ஜி.வி.பிரகாஷ்
– அபர்ணதி நடிக்கும் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
அங்காடித்தெரு, வெயில், அரவான், காவியத்தலைவன்
படங்களை இயக்கிய வசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் – அபர்ணதி நடித்து வரும் புதிய
படத்திற்கு `ஜெயில்’ என்று தலைப்பு வைத்துள்ளதாக படக்குழு
அறிவித்துள்ளது.
இந்நிலையில், வசந்த
பாலன் இயக்கி வரும் புதிய படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ்.
ஜி.வி.பிரகாஷின் 17-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு `ஜெயில்’
என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும்
படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக தொலைக்காட்சி
நிகழ்ச்சியான `எங்க வீட்டு மாப்பிள்ளை’ யில் பங்கேற்று
பிரபலமான அபர்ணதி நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் ‘பள்ளிப்பருவத்திலே’
படத்தில் நாயகனாக நடித்த நந்தன் ராம், ‘பசங்க’ பாண்டி, ராதிகா
உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
கணேஷ்
சந்திரா ஒளிப்பதிவு பணிகளை கவனித்து வருகிறார். கிரிக்கஸ் சினி கிரியேஷன்ஸ்
சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் இந்த படத்தை தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் தான் இந்த
படத்திற்கு இசையமைக்கவும் செய்கிறார்.
No comments:
Post a Comment