உங்கள் பிள்ளைகளுக்குரிய பொருத்தமான தலைப்பினைத் தெரிவுசெய்து செப்டெம்பர் மாதம் முதல் வாரம் இடம்பெற இருக்கும் பேச்சுப் போட்டிக்கு த்தயார்படுத்தும்படி பெற்றோர்களிடம் கழகம் கேட்டுக்கொள்கிறது.
உங்கள் பிள்ளைகளின் பாடசாலை இறுதியாண்டின் [JUNE] '' றிப்போர்ட் கார்ட் '' இனை பேச்சுப்போட்டிக்கு சமர்ப்பித்து தவறுகள் தவிர்த்துக்கொள்ள ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். நன்றி.
-நிர்வாகம்
பேச்சு ப்போட்டி -2018
வகுப்பு: kg கட்டணம் :$5.00
எனது பாடசாலை
எனது பாடசாலை.அது ஒரு ஆரம்பப் பாடசாலை. நான் பாலர் வகுப்பில் படிக்கிறேன். என்னுடன் பல மாணவர்கள் படிக்கிறார்கள். அங்கு பல வகுப்பறைகள் உண்டு. பல ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
எனது ஆசிரியர் பண்பானவர். பாசமுடன் எம்முடன் பழகுவார். அன்புடன் பாடங்களைச் சொல்லித்தருவார்.
என்னுடன் பல நாட்டு மாணவர்கள் கல்வி கற்கிறார்கள். அவர்கள் நட்புடன் பழகுவார்கள். சில நேரங்களில் நாங்கள் சேர்ந்து விளையாடுவோம்.
எனது பாடசாலை எனக்கு மிக மிக விருப்பமானது. நான் ஒழுங்காகப் பாடசாலை செல்வேன்.படிப்பேன்.பெரியவர் ஆவேன்.அது உறுதி.
நன்றி-வணக்கம்
=============================================
வகுப்பு :1&2 கட் டணம் :$5.00
எனது மொழி
நான் ஒரு கனடியன். எனது பாட் டன் ,பாட்டி தாய் மொழி தமிழ். எனது அப்பா ,அம்மா தாய் மொழி தமிழ். நான் அவர்களின் பிள்ளை. ஆகவே எனது மொழியும் தமிழே!
ஒருவர் பல மொழி படிக்கலாம். பழமொழி பேசலாம். ஆனால் தன் தாய் மொழி பேச முடியாதவன் ஊமையே ! தன்னேயே தொலைத்தவரே ஆவார்.
இது என்னுடைய உடம்பு. இவர்கள் என்னுடைய பெற்றோர்கள். இவை என்னுடைய உடைகள். என்னுடைய விளையாட்டுப் பொருட்கள் இருக்கின்றன. அதேபோல் என்னுடைய மொழி தாயின் மொழி.அதுதான் தமிழ் மொழி. அதனை நாம் மறக்கலாமா? மறந்தால் வெட்கமில்லையா?
தலைக் குனிவு இல்லையா?
எனவே ஆங்கிலம், பிரஞ்சு மொழிகளுடன் தமிழ் மொழியையும் கற்போம். தரணியில் உயர்வோம்.
நன்றி-வணக்கம்.
=============================================
வகுப்பு:3&4 கட் டணம் :$5.00
நவராத்திரி
அம்மனுக்குரிய விழாக்கள் பல இருந்தாலும் அவற்றுள் சிறப்பானது நவராத்திரி விழாவாகும். இவ்விழா ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகின்றது. இங்கே நவம் என்பது ஒன்பது ஆகும்.
இந்த ஒன்பது நாட்களில் முதல் மூன்று நாட்களும் துர்க்கை அம்மனுக்கு விழா எடுக்கப்படுகிறது. துர்க்கை அம்மன் வீரத்தின் தெய்வமாகத் துதிக்கப்படுகின்றாள்.
இடை மூன்று நாட்களும் இலட் சுமி வழிபாடு இடம்பெறுகிறது. வீரத்தின் அதிபதியாக லட் சுமி வணங்கப் படுகின்றாள்.
கடைசி மூன்று நாட்களும் கல்வியின் தாயாம் சரஸ்வதி அதவாது கலைவாணி வழிபாடு செய்யப்படுகிறது.
இலங்கை, இந்தியா,சிங்கப்பூர்,மலேசியா ஆகிய நாடுகளில் பல்லாண்டு காலமாக ஆலயங்கள்,பாடசாலை,வீடுகள் அனைத்திலும் நவராத்திரி விழா ஒன்பது நாட்களும் வெகு சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.
நாமும் இப் பெரு விழாவில் இறைவிகளை வணங்கி நல்வாழ்வு வாழ்வோமாக!
நன்றி-வணக்கம்.
-===============================================
வகுப்பு:5,6 கட் டணம் :$5.00
இளமையில் கல்வி
மனித வள மேம்பாட்டுக்கும் , மனித வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக அமைவது கல்வி ஆகும். அக் கல்வியினை எமது இளமைப் பருவத்திலேயே ஊ ட் ட வேண்டும். எம் நெஞ்சில் அவை ஆழப் பதியும் என்பதாலேயே ''இளமையில் கல்வி சிலையில் எழுத்து '' எனப் எம் பெரியோர்கள் கூறி யுள்ளனர்.
இளமையில் கல்வி என்பது கற்போர் நெஞ்சில் அவை விதைகளாக விதைக்கப்பட்டு இலகுவாக மூளையில் வேரூன்றி விடும். ஆதலால் பல்கலைக் கழகம் சென்று பட் ட தாரிகளாக வெளிவந்த பின்னரும் எம்மைத் திறமை சாலிகளாக மிளிரச் செய்கிறது.
வறுமையான குடும்பத்தில் பிறந்தவன் ஏபிரகாம் லிங்கன். அவன் தனது இளமைப் பருவத்தில் படிக்கவென்று ஆர்வம் கொண்டான். வீதி விளக்கில் படித்துப் பெரும் அறிஞன் ஆனான். அதனால்தான் அமெரிக்காவின் அதிபர் ஆனான்.
எனவே எமது இளமைக் காலத்தை வீணே கழிக்காது
*கல்வி என்பது மனித உருவாக்கல்,
*கல்வி என்பது நன்னடத்தை,
*கல்வி என்பது வாழ்க்கை,
என்று சுவாமி விவேகானந்தர் கூறிய கல்வியினை இப்பொழுதே கவனமாகக் கற்று வருவோமானால் சான்றோர்கள் பலராலும் நாம் பாராட் டப்படும் நிலையினை இலகுவாக அடைவதுடன் நாமும் எதிர்காலத்தில் பெரியோர்கள் மத்தியில் சமமாக மதிக்கப்படுவோம்.
நன்றி-வணக்கம்
============================================
வகுப்பு: 7&8 கட் டணம் :$5.00
சொல்லொழுக்கம்
மனிதப் பிறப்பு மேலானது. உயர்வானது. காரணம் அவனது பேச்சாற்றலின் வளர்ச்சி. மிருகங்களும் பறவைகளும் ஒலி மட்டுமே எழுப்புகின்றன. ஆனால் மனிதனின் குரல் ஒலிப்பது மட்டுமல்ல ,பேசவும் முடிகிறது.சிரிக்கவும் செய்கிறது. கருத்துக்களைப் பரிமாற முடிகிறது. இதனால் பல கடமைகள் செயல்படுத்தப் படுகின்றன.
ஒரு செயலுக்காகப் பேச வேண்டுமெனில் அப்பேச்சுக்கு நற்பண்பு வேண்டும். இல்லையேல் அது வன்சொல் எனப்படும். வன்சொல் வன்முறைக்கே வழி சமைக்கும்.
நற் பண்பிலிருந்து விலகாத சொற்கள் பேசுவோனுக்கு அது நன்மை கொடுக்கும் என்கிறார் வள்ளுவர்.
மேலும், யாரிடத்தில் பேசினாலும் எந் நிலையிலும் இனிமையான சொற்களைப் பாவியுங்கள். அது பேசுபவனை நாகரீகம் உடையவனாக உலகத்தில் உணர்த்தும்.
நற் பண்பு உள்ளவனாகக் காட்டி நிற்கும்.என்கிறது குறள் .
மனித உறவு என்பது நாம் பேசும் வகையிலேயே தங்கியுள்ளது. நண்பர்கள் தானே என்று கேலி செய்யக்கூடாது. பகைவர்கள் என்றாலும் பழித்துக் கூறக் கூடாது. ஒருவனை இகழ்ந்து கூறுதல் விளையாட்டிலும் துன்பமே தரும்.
கேலிப் பேச்சு கேட்டையே கொடுக்கும். இழிச்சொல் இயம்பாதாருக்கு இனம்,சனம் பெருகும். மதிப்பு உயரும்.
நாகாக்க என்பது பொய்யாமொழிப் புலவரின் எச்சரிக்கை. எனவே எம்மைக் காக்க, எம்வாழ்வை வளமாக்க எம் நாவினை நல் நாவாய் நடத்துவோம். இன்பமாக வாழ்வோம்.
நன்றி-வணக்கம்
==================================
குறிப்பு: பெற்றோர்களே! கலந்துகொள்ளும் உங்கள் பிள்ளைகளின் விவரத்தினை 416-792 1829 இலக்கத்தில் அழைத்து [பிள்ளைகளின் முழுப் பெயர், ஜூன் இல் கற்று முடிந்த வகுப்பு] ஒலி ப்பதிவு செய்வதன் மூலம் போட்டி நாளில் நேர விரயத்தினை தவிர்த்துக் கொள்ளலாம்.நன்றி.
No comments:
Post a Comment