தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?] /பகுதி 21‏


[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
துருக்கியில் அமைந்துள்ள மிகப்பழமைவாய்ந்த கோபெக்லி தேபே(Göbekli Tepe) என்ற கோயிலின்மூல புனித இடத்தின் மேல்கூரையில்பல்லியின் சிற்பவேலைகாணப்படுகிறது.பல்லி தமிழர்களின்நாளாந்த வாழ்க்கை உடன் இணைந்தஒன்று.இது வரும் காலத்தைப் பற்றியசகுனம் அறியும் முக்கிய சாதனம்ஆகும்.பல்லி தலையில் விழுந்தால்கலகம் (சண்டைஎன்பது போன்று,உடலில் எந்த இடத்தில் பல்லி விழுந்தால் என்னென்ன பலன் எனசொல்வதேபல்லி சொல்லும் பலன் ஆகும்.பல்லிசத்தமிடுவதை “கௌளிஎன்பர்பல்லி “கௌளி” சொன்னால் 
[கோபெக்லி தேபே/Göbekli Tepe] 
தரையில் மூன்று முறை விரல்களால்தட்டுவதுஇன்றும் பலரிடம் உள்ள பழக்கம்இதனை மூத்த குடியாகியதமிழர்கள் நம்பிவந்தனர் 2700-2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்கபாடல்களிலும் இந்த நிமித்தம் காணலாம்.

"மையல் கொண்ட மதனழி யிருக்கையள்
பகுவாய்ப் பல்லி படுதொறும் பரவி
நல்ல கூறென நடுங்கிப்
புல்லென் மாலையொடு பொருங்கொல் தானே".(அகநானூறு289.)

மயக்கம் கொண்டமையின் வலியற்ற இருக்கையளாகிபிளந்த வாயையுடையபல்லி சொல்லும்போதெல்லாம் வணங்கினாள் நல்லது சொல் என்று நடுங்கிவேண்டிமனம் நடுங்கி,பொலிவற்ற மாலைக் காலத்தொடு மாறுபடுவளோ?என்கிறது

göbeklitepe temple
ஆலயத்தில் பல்லியின் இருப்பு முக்கியம் என்பதை இதனால் ஊகிக்கமுடிகிறதுஏனென்றால்,வழிபாடும் ஒருவர் ,தனது  பிரார்த்தனைநிறைவேறுமா அல்லது இல்லையா என்பதை,பல்லி உண்டாக்கும் சத்தம்மூலமோ அல்லது ஒருவர் மேல் அந்த பல்லி விழும் சகுனம் மூலமோஅறியலாம் என்பதால் ஆகும்.

பல்லி பண்பாடு ஒரு தமிழ் ,வேத பண்பாடாகும்இது இந்தியாவில் 10000வருடங்களுக்கு முன் ஆரம்பமாகி இருந்தால்,இது இந்த பல்லிபண்பாடு,இந்தியாவில் இருந்து சுமேரிய போய் இருக்கலாம் என ஊகிக்கஇடம் உண்டுஇல்லாவிட்டால் அது அங்கு இருந்து இந்தியா வந்திருக்கலாம்?ஏனென்றால் கோபெக்லி தேபே கிட்டத்தட்ட 10,000 ஆண்டுகள்பழமையானது.

சுமேரு மொழியை பழைய தமிழ் என்ற கண்டுபிடிப்புடன் இலக்கியம் சார்ந்தசுமேரு வாசகம் தொல்பொருள்  ஆராய்ச்சியாளர்களால்மொழிபெயர்க்கப்பட்டு இருக்கும் நிலையில்,ஆகமத்தை அடிப்படையாககொண்ட சமயம் 4000 வருடங்களுக்கு முன்பு,அங்கு முதிர்ச்சி அடைந்தசுமேரியாவில்,இன்றைய ஈராக்கில்  இருந்தது தெரிய வருகிறதுஇதுவும்கோயிலை மையமாக கொண்ட பண்பாடு ஆகும்.ஆகமம் என்னும் வடசொல்'போய்ச் சேர்தல்', 'வந்தடைதல்என்னும் பொருளைத் தருவதுஇதற்குத்"தொன்று தொட்டு வரும் அறிவுஎன்றும் "இறைவனை அடைவதற்கானவழியைக் கூறும் ஞான நூல்என்றும் அறிஞர்கள் பொருள் கூறுவர். 'ஆகமமாகி நின்று அண்ணிப்பான்என வரும் மாணிக்கவாசகர் கூற்றிலே'ஆகம வழி நிற்பார்க்கு இறைவன் அணுகி வந்து அருள்புரிவான்என்னும்பொருள் பெறப்படுகின்றது.ஆகமங்கள் என்பது இந்து சமயத்தின் முப்பெரும்பிரிவுகளான சைவம்வைணவம்சாக்தம்[சக்தியை வழிபடு கடவுளாகக்கொள்ளும் சமயம்ஆகிய சமயங்களின் மதக்கோட்பாடுகோயிலமைப்பு ,கோயில் வழிபாடுமந்திரமொழிகள் ஆகியவை அடங்கிய நூல் வகைஆகும்.இவை பொதுவாகத் தென்னிந்தியாவிலேயே புழக்கத்தில்உள்ளன.இவை வேதங்களை அடிப்படையாகக் கொள்ளாதவை.ஆகவே ஆகமஇந்து சமயம் ,அதாவது சைவ சமயம்நாகரிகத்தின் தொடக்கத்திலேயேஇருந்தது என்பது இதனால் புலன் படுகிறது.

பிற்காலத்தில் சைவசித்தாந்தமாக வளர்ந்துள்ள சைவத்தின் நல்ல தோர்வளர்ந்த நிலையை சுமேரிய இலக்கியமான ஈனன்னை சீர்பியத்தில்காணக்கூடியதாக இருந்ததை முன்பு நாம் சுட்டிக்காட்டினோம்.

  [சூல்கி மன்னன்/king Shulgi]  
இனி சூல்கி எனும் ஓர் அரசனின் Hymn B எனும் அகவலிலிருந்து சிலவரிகளை அதாவது சூல்கியின் முதரீபியத்தில் வரும் வரிகள் எழுபத்திமூன்றை,எழுபத்தி  நான்கை[73-74] முனைவர் கிலோகநாதன் துணையுடன்பார்ப்போம்.இங்கு சிவா குறிக்கப்பட்டிருப்பது மட்டும் அல்ல,தமிழ்பண்பாடான உண்மையில்  மட்டும் வாழு என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளதுகவனிக்கத்தக்கது.சூல்கிஊர் நம்மு அரசனின் மகன் ஆவான் .இவன் 48வருடம்  கி மு 2029 –1982 ஆண்டுவரை ஊர் நகரத்தை ஆண்ட மன்னன்.

வரலாற்று சிறப்புமிக்க அந்த இரண்டு வரிகள் கிழே தரப்பட்டுள்ளன.

73. sipa ildum-ma-bi su-bi hu-mu-dug
(and) for the shepherds and pack dogs it was a pleasant (time)
Tamil: Sipa ezuttummabi suubi thuukkummu
சிப எழு(ந்)தும்ம சூ-பி தூக்கும்மு

74. u-me-da u-ul-li-a-se
(though) always and always
uNmaiyodu uu uuziyasee
உண்மையொடு  ஊழியசே

இங்கு நிச்சயமாக முதல் வரியின் மொழி பெயர்ப்பு தவறானதுஇரண்டாவதுவரி ஓரளவுப் பொருந்துவது: "உண்மையோடு ஊழி காலம் வரைஎன்பதாகக்கொள்ளலாம் என வாதாடுகிறார் முனைவர் கிலோகநாதன்இங்குநிச்சயமாக தமிழ் 'ஊழிகருத்து இருக்கின்றதுஅண்டசராசரம் அனைத்தும்ஊழித்தீயில் அழிந்து முற்றிலும் இல்லாமற் போவதே இங்கு குறிக்கப்படும்காலக் குறிப்பு ஆகும்இது மிக ஆழமான பிரபஞ்சக் கோட்பாட்டினை சூல்கிகொண்டிருந்தான் என்பதைக் காட்டுகின்றதுசைவ சமயத்தில் இதைத் தான்சாதாரண பிரளயங்களுக்கு வேறாக 'மகாப்பிரளயம்என்பார்கள். ":உண்மையொடுஎன்பதை " மெய்யாக" , "அகச் சுத்தத்தோடு மெய்பக்தியின்என்றெல்லாம் கூறலாம்அடுத்து "su-bi hu-mu-dug" "சூர்பிதூக்கும்முஎன்பதுஇங்கு "கரம்குவித்து கும்பிடல்” (su=sur>சூர்கரம்)சுட்டப்படுகின்றது என்பது தெளிவுஇன்று இந்து மக்களிடையே விளங்கும்பழக்கம் அன்றும்  மக்களிடையேயும் விளங்கிற்று என்பது தெளிவாகின்றது.இப்படி அவன் கையெடுத்து ஊழிகாலம் வரை கும்பிட்டுக் கொண்டேஇருப்பேன் என்று கூறுவது யாரைஎன்று கேள்வி எழ "sipa" என்னும்சிவனைத்தான் என்று தெளிவாகின்றதுஆனால் யார் இந்த "sipa"?இங்குதான் "sipa ildumm-ma" என்பதை இன்னும் ஆழமாகக் கருதவேண்டும்சுமேருவில் 'il' என்பது ' இயல்என்றோ 'எழுஎன்றோ ஆகும்.எவ்வாறு கொண்டாலும் "இயல்தும்மஅல்லது "எழு(ந்)த்தும்ம"என்றாகிறதுஇயல்வது அசைவது எழுவது என்பதற்கெல்லாம் உள்நின்றுஅவற்றின் சத்தியாகஅந்த உயிர்ப்பிக்கும் அசைவிற்கும் காரணமாக இருப்பதுஇந்த சிவன் ஆகின்றான்பிற்காலத்தில் இதேப் பெயரில் தமிழில் "நாததத்துவம் " அதாவது உயிர் மூச்சிற்கு முச்சாக இருக்கும் சத்தி இவ்வாறுவிளம்பப்படுகின்றதுஎனவே இதனை "நாதசிவன்என்று பிரித்தறிவோம்.[சுமேரு மொழி தமிழாஅல்லையாமுதல் தொகுதி முனைவர் கி.லோகநாதன் 13-3-13]

அதாவது எல்லா உலகமும் முடியும் வரை,நான் உண்மையில் வாழ,நான்சிவாவை நோக்கி எனது கையை உயர்த்தி வணங்குகிறேன் என்கிறது இந்தவாசகம் என்கிறார் முனைவர் கிலோகநாதன்.

இவ்வாறாக,உண்மையில் வாழ்வதற்கும் சிவா வழிபாட்டிற்கும் ஒரு தொடர்புஇருப்பதை காண்கிறோம்இதைத்தான் திருஞானசம்பந்தர் கூட தனதுதேவாரத்தில் கிழ்கண்டவாறு நினைவு கூறுகிறார்.

"அற்றன்றி அந்தண் மதுரைத் தொகை யாக்கினானுந்
தெற்றென்ற தெய்வந் தெளியார் கரைக்கோலை தெண்ணீர்ப்
பற்றின்றிப் பாங்கெதிர் வினூரவும் பண்பு நோக்கில்
பெற்றொன் றுயர்த்த பெருமான் பெருமானு மன்றே".
[திருஞானசம்பந்தர் - திருக்கடைக்காப்பு/முன்றாம் திருமுறை/054/11]

சிவபெருமான்முன்னர் உரைத்த அத்துணைப் புகழுக்கும் உரியவராகியவர்.அதுவும் அன்றிஅவர்மதுரையில் தமிழ்ச் சங்கத்தை ஆக்கித் தமிழ் வளர்த்துஅருளிச் செய்தவர்ஈசனே  முழு முதற் பொருள் எனத் தெளிவுபெறாதவர்களுக்குத் தெளிவு பெறஇந்த அரிய ஓலையானதுவைகைஆற்றில் எதிர் நோக்கிச் செல்லும் மாண்பினை நோக்கில்இடப வாகனத்தில்மீது இவர்ந்து மேவும் பெருமானேஇறைவன் எனத் தக்கவர்என்பதுதானேமெய்ம்மை !

தமிழ் மொழியும் அதன் பண்பாடும் இன்றுவரை தொடர்ந்து வாழ்கிறதுஎன்றால் அதற்கு காரணம் சைவத்தை தனது அடித்தளமாக அமைத்ததுதான்.சைவம் ஒரு இயற்கையான தத்துவ ஆகமம் ஆகும்.அங்கு மூலகோட்பாடாக 'உண்மையை தேடல்'  போற்றிவைத்துப் பேணப்படுகிறது.இதன் மூலம் அது  உண்மையை கண்ட தனிப்பட்டவர்களை/மெய் கண்டான்களை தோற்றுவிக்கிறது.பொதுவாக ஆகமம்  மெய்யை விளக்கும்மெய் நூல்களாம்இவை மெய்யாகிய இறையிடம் இருந்து வந்தவை.மெய்யாகிய இறையின் மெய் வாக்குகள்இவை மெய்யிடம் இருந்து வந்து,மெய்யை விளக்கும் மெய் நூல்களாக இருப்பதால் இவற்றை மெய் என்றேகொள்வர்.

எமக்கு எல்லோருக்கும் தெரிந்தவாறு,நந்தி சிவனின் முதன்மை வாகனமாகஉள்ளது.அது மட்டும் அல்ல சிவாவின் வேலையாளராகவும் அல்லது உடன்செல்பவராகவும் உள்ளது.சுமேரிய இலக்கியமான கில்கமெஷ் காப்பியத்தில் கில்கமெஷும்  என்கிடுவும் வணக்கத்திற்கு உரிய பரலோக காளையைகொல்வதை  விவரமாக விளக்குகிறது.அது மட்டும் அல்ல சுமேரியாவுடன்வர்த்தக உறவு கொண்டிருந்த சிந்து சம வெளி நாகரிகத்திலும்நந்தியை,காளையை காணலாம்.

மேலே நாம் சுட்டிக்காட்டியவாறு,சுமேரியனின்  பண்பாடு தமிழர்/இந்தியருடன் பல ஒற்றுமைகளை கொண்டுள்ளது.இவை  வெறும்எதிர்பாராத ஒருங்கொத்த  நிகழ்வு என எவரும் தள்ளுபடி செய்யமுடியாது.கி.பி. 1929-இல் பிரஞ்சுக்கார அகழ்வராய்ச்சிக்குழு ரஸ்வும்ராஎன்ற இடத்தில் தோண்டியபோது புராதன உகாரித் நகரைக்கண்டுபிடித்தனர்.உகாரித்தின் பெருந்தெய்வம் 'இல்'. இல் என்றால் “சர்வவல்லமையுள்ள ஆண்டவன்” என்று பொருள். “மனிதர்களின் தந்தை”, “படைத்தவன்” என்று பல பொருளும் 'இல்லைக் குறிக்கும்அங்குமண்ணுக்கடியில் இருந்து எடுக்கப்பட்ட கி மு 1300 ஆண்டை சேர்ந்தகளிமண் வில்லையில் [முத்திரையில்/ஏடுகளில்மேலும் ஒருஅரசனைப்பற்றிய ஆர்வமிக்க [சுவாரசியமானசெய்திகொடுக்கப்பட்டுள்ளது.இவனது பெயர் கேரத் [Keret].இவன் தனதுசகோதரர்களையும் தனது எழு மனைவிமார்களையும் இழந்து வாரிசு ஒன்றும்இல்லாமல் இருந்தான்.ஒரு மகனை வேண்டி மன்றாடுகையில்,கேரத்தின்கனவில் ‘முதன்மை கடவுள் இல்’ வந்து[தோன்றிபால் தெய்வத்திற்கு பலியிட்டுஅதன் பின் ‘உடும்’[Udumu] என்ற ஊருக்கு  தனது படையுடன்சென்று,அந்த நகர அரசனிடம் இளவரசியும்  பபிலின் புத்திரியுமானஹுரையாவை[Hurriya] தனது மனைவியாக அடைய கேட்குமாறு அறிவுறுத்தியது.அப்படி செல்லும் வேளையில் அவன் அவளது நிறையின்இரண்டு மடங்கை  வெள்ளியிலும் மூன்று மடங்கை தங்கத்திலும் டயர்[Tyre]நகரத்தின்  தாய் தெய்வம் அதிரத்திற்கு [ATHIRAT ]  தனது பயணம் வெற்றிபெறுமாயின் கொடுப்பேன் என சத்தியம் செய்தான்.ஆனால் அவளைமனைவியாக அடைந்த பொழுது,தனது வாக்கை அவன்நிறைவேற்றவில்லை.அதனால் தாய் தெய்வம் அவனை  கடும் நோய்கொடுத்து தாக்கியது என செய்தி பதியப்பட்டுள்ளது.மேலும் உகாரித்இலக்கியத்தில் பால்[Baa] என்றால் நிஜமான தெய்வம்.லிங்க வழிபாடுபோல ஒரு உயிர் பிறப்பிக்கும் சக்தி கொண்ட தெய்வம்.இந்தக் கருத்துW.ராபர்ட்சன் ஸ்மித் எழுதியிருக்கும் Religion of the Ancient Semitesநூலின் மூலம் மேலும் உறுதியாகிறதுபால் கடவுள் பற்றி, “இந்துக்களின்லிங்க வடிவத்தைப் போன்றேகூம்பு வடிவமானசெங்குத்தாக நிற்கும்உருண்டைக் கற்கள் அந்த தெய்வத்தின் சின்னமாக இருந்தன” என்றும்இனப்பெருக்கத்திற்கான ஆண் தத்துவத்தைக் குறித்தன” என்றும் அவர்குறிப்பிடுகிறார்.

 [துலாபாரம்/Tulabharam]
இந்த துலாபாரத்திற்கு ஒத்த குறிப்பு ஒன்று சங்க பாடல்,குறுந்தொகை 292இலும் காணப்படுகிறது.துலாபாரம் என்பது இரு சொற்களின் கூட்டுஆகும்.அதாவது துலா+பாரம் ஆகும் இது காணிக்கை வழங்கும்பொருட்டுஒருவர் ஒரு தட்டில் மதிப்புடைய பொருட்களையும் ஒரு தட்டில் தாமுமாகஇருந்து நிறுக்கும் ஒரு சடங்கு ஆகும்.கேரளத்தில் உள்ள பூழி நாட்டின்[Poozi Nadu] ஒரு பகுதியை நன்னன் என்ற அரசன்ஆண்டுவந்தான்நன்னனது காவல்மரத்து மாம்பழம் ஒன்றை ஆற்று வெள்ளம்ஆடித்துக்கொண்டுவந்தது.அதை ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த ஒருகோசர்குடி சிறுமி தன்னுடன் எடுத்து சென்றுவிட்டாள்மன்னனின்வேலையாட்கள் இந்த "களவைமன்னனுக்கு தெரிவித்தார்கள்உடனடியாகநன்னன் அந்தப் பெண்ணுக்குக் கொலைதண்டனை விதித்தான்.கோசர்குடியினர் நன்னனிடம் முறையிட்டனர்.அவனது மாம்பழத்தைத் தின்றதவற்றுக்காக அவளது தந்தை 81 யானைகளை தண்டமாக கொடுக்கமுன்வந்தார்நன்னன் அதற்கும் அசையவில்லைஇறுதியாக அவளதுஎடைக்கு எடை பொன்னு தருவதாக மன்றாடினான்ஆனால் நன்னன்அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்காமல் அவளைக்கொன்றுவிட்டான்.இந்த கதையை பரணர் குறுந்தொகையில் அழகாகதருகிறார்.இதோ அந்த பாடல் கிழே தரப்படுகிறது.

"மண்ணிய சென்ற ஒண் நுதல் அரிவை
புனல் தரு பசுங்காய் தின்ற தன் தப்பற்கு
ஒன்பதிற்று ஒன்பது களிற்றொடு அவள் நிறை
பொன் செய் பாவை கொடுப்பவும் கொள்ளான்
பெண் கொலை புரிந்த நன்னன் போல
வரையா நிரையத்துச் செலீஇயரோ அன்னை
ஒரு நாள் நகை முக விருந்தினன் வந்தெனப்
பகை முக ஊரின் துஞ்சலோ இலளே."

சுமேரு இலக்கியத் தொகுப்பு கிறிஸ்துக்கு முன் 4000 தில் இருந்துகிறிஸ்துக்கு முன் 1000 ஆண்டு வரை,அதாவது  3000 ஆண்டு நீட்சி/காலஅளவு  உடையது.இதில் மரபு இலக்கிய[முதல் தரமான இலக்கிய நலம்வாய்ந்தகாலம் கி மு3000 தில் இருந்து கி மு2000 ஆண்டுகள் ஆகும்.இங்குதான் கில்கமெஷ் காப்பியம்[கி மு 2000-1400 ],கேரத் காப்பியம்[கி மு போன்றவை படைக்கப்பட்டது.





0 comments:

Post a Comment