அழகாய் வாழ்வு நகர்ந்திடவே
ஆனந்தமாக வாழ்வும் மாறிடவே
மாமன் மகன் வருவானோ?
நல்ல செய்தி தருவானோ?
தனிமைக்கு புது உறவு தந்து
என்னை மணம் முடிப்பானோ?
அன்போடு சிரித்து பேசி
என்மீது தயக்கமின்றி
நெருக்கமாவானோ?
என் காதலை அவனுக்காய்
ஒளியாய் தெளித்திடுவேன்
அவன் வாழ்வில் நிழலாக
நான் இருப்பேன்
அவன் நினைவால்
என்னையே நனைக்கிறேன்
அவன் என்னோடு வந்து
சேர்ந்திடுவானோ?
என் வாழ்வையும் மலர
வைப்பானோ?
-காலையடி,அகிலன்-
No comments:
Post a Comment