவர்கள் கூற  அதனை நம்பிக்கொண்டு நான் இருந்திருந்தால் இன்னும் கண் தெரியாத குருடனாய் நான் இருந்திருப்பேன்' என்று கூறினான்.

இச் சம்பவத்தின் மூலம் புத்தர் தன் சீடர்களுக்கும் ,உலகத்திற்கும் ஒரு நற்செய்தியினை வழங்கினார். அதாவது,
அடுத்தவர் சொல்வதினை கேட்டு செய்யும் வழிப்பாட்டினால் நீ என்றும் ஆன்மீகக்கடலை அடையமுடியாத குருடனாகவே இருப்பாய். நீ உன் புலன் கொண்டு எதை உணர்கிறாயோ அதுவே உண்மை.'அதுவே ஆன்மீகத்திற்கான நல்வழி.
-Gautama Buddha [கேட்டதில் பிடித்தது.]
👨👨👨👨👨👨👨👨👨👨👨👨👨👨👨


2 comments:

  1. கண்ணன்.காWednesday, August 15, 2018

    அய்யய்யே! இது எங்க புராணக் கதையில எண்டால் இப்படி இருந்திருக்கும்--- புத்தரை சோதிக்க எண்ணிய சிவன் கண் தெரியாத சிறுவனாக மாறி ஊருக்குள் வந்து சிவசோதியின் வெளிச்சம் என்பதனை நம்ப மறுக்கிறான். இதனை சிவனின் அடியவர்கள் புத்தரிடம் அவனை அழைத்து வந்து முறையிடுகிறார்கள்.தன்னுடைய சக்தியால் வந்திருப்பவர் சிவன் என உணர்ந்த புத்தர், அவனின் பார்வை கிடைக்கச் செய்கிறார். உடனே சிவனினும் பார்வதியோடு புத்தருக்கு காடசிக்கொடுத்து புத்தனின் பெருமையினை உலகரியச் செய்யவே நாம் இத் திருவிளையாடலை செய்தொம் என்று கூறி மறைகிறார்.---ஆகா இது எப்படி.இப்பிடித்தான் புராணக் கதைகள் எல்லாமே

    ReplyDelete
  2. பரந்தாமன்Thursday, August 16, 2018

    இது கலியுகம்.கலியுகத்தில் ஆன் மீ கம் அழிந்துவிடும்.ஆன் மீ கம் அடைவதற்கான தேடல் -வழிபாடு என்ற பெயரில் ஆலயம் வழியாகக் கேலிக்கூத்துக்கள் அதிகரிக்கும். அநியாயங்கள் அக்கிரமங்கள் மலியும்.புத்தர் இவற்றினை எதிர்த்தார்.அதனாலேயே அவர் போதனை கள் இந்தியாவிலிருந்து விரட்டிடப்பட்ட்து.
    இலங்கை வந்த புத்தம் தேரோவாத பிரிவு [தேரவாதம் -மற்றும் தென்கிழக்காசியாவில் கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து, பர்மா உடையது]. அது இலங்கையில் புத்தர் முதலில் வெறுத்த அரசியலுக்குள் அமிழ்ந்து காணாமல் போய்விட்ட்து.

    கிழக்காசிய நாடுகளில் [ சீனா, கொரியா, சப்பான், வியட்நாம், சிங்கப்பூர், தாய்வான்] புத்தம் மஹா ஞான பிரிவு கொண்டு பரவினாலும் இரு பிரிவாகி ஒன்று ஆலய வழிபாடாக அவர் போதனைகளுக்கு மாறாக வழி கொண்டது.

    திபெத்து, மற்றும் மங்கோலியாவில் பின்பற்றப்படும் வச்சிரயான பௌத்தம் மூன்றாவது வகையாகக் குறிக்கப்படுகிறது

    இருந்தாலும் புத்தரின் போதனைகள் இன்று உலகில் 1.6 பில்லியன் மக்களையும் தாண்டி வளர்த்துக்கொண்டு இருக்கிறதன் காரணம் அவருடைய போதனைகளின் உண்மைநிலை.அவருடைய கருத்துக்களை வெளியிடடமைக்கு நன்றிகள்.

    ReplyDelete