'ஹன்சிகா' வின் 50ஆவது படமும் 80 வயதுப் பாட்டியாக 'சமந்தா' வும்


'ஹன்சிகா' வின் 50ஆவது படம்
ஹன்சிகா நடிக்க இருக்கும் 50வது திரைப்படத்தின் போஸ்டர் மற்றும் படக்குழுவினர் விபரங்களை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.
சின்ன குஷ்பு என செல்லமாக அழைக்கப்படும் ஹன்சிகா இதுவரை 49 படங்களில் நடித்துவிட்டார். தற்போது அவர் நடிக்க இருக்கும் 50வது படத்தின் தலைப்பு மற்றும் படத்தில் பணியாற்றும் குழுவினர் குறித்தும், போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.
80 வயது பாட்டியாக நடிக்கும் சமந்தா
திருமணத்துக்கு பின்பும் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னனி நடிகையாக சமந்தா வலம் வந்துகொண்டிருக்கிறார். பல கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் தற்போது 80 வயது பாட்டியாக நடிக்க உள்ளார்.
சமந்தா திருமணத்திற்கு பின்னரும் சினிமாவில் நடித்து வருகின்றார். திருமணத்திற்கு பின்னர் ரங்கஸ்தலம், நடிகையர் திலகம், இரும்புத்திரை உள்ளிட்ட பல படங்களில் நடித்ததோடு, அது நல்ல வரவேற்பும் கிடைத்தன.
இந்நிலையில் வரும் செப்டம்பர் 18ம் தேதி சீமராஜா, யு டர்ன் ஆகிய இரு படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளன.

தொகுப்பு:கயல்விழி,பரந்தாமன்.

No comments:

Post a Comment