vikram (பிறப்பு. கென்னடி ஜான் விக்டர், 17 ஏப்ரல், 1966) தமிழ்த்
திரைப்படங்களில் பிரதானமாக தோன்றும் ஒரு இந்திய நடிகர் ஆவார். இவர் இந்திய
திரைப்படத் துறையில் பணி புரிந்த வரையில் 7 பிலிம்பேர் விருதுகள் பெற்றுள்ளார்.
அது மட்டுமின்றி சிறந்த நடிகருக்கான ஒரு தேசிய விருதும் தமிழ் நாடு மாநில விருதும்
பெற்றுள்ளார். இவருக்கு மிலான் பல்கலைக்கழகம் 2011ஆம் ஆண்டு மே மாதம் அன்று கௌரவ
டாக்டர் பட்டம் வழங்கியது. தனது நடிப்பாற்றல் மூலமாகத் தமிழ்த் திரையுலகில்
முன்னணி இடம் வகிக்கும் நடிகருள் இவரும் ஒருவர்.
விக்ரம் 1990ஆம்
ஆண்டு வெளியான என் காதல் கண்மணி என்னும் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின்
குறைந்த பொருட்செலவில் ஆக்கப்பட்ட படங்களில் நடித்து வந்துள்ளார். இவற்றுள் பல
திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடையவில்லை. இவர் நடிக்க தொடங்கி ஒன்பது
வருடங்களுக்குப் பின் வெளிவந்த சேது என்னும் படத்தின் மூலம் திரையுலக ரசிகர்களின்
கவனத்தை தன் பக்கம் திருப்பினார். இப்படமே இவரின் திரை வாழ்க்கையை அடுத்தக்
கட்டத்திற்கு கொண்டு சென்றது. இந்த வெற்றிக்குப் பின் தில், ஜெமினி, தூள், சாமி போன்ற
வெற்றிமிக்க படங்களில் நடித்து மானா வாரியான ரசிகர்களை தன் வசம் ஈர்த்தார். இவர்
காசி எனும் படத்தில் பார்வை அற்றவராக நடித்து திரை விமர்சகர்களின் பாராட்டைப்
பெற்றவர். பின்னர் பிதாமகன் படத்தில் வெட்டியான் கதாப்பாத்திரத்தை தத்ரூபமாக
வெளிக்கொணர்ந்து தேசிய விருது பெற்றார். அதன் பின் அந்நியன் என்னும் பிரம்மாண்டமான
படத்தில் பிளவாளுமை குறைபாட்டுப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பிராமணராக
நடித்தார். இப்படம் பொருளவில் அதிக வருவாயும் நல்ல விமர்சங்கனளையும் பெற்றுத்
தந்தது.
விக்ரம் வெவ்வேறு
சமூக நிகழ்ச்சிகளை முன் நின்று நடத்தயுள்ளார். இவர் ஐக்கிய நாடுகளின் குடிசார்
அமைப்பின் தூதர். சஞ்சீவனி அறக்கட்டளையின் தூதுவராகவும் வித்யா சுதா, என்னும் மாற்றுத்
திறன் பள்ளியின் தூதுவராகவும் உள்ளார். காசி கண் நலப்பணியின் வேளையிலும் தன்னை
ஆட்படுத்திக் கொண்டார். விக்ரம் நிறுவனம் மூலம் பல நலத் திட்டங்களை செயல்படுத்தி
வருகிறார்.
இளமை
விக்ரம், ஜான் விக்டருக்கும்
ராஜேஸ்வரிக்கும் தமிழ் நாட்டில் உள்ள சென்னையில், 17ம் ஏப்ரல் 1965
அன்று நடுத்தர குடும்பமொன்றில் பிறந்தார். இவரது இயற்பெயர் கென்னெடி ஆகும். இவரது
தந்தை வினோத் ராஜ் என்றழைக்கப்படும் ஆவார். அவர் தந்தை ஒரு முன்னாள் இந்திய ராணுவ
வீரர். தற்போது திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார்.
இவரது தாய் இராஜேசுவரி துணை ஆட்சியராய்ப் பணியாற்றியவர். விக்ரமுக்கு அனிதா என்கிற
தங்கையும் அர்விந்த் என்கிற தம்பியும் உள்ளனர்.
விக்ரம்
ஏற்காட்டிலுள்ள மாண்டபோர்ட் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பைத் தொடங்கினார்.
பள்ளிப் பருவத்திலேயே கராத்தே கலையோடு நீச்சல் விளையாட்டையும் கற்றுத் தேர்ந்தார்.
திரைப் படங்களில் நடிக்கும் ஆர்வமிருந்தும் இவரது தந்தையாரின் கட்டாயத்தால்
முதுகலை வணிக மேலாண்மை படிப்பை இலயோலாக் கல்லோரியில் படித்து முடித்தார்.
இவர் கல்லூரியில் படிக்கும்போது பெரு வாகனம்
மோதியதால் மிகுந்த காயமடைந்ந்தார். மூன்று வருடம் மருத்துவமனையிலிருந்தார். தன்
கால் செயலிழக்காமலிருக்க இருபத்து மூன்று அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டார்.
கலைப் பணி

'தெய்வத்திருமகள்' திரைப்படத்தில் ஆறு
வயது சிறுவனுக்குரிய மனவளர்ச்சியோடு படம் முழுக்க கிருஷ்ணாவாக வருவார். நீ
யாரென்று விசாரிக்கும்போது ரொம்பவும் சிரமப்பட்டு பெயர், ஊரைச் சொல்லி
"நிலா... நிலா... எனக்கு வேணும் என்று தழுதழுத்த குரலில் கெஞ்சும்போது கூடவே
அவரது கை, கால் மட்டுமல்ல
சைகைகளும் மழலை பேசும். சிறுவர்களைப் போலவே உடையணிந்து அதைக் கையால் இழுத்து
இழுத்து விடுவதும் யதார்த்தம். ஒரு காட்சியில் ஒய்.ஜி.மகேந்திரன், கட்டிலில்
படுத்திருக்கும் விக்ரமின் மீதிருக்கும் போர்வையை கோபமாக எடுத்து கீழே விரித்து
சைகையில் ‘கீழ படு’ என்பார். அதற்கு விக்ரம் கொடுக்கும் ரியாக்ஷன் க்ளாஸ். ஐந்து
வயதுக் குழந்தை சாராவுடன் பாசத்தைப் பரிமாறும் காட்சிகளில் தானும் சகவயதுக்
குழந்தையாகவே மாறியிருப்பார் விக்ரம்.
இதுவரையில் 50 ற்கு மேற்படட திரைப்படங்களில் நடித்ததுடன், சில திரைப்படங்களில் அஜித் குமார் ,பிரபுதேவா ,அப்பாஸ் ,அமர் சித்திக்,சத்யா, ஜே. டி. சக்ரவர்த்தி ஆகிய நடிகர்களுக்காக பின்னனிக் குரலும்
கொடுத்திருக்கிறார்.
ஒரு நீண்ட காலக் கலைப்பயணத்தில் வளர்ந்து நிற்கும் ஒரு தரமான நடிகரின் வரலாற்றினை இன்று நாம் வழங்குவதில் பெருமை அடைகிறோம்.
-தொகுப்பு: கயல்விழி,பரந்தாமன்.
0 comments:
Post a Comment