வழித்துணையாய் வழிகாட்டும்
உயிர் சுமந்த மெய்!
கோபப்பட்டு வீசினாலும்
வேதனை தந்திடாது
இனிக்கும் சுகம்
தரும் மனமே!
மனதில்
சங்கடங்களை புதைத்து
மகிழ்வை மகிழ்ந்து
விற்பனை செய்யும்
மதியே!
தன் பிள்ளையின்
வாடிய முகம் கண்டால்
தன்னில் உணர்வுகளை
அடக்கி வைத்து
மதி மயக்கும் அழகி!
உயிர்களுக்கு அமுதமாகி
உலகிற்கு
காதல் கொடுக்கும்
வலிமையின் ஊற்றே!
பணி செய்யும்
தேவதையாய் என்
வாழவே வளர்ச்சியில்
புன்னகையை சிந்தும்
தெய்வமே என் தாய்!
- காலையடி,அகிலன்.
0 comments:
Post a Comment