தன் இளைமையையும் இழந்து விட்டு
தெரு வழியை நோக்கி நிற்கிறாள் அன்புத் தாய்.!
மரம் போல பிள்ளை வாழ்ந்திருக்க
உறவு இன்றி தொடர்பின்றி
தாயோ தனிமையில் சாய்ந்து இருக்க
அன்பால் வீசிய தழும்புகள்
அழுத்தமாக படிந்து அவை
அழியாமல் இருந்தால்
அன்பு ஞாபகங்கள் பிறந்து
மறக்க முடியாத நினைவு வருமென
வரவுகளை எண்ணி காத்திருப்பாள்!
காயங்கள் வருத்தம் உண்டாக்க
வார்த்தைகள் மௌனமாகமாறி
அன்பு சாரல்கள் இடை விடாது துடித்து
நினைவுகளில் மூழ்க செய்ய
இறுக்கமான கவலை வந்தாலும்
முதிமையிலும் உயிர்ப்பு கொண்டு
துன்பங்கள் வந்தாலும்
துளிர் விடும் சக்தி இல்லாமல் போனாலும்
எந்த சுவையும் புரியாமல் போனாலும்
எந்த நிறமும் தெரியாமல் போனாலும்
பிள்ளையின் அன்பான ஆறுதல் வாசம் இல்லாவிடினும்
மேகங்கள் போல
வருத்தம் எல்லாம் கடந்து போகும் என நம்பிக்கை
கொண்டு இருப்பாள்!
காலையடி அகிலன்
அன்புத் தநெஞ்சில் பாசத்தை வைத்து
No comments:
Post a Comment