எந்த ஊர் போனாலும் தமிழன் ஊர் [அச்சுவேலி] போலாகுமா?


இந்து சமுத்திரத்தின் சொர்க்க புரியாகிய ஈழத்திரு நாட்டின் தனித்தமிழர் தாயகமாய்த் தனிச் சிறப்புப் பெற்ற திடல் யாழ் பூமி. கடல் அலைகள் தாலாட்டக் களிப்புடனும் வனப்புடனும் வாழ்ந்திருந்த யாழ்ப்பாணமும் அதன் கண் அமைந்துள்ள கிராமங்களும் யுத்த அரக்கனின் கரங்களில் சிக்குண்டு சின்னா பின்னமாகிச் சிதிலமடைந்த கதை உலகறியும். 
முருகன் ஆலயம் -அச்சுவேலி 
போர்க் காலத்தின்முன் வரையிலும் யாழ் மண்ணின் ஒவ்வொரு கிராமமும் தன்நிறைவு பெற்று வாழ்ந்ததெனில் அது மிகையாகாது. அவ்வாறு பெயர்பெற்று, புகழ்பரப்பிப் பெருமையுடன் வாழ்ந்த கிராமங்களில் அச்சுவேலி (Atchuvely) ஒன்று என்பது யாவரும் அறிந்த உண்மை.

அச்சுவேலி என்பது இலங்கையின் வட மாகாணத்தில்
அந்தோனியார் கோயில்
யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் கிழக்கு பகுதியில் உள்ள கிராமமாகும். இதன் உப பிரிவுகளாக இடைக்காடு
, வளலாய், தம்பலை, பத்தமேனி, கதிரிப்பாய் போன்ற கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளன. இக்கிராமத்தின் வடக்கே தொண்டைமானாறும், தெற்கே ஆவரங்காலும், மேற்கே ஓட்டகப்புலம், வசாவிளானும், கிழக்கே வல்லை கடலின் தொடர்ச்சியுடன் கூடிய பரந்த வயல் வெளியும் பற்றைக் காடுகளும் காணப்படுகின்றன.

இங்கு வசிப்பவர்கள் பெருமளவு விவசாயப் பின்னணியை கொண்டவர்களாகவே காணப்படுகின்றனர். இந்து, கிறித்தவ மதங்களை பின்பற்றி வருகின்றனர். பல இந்து ஆலயங்கள் காணப்படுவதுடன் இரண்டு கிறித்தவ தேவாலயங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

அச்சுவேலி – காரணப்பெயர்
அச்சுவேலி பேருந்து நிலையம் 
அச்சுவேலி என்னும் எழில் கொண்ட கிராமம் முக்கனியின் சாறெடுத்து முத்தமிழின் தேனெடுத்து எத்திசையும் புகழ் பரப்பி, மறை பரப்பி, எழில் கொண்டு கலைமகளும் திருமகளும் கலந்து உறைந்த செம்மண் பூமி. அச்சுவேலி ஒரு காரணப் பெயர் என்று சொல்பவர்களுமுண்டு. அதாவது யாழ்நகரில் இருந்து பருத்தித்துறைக்குச் செல்லும் பெருந்தெரு
அச்சுவேலி முற்சந்தி 
அச்சுவேலியை மையமாகக் கொண்டே செல்கின்றது. இதனால் யாழ்ப்பாணத்தையும் பருத்தித்துறையையும் இணைக்கும் வண்டிச்சக்கர அச்சுப்போல் இக்கிராமம் இருந்து “அச்சுவேலி” என நாமகரணம் பெற்றதென்பது ஒரு வரலாறு.
அச்சுவேலிச்சந்தி ஒரு முச்சந்தி. முச்சந்தியில் இருந்து வீதிகள் பிரதான இடங்களை நோக்கிச் செல்கின்றன. ஒன்று புத்தூர், நீர்வேலி, கோப்பாய் ஊடாகச் சென்று யாழ்நகரை அடைகிறது. அது அச்சுவேலி யாழ்ப்பாண பிரதான வீதி, மற்றது தோப்பு ஊடாகச் சென்று யாழ் நகரை அடையும் இராச வீதி, பருத்தித்துறையை அடைகிறது. வல்வெட்டித்துறைக் கடற்கரை ஊடாக, நெல்லியடி தரைப்பகுதி வழியாக, இப்படியாகப் பல வீதிகள் பருத்தித்துறையை அடைகின்றன.
வல்வெட்டித்துறை வழியாகப் பருத்தித்துறை செல்லும் வீதிக்குச் தனிச்சிறப்புண்டு. தொண்டமானாறு செல்வச் சந்நிதியான் திருத்தல தரிசனம் காணும் பாக்கியம் தான் அது. அந்தக் கடற்கரையும் அண்டியுள்ள தென்னம் தோப்புகளும் இயற்கை எழில் கொஞ்சும் இணையற்ற காட்சி.

பாடசாலைகள்
அச்சுவேலி மத்திய கல்லூரி
அச்சுவேலி சரசுவதி வித்தியாசாலை
புனித திரேசா மகளிர் கல்லூரி

கோயில்கள்
காட்டுமலைக் கந்தசுவாமி கோயில் (அச்சுவேலி தெற்கு)
சித்திர வேலாயுதர் கோயில் (அச்சுவேலி வடக்கு)
மகிழடி வைரவர் கோயில் (அச்சுவேலி நகரப்பகுதி)
பத்தமேனி பிள்ளையார் கோயில் (அச்சுவேலி பத்தமேனி)
சிவசக்தி கோயில் (அச்சுவேலி தெற்கு)
போதிப்பிள்ளையார் கோயில் (அச்சுவேலி தோப்பு)
பயித்தோலை நரசிம்ம வைரவர் கோவில் (அச்சுவேலி மத்தி)
முனியப்பர் கோயில் (அச்சுவேலி வல்லை வீதி)
புனித சூசையப்பர் ஆலயம் (அச்சுவேலி மேற்கு / தென்மூலை)
அந்தோனியார் கோயில் (அச்சுவேலி வடக்கு)
புரட்டத்தாந்து ஆலயம் (அச்சுவேலி நகரப்பகுதி)
அச்சுவேலியைச் சேர்ந்த பெரியார்கள்
சுவாமி ஞானப்பிரகாசர் (வளர்ந்தது)
பாவலர் தம்பிமுத்துப்பிள்ளை
சேர் சிற்றம்பலம் கார்டினர்
பேராசிரியர் நந்தி
பேராசிரியர் பாலசுப்ரமணியம்
அச்சுவேலிப் பகுதிகளிலிருந்து பலர் மேற்கத்தியநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தம் ஊரில் கொண்ட அக்கறை அவ் ஊரினை பழைய நிலைக்கு உயர்த்திக்கொண்டிருக்கிறது என்பது அவர்களின் வளர்ச்சியின் மூலம் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.
 குறிப்பு:மாத மொரு முறை முதல் வாரத்தில்வெளியாகும் இப்பகுதியில்  உங்கள் ஊரும் இடம்பெறும். தொடர்புகளுக்கு, s.manuventhan@hotmail.com

0 comments:

Post a Comment