சந்தர்ப்பவாதமாகிவிட்ட தமிழர் கலாச்சாரம் ...


அன்று சனிக்கிழமைகாலை ஆகையால் நிம்மதியாக என் அறையில் புரண்டு படுத்துக்கொண்டிருந்த நான் பாட்டியின் குரல்கேட்டு திடுக்கிட்டுக் கண்விழித்தபோது மாமாவீட்டில் வசிக்கும் அண்ணாமலைத் தாத்தாவுடன் ரெலிபோனில் பாட்டி அறுத்துக்கொண்டிருப்பதனை உணரமுடிந்தது.

''பங்கயத்தின்ரை பேத்தியும் சாமத்தியப்பட்டுவிட்டாள்'' அண்ணாமலைத்தாத்தா புதினத்தைப் பொழிந்து கொண்டார்.

''அப்ப சாமத்திய வீடு எண்டு செய்வினமே?''

''என்ன கேள்வி பறுவதம்? பங்கயம் செத்தபிறகு அவளின் பிள்ளையள்ஒருத்தருக் கொருத்தர் போட்டியும் பொறாமையுமெள்ளே! அப்ப இனிமேல்இல்லையெண்ட பெரிசாய் எல்லே செய்வினம்.அத்தோட சாமத்தியப் பட்டபிள்ளையெண்டு எங்கட தமிழரின்ரை முறையள் எண்டு சொல்லி பல புதுமைகள் புகுத்தி அதை   கவனமாய் சரியாய்செய்யவேணும் எண்டதிலை கவனமாய் இருக்கினம். ஏன்! பள்ளிக்கூடம் கூடஒரு கிழமை மறிக்கப் போயினமாம்!''


சற்று சிரித்துக்கொண்ட பறுவதம் பாட்டி ''உந்த வேலையளை பார்த்தெல்லே மற்ற நாட்டுக்காரன் சிரிக்கிறான்.இதுக்கை அவங்களை கொண்டாட்டத்திக்குகூப்பிட்டுமெல்லெ எங்கட வேடிக்கையளை   அவைக்கும் காட்டிஅந்தப்பிள்ளையை பள்ளிக்கூடத்திலும்  மற்றவர்கள் பார்த்து பகிடி பண்ணவைக்கினம்.’’

''என்ன பறுவதம் சொல்லுறாய்''

‘’வேறென்ன? மம்மி,டாடி சொல்லுற உந்த இங்கிலிசு பிள்ளைக்கு ஏனாம்தமிழ் முறையள்.பிள்ளையள் பிறந்ததும் அதுகளை இங்கிலிசுக்காராராய்  வளர்க்க விரும்பிற  பெற்றோர்களை நான் குற்றம் சொல்லேல்லை.அப்பிடியே அந்த வழியிலை வளர்க்க வேண்டியது தானே! பிறகேன்இடையிலை தமிழ் தமிழ் எண்டு  முறையள், குறையள். இவையள் இப்பிடித்தான்.வெள்ளைக்காரர் போல் வளப்பினம். பிறகு வெள்ளையள்போல அதுகள் பலரோட  திரிய    வெளிக்கிட்டால் வெட்டிச் சாய்க்க வெளிக்கிடுவினம். ஒன்டில் அந்த வழியில நடக்கவேணும். இல்ல இந்தவழியில நடக்கவேணும். இது இரண்டு தோணியிலை   கால் வைச்சமாதிரியெல்லோ!’’


''அதுசரி பறுவதம்.உதைப்போய் அவையோட கதைக்க முடியுமே!அவையவை உணர்ந்தாச் சரி!''

பாட்டியின் உரையாடல் வேறு பக்கம் செல்லவே நானும் போர்வையினைஇழுத்து நன்றாக மூடிக்கொண்டு மறுபக்கம் புரண்டு படுக்கலானேன்.


                                                                   

0 comments:

Post a Comment