முதியவனாகி
தனிமை வந்ததும்
பாசத்தை தேடுகிறேன்
உறவுகளுடன் உறவாடிய
நினைவுகளையும் தேடுகிறேன்!
குழந்தைகளிடம்
அன்பு உறைந்து இருக்கிறது.
அதை பெறவே
என்னுடைய
மனமும் தவிக்கிறது!
அருகில் வந்து
குழந்தைகளோடு குலவி
மகிழ்ந்து விட ஆசை!
குழந்தைகள் செய்யும்
குறும்புகளை எண்ணி
ரசித்திட ஆசை!
திமிர் விருப்பு வெறுப்பை
விட்டு க்கொடுத்து
அன்பால் உள்ளம்
நிறைத்திட ஆசை!
குழந்தைகளுடன் தோற்று
அவர்களின் குதூகளிப்பினை
நேசிக்க ஆசை!
முதுமையில்
இயலாமை வாட்டுதே
கடந்த அழகிய காலங்களைக்
கண்ணீராய்க் கரைத்தாலும்
நான் குழந்தையாக இருக்கையிலே
பாசத்தை கொடுக்க மறந்து
அதற்கான வாய்ப்பினைத்
தவறவி ட் டத னாலோ
தனிமையின் முதுமையிலே
பாசத்தின் விருப்பாலே
பைத்தியம் பிடிக்கிறதே !
ஆக்கம்:காலையடி,அகிலன்.
No comments:
Post a Comment