மனைவியிடம் கணவர் சொல்லும் பத்து பொய்கள்..!


உலகில் பொய் சொல்லாத மனிதரே இல்லை. எவராக இருந்தாலும் ஏதேனும் ஒரு சூழலில் பொய் சொல்லித்தான் ஆக வேண்டும். இதை பொய் என்பது ஒருவிதம், உண்மையை மறைப்பது என்பது இன்னொரு விதம். நீங்கள் கேட்கலாம் இரண்டிற்கும் என வித்தியாசம் இருக்கிறது என்று. இருக்கிறது, ஒரு உதாரணம் மூலமாக சொல்லலாம். நான்கு குழந்தைகள் விளையாடும் பொழுது ஒருவருடைய பொம்மையை மற்றோருவர் எடுத்து மறைத்து வைத்து விட்டு, நான் எடுக்கவில்லை என்றால் அது பொய். பொம்மையை வைத்திருந்த குழந்தை தேடும் பொழுது, மூன்றாவது குழந்தை பொம்மையை எடுத்து சென்ற குழந்தையை காட்டி கொடுக்காமல் அமைதியாய் இருந்தால் அது உண்மையை மறைப்பது. பெரும்பாலும் கணவர் எங்கு பொய் சொல்கிறார்கள், எங்கு உண்மையை மறைக்கிறார்கள் என்று பார்ப்போம்.

1 உங்கள் ஆடை, ஆபரணங்கள் விஷயத்தில்

பெண்களுக்கு எப்போதும் ஆடை, ஆபரணங்கள் மீது தனி ஈடுபாடு உண்டு. ஒரு திருமணத்திற்கு நீங்கள் கிளம்பும் பொழுது, இந்த ஆடை எனக்கு எப்படி இருக்கு என்று கேட்டால், அவ்வளவாக நன்றாக இல்லை என்றால், நீங்கள் வருத்தப்படுவீர்கள் இல்லை என்றால் மாற்றிக்கொள்ள செல்வீர்கள். அவ்வளவு பொறுமை அவர்களுக்கு கிடையாது. எனவே மிக அழகாக இருக்கிறது என்று சொல்லிவிடுவார்கள். அதற்காக உங்கள் அழகை பற்றி கவலைப்படுவதில்லை என்று அர்த்தம் இல்லை. என்றுமே என் மனைவியின் அழகை நானே ரசிக்க வேண்டும் என்ற எண்ணமும் மறைந்திருக்கிறது.

 2 நான் 10 நிமிடத்தில் கிளம்பிவிட்டேன்

நீங்கள் பண்டிகை காலங்களில் ஆடைகள் வாங்குவதற்காக மாலை வேளையில் கடைக்கு செல்ல இரு தினங்களுக்கு முன்பே முடிவு செய்கிறீர்கள். உங்கள் கணவர் அலுவலக பணிகள் முடிந்து வந்தவுடன் போக காத்திருக்கிறீர்கள். அன்று உங்கள் கணவருக்கு அலுவலக பணி அதிகமாக இருக்கிறது மற்றும் அவர் மேலதிகாரி அவருக்கு எதோ அவசர வேலை கொடுத்திருக்கிறார். அதை உங்களிடம் சொன்னால் பிரச்சனை வரும் என கருதி அவர் சொல்ல ஆரம்பிப்பது, இதோ நான் 10 நிமிடத்தில் கிளம்பிவிட்டேன் என்பது. இப்படியே பத்து பத்து நிமிடமாக 1 மணி நேரம் போய்விடும்.

 3 எதையும் நான் செய்வேன்

ஆண்களுக்கு எப்போதுமே பெண்களிடம் ஒரு கர்வம் இல்லை தலைக்கனம் என்றே சொல்லலாம். என்னால் எந்த ஒரு சூழ்நிலையும் சமாளிக்க முடியும், மிக மோசமான பிரச்சனைகளை கூட. உதாரணமாக, உங்கள் வீட்டின் குழாய் சரி செய்ய வரச்சொல்ல வேண்டும், இரு தினங்களாக உங்கள் கணவரிடம் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். அவர் வேலை சுமையின் காரணமாக மறந்துவிடுகிறார். அப்போது உங்களிடம் சொல்லவில்லை என்று சொன்னால் அவர் கர்வம் போய்விடும், உடனே உங்களிடம் நான் சொல்லிவிட்டேன். நாளை வருவார்கள் என்று பொய் சொல்வது.

 4 இது என்னுடைய பிரச்சனை

உங்கள் கணவர் எதாவது ஒரு பிரச்சனையின் காரணமாக வருத்தமாய் இருக்கும் பொழுது, நீங்கள் கேட்டல் ஒன்றும் இல்லை என்பார். கொஞ்சம் அழுத்தம் கொடுத்து கேட்டல், இது என்னுடைய பிரச்சனை நானே சரிசெய்து கொள்வேன் என்பர். அவர் அதை உங்களிடம் சொல்லி உங்களை வருத்தப்பட வைக்க வேண்டாம் என்பதற்கான பொய் அது.

 5 நான் உன்னை கைபேசியில் அழைத்தேன்

நீங்களும் உங்கள் கணவரும், அவருடைய அலுவலகம் முடிந்ததும்  திரைப்படத்திற்கு செல்ல முடிவு செய்திருப்பீர்கள். உங்கள் கணவரே உங்களை வந்து அழைத்து செல்வதாய் கூறி இருப்பார். நீங்கள் உங்கள் கணவரின் கைபேசி அழைப்புக்காக காத்திருக்கிறீர்கள். உங்கள் கணவர் வேலை சுமையில் அதை மறந்து கால தாமதமாக வீட்டுக்கு வரும் பொழுது, அவர் மறந்ததை காட்டி கொள்ளாமல் நான் உன் கைபேசிக்கு அழைத்தேன், ஆனால் அது தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக கூறியது என்பர்.

 6 உங்களுக்கு விருப்பம் இல்லாதவற்றை வேண்டாம் என்பது

 உங்கள் கணவருக்கு அவர் நண்பர்களுடன் சுற்றுலா செல்ல வேண்டும். உங்களிடம் கேட்கும் பொழுது, நீங்கள் வேண்டாம் என்று சொல்கிறீர்கள். அவரும் அதை ஏற்று கொள்வதாய் சொல்லிவிட்டு, இரவு தூங்கும் வேளையில் என்னை மிகவும் கட்டாயப்படுத்தி அழைக்கிறார்கள் என்று உங்களின் மனதை மாற்ற முயற்சிப்பது.

 7 நான் அவளை பார்க்கவில்லை

நீங்களும் உங்கள் கணவரும் வெளியில் சென்றிக்கும் பொழுது, உங்களை ஒரு அழகான பெண் கடந்து சென்றால், உங்கள் கணவர் அந்த பெண்ணை உற்று நோக்குவதை நீங்கள் கண்டுபிடித்துவிட்டால், உடனே உங்கள் கணவர், நான் அவளை பார்க்கவில்லை. நான் அவள் அணிந்திருந்த ஆடை அழகாக இருந்தது. உனக்கு வாங்கலாம் என்பதற்காக அவள் ஆடையையே பார்த்துக்கொண்டிருந்தேன் என்பர்.

 8 அவள் என் முன்னாள் காதலி

எப்பொழுதும் உங்கள் கணவர், அவருடைய முன்னாள் வாழ்க்கையை பற்றி ஏதும் உங்களிடம் கூறி இருக்கமாட்டார். எல்லா ஆண்களுக்கும் திருமணத்திற்கு முன்பு எப்படியும் ஒரு காதல் இருந்திருக்கும். அவர் பொய் சொல்லியிருக்கமாட்டார் ஆனால் மறைத்திருப்பர். அதை பற்றி மனைவியிடம் உண்மையை சொல்லும் கணவர் மிக நேர்மையானவர். ஆனாலும் அதை பற்றி மனைவியிடம் பகிர்ந்துகொள்ள விரும்பமாட்டார்.

 9 நான் தான் சிறந்தவன்

தான் தன் மனைவியை விட சிறந்தவன் எனும் கர்வம் எப்போதும் ஆண்களின் மனதில் வேரூன்றி இருக்கும். அவர்கள் எப்போதும் உன்னை விட  நான் சிறந்தவன் அல்லது நான் தான் அறிவாளி என்று கூறிக்கொள்வதுண்டு. ஆனால் அவர்களுக்கும் தெரியும் அது பொய் என்று.

10 நான் எப்போதும் உண்மையை மட்டுமே பேசுவேன்

நான் எப்போதும் பொய் சொல்லமாட்டேன். இதுவே அவர் சொல்லும் மிக பெரிய பொய். அவர் உங்களிடம் எதாவது பொய் சொல்லியிருக்கலாம். ஆனால் அது பொய் என்று தெரிந்தால் நீங்கள் வருத்தப்படுவீர்கள் என்று அந்த சூழ்நிலையை சமாளிக்க பொய் சொல்வது. அப்போது தான் நான் பொய்யே சொல்லமாட்டேன் எனும் வாசகமும்.


மெய்யும், பொய்யும் கலந்ததே மனித வாழ்கை. பொய் பேசுபவன் கெட்டவனும் இல்லை, உண்மையை பேசுபவன் நல்லவனும் இல்லை. உண்மை பேசி தீமையை விளைவிப்பதை விட தக்க தருணத்தில் பொய் பேசி அதிலிருந்து காப்பது நன்மை பயக்கும். உங்கள் கணவர் சொல்லும் சின்ன பொய்களை கூட ரசிச்சு பாருங்க, அப்புறம் உங்க வாழ்க்கையே உங்களுக்கு இனிமையானது இருக்கும்.
               நன்றி-புஷ்பா,ராஜ்                   

No comments:

Post a Comment