நிராகரிப்பு செய்து தள்ளி விட்டால்
நிலைமையை எண்ணி கலங்காதே
கரைந்து போகும் கண்ணீரில்
கலைந்து போகும் கனவுகளில்
விவேகமாய் செயல்பட்டு விடு
உனக்கு தந்துவிடும் உறுதியை!
திக்கற்ற பயணங்களில்
களைப்புறும் பொழுதுகளில்
எதுவும் செய்ய இயலாத கணம்
காட்டப்படும் மறுப்புகள்
உன்னை தீண்டி விட்டால்
வேட்கை சுடரை அணையாமல் தாங்கிவிடு
நிராகரிப்புகளும் மரணித்து போய்விடும் ஓர்நாள்!
திடமான மனதிலே மகிமை இருக்குதடா
திடம் குன்றிய மனங்களால்
திசை மாறி போகும் வாழ்வு
திடம் குன்றாது நிராகரிப்புகளை
தவிடு பொடியாக்கிவிடு
தீர்ந்திடும் துன்பம் எல்லாம்!
நிராகரிப்போர் மீது கருணை கொண்டால்
நலிந்த உயிர்கள் பல உயிர்த்து எழும்
நிராகரிப்புகளை நிறுத்தி விடுவோம்
நலிந்த உயிரை காத்துவிடுவோம்!
-காலையடி,அகிலன் .
No comments:
Post a Comment