அச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன?

நமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம்மடம்நாணம்பயிர்ப்புஎன்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்றுவலியுறுத்தப் பட்டிருக்கிறதுஇச்சொற்களின் சரியான அர்த்தம்என்னவென்று விளக்கமே இல்லாமல்நம் முன்னோர்கள் சொன்னார்கள்,ஆகவே அது சரியாய்த்தான் இருக்கும் என்ற முடிவுடன்,கிளிப்பிள்ளைபோல்நாங்கள் பேசித்திரிவது வழக்க்கமாய் போய்விட்டதுசரிஇந்தக் குணங்களின்அர்த்தம்தான் என்னஒருமுறை கிளறி அறிவோமாஅறிந்ததும் பலர்வியப்பில் ஆழ்வீர்கள்!
அச்சம்:
பெண் பயப்பட்டுக் கொள்ள வேண்டுமாம்எல்லாவிடயங்களிலுமாகருத்து சொல்கிறார்கள்,அச்சம் கொள்ள வேண்டியவற்றிற்கு மட்டும்அச்சம் கொள்ளவேண்டும் என்றுஉதாரணமாக,ஒரு களவு செய்யபொய் சொல்ல அச்சம்கொள்ளவேண்டும்ஆஹாநல்ல புத்திமதிதான்!
அப்படி என்றால்ஆண் மட்டும் அச்சப்படவேண்டியவற்றிற்கு ஒதுங்கி இருக்காமல்,மோட்டுத்தனமாக உள் நுழைதல் ஆணுக்கு ஏற்றநல்ல குணமாஅவன் களவும் பொய்யும் சொல்லலாமா?
மடம்:
பெரியோர்அதாவது மூத்தோர்பெற்றோர்கணவன் ஆகியோர் காட்டும்வழியில் தவறாது செல்லும் மனப்பாங்குஅவள் எவ்வளவு அறிவு ஜீவியாய்இருந்தாலும்தனது சுய புத்தியை ஒருபோதும் பாவிக்காதுஒருமுட்டாளாட்டம்பெரியோர் என்ன செய்யச் சொல்லிப் பிதற்றினாலும்,தட்டாது மனப்பூர்வமாகச் செய்து முடிப்பவளே ஒரு பூரணமான பெண்ணாம்!.
அப்படி என்றால்ஆண் மடம் உள்ளவராய் இருக்கத் தேவை இல்லையா?அவன் பெரியோர் சொல் கேட்கத் தேவை இல்லையா?
நாணம்:
வெட்கப்படுதல்எதன்பால் வெட்கப்படுதல்பலர் முன் நிற்கவா அல்லதுவீட்டில் உள்ள கணவன் மற்றும் பெரியோர்களுக்காஅன்றேல் எதைக்கண்டாலும் வெட்கப்படுவதாயார் அறிவர்!பொருள் கூற வரும்கல்விமான்கள் அவள் செய்த பிழைகளைக் கண்டு வெட்கப்படுதல் என்றும்விளக்கம் கொடுப்பார்அல்லது உடைக் குறைவையும் சுட்டிக்காட்டலாம்.அல்லதுவெட்கப்பட வேண்டியவற்றிற்கு மட்டும் வெட்கப்படவாஎதுக்கோஅவள் வெட்கப்பட்டுப் போகட்டும்!
அப்படி என்றால்ஆண்கள் மட்டும் ஒன்றுக்குமே வெட்கப்படாமல் படுஜோராய்ச் சுற்றித்திரியலாமா?
பயிர்ப்பு:
இது ஒரு விளங்காத சொல்இதன் சரியான பொருள் அருவருப்புஅசுத்தம்!இது பெண்ணைக் கற்போடு வைத்திருக்க ஆணின் ஒரு சூட்சும வழி.பெண்அருவருப்பான தோற்றம் உள்ளவளாய்-சில வேளை கணவரைத் தவிர்ந்தமற்றையோர் பார்வையில் அசுத்தமானவளாய்இருக்க வேண்டுமோ? (நல்லகாலம்முஸ்லிம் பெண்களின் ஆடை அக்காலத்தில் இல்லை,பெண்தப்பினாள்). ஆனால்இன்னொரு விளக்கம்தான் சரியெனக் கூறுவர்பெண்,தனக்குப் பழக்கம் இல்லாதவர்பால்முக்கியமாக ஆடவர் பால்கட்டாயமாக,காம நோக்கம் கொண்டோர்பால் அருவருப்புக் கொண்டு விலகி இருக்கவேண்டும் என்பதுஅதாவதுஆணுக்குப் பயம் பெண் வேறு ஆண்களைத்தொட்டுப் போடுவாள்கற்பு போய்விடுமே என்று.
அப்படி என்றால்ஆணுக்கு மட்டும் பயிர்ப்பு தேவை இல்லைஅவன்எத்தனை பிற பெண்களுடனும் (ஆண்களுடனும்?) கூடி உல்லாசம்காணலாமா?
இந்த நாற்குணங்கள் கதை எல்லாம் பெண்ணை அடிமையாக வைத்திருந்தஆணாதிக்கத்தின் எச்சங்கள்இவை பெண்ணுக்கு என்றால் அது ஆணுக்கும்பொருந்த வேண்டும்இவற்றின் உண்மையான விளக்கங்கள் மிகவும்கீழ்த்தரமாய் இருந்தாலும்பழம் பெருமை பேசுவோர் தற்காலஒவ்வாமைக்கு அஞ்சிதிரிவு படுத்த பட்ட விளக்கங்கள் கூறி நியாயப்படுத்திக் கொள்ளுவார்கள்.
மணமான பெண்ணை விட்டுக் கணவன் போய் விலைமாதருடன்இருந்தாலும்எத்தனை வருடங்கள் ஆனாலும் அவன் திரும்பி வரும்வரைகற்பைக் காத்து வைத்திருப்பவள் சரித்திர நாயகிதெய்வம்!. தனது நொண்டிக்கணவனின் காம இச்சையைத் தணிக்க விலைமாதரிடம்ஒரு கூடையில்வைத்து சுமந்து கொண்டு சென்றவள் பத்தினிபரத்தைகளுடன் காலம்கழித்தவன் கதா நாயகன்அவனைப் பற்றி இழிவாகச் சொல்ல மாட்டார்கள்.
ஆகவேநம் முன்னோர் சொன்னார்கள்ஆகவே எல்லாமே சரி என்று ஆமாம்போட்டு வாழாதுகொஞ்சம் சுயபுத்தியையும் சேர்த்துச் சிந்தித்துச் செயல்படுத்தல் நவீன தமிழனின் தேவையாகும்.
முடிவில்நல்லது என்று நாம் நினைத்திருந்த நாலு குணங்கள்தான் தற்போதுநம் தமிழ் பெண்களிடம் இல்லாமல் போய்விட்டதேமாறாகவாழ்வுக்குஒவ்வாதசந்தோசத்தைக் குலைக்கும்மன அழுத்தத்தை அதிகரிக்கும் பலநவகால (துர்க்குணங்கள் எங்கள் பெண்கள்பால்,அவர்கள் வாழ்வில்,படிப்பில்உழைப்பில்உடுப்பில்நடிப்பில் ஒட்டிக்கொண்டு விட்டதேஅவைஎன்ன என்று இன்னொரு முறை சம்பாஷிப்போம்.
  ஆக்கம்:செல்லத்துரை சந்திரகாசன்
(இத் தலைப்பின் சம்பந்தமாக மேலும் வாசிப்பதற்கு 11ஜூலை,2018 ற்கு செல்லுங்கள்.)

0 comments:

Post a Comment