தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?] /பகுதி 20‏



[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
[சுமேரியன் இந்து கடவுள்கள் இரண்டும் இங்கு நன்கு பழக்கப்படுத்தப்பட்டசிங்கத்துடன் காணப்படுவது புதுமையாக உள்ளது /Curiously both Sumerians and Hindu depicted their "gods" taming lions.]

சைவ சித்தாந்தம் தமிழர்களுடைய மதமும் தத்துவமும் ஆகும்.டாக்டர்போப்"சரித்திரத்திற்கு முற்பட்ட மதமாக,சைவம் தென் இந்தியாவில்இருந்து,தமிழ் மக்களின் மனதை கவர்ந்த ஒன்றாக இருந்தது என்றுகூறியுள்ளார்.ஏறக்குறைய கி.மு.3000 ஆண்டு தொடங்கி கி.மு.1500 வரை,இன்று ஈராக் எனப்படும் நாட்டுப் பகுதியில் சுமேரு மொழி பேசிய மக்கள்வாழ்ந்தனர்கடந்த 150 ஆண்டுகளாக பற்பல ஆகழ்வாய்வுகள் செய்து  அறிஞர்கள் பலர் அந்த சுமேரு மக்களின் இலக்கியங்களைவெளிக்கொணர்ந்து வாசித்து பொருளும் கண்டு அச்சிட்டுவெளியிட்டுள்ளனர்.அவற்றில் ஒன்றேஏண் உடு அன்னா[[Enheduanna]] எனப்படும் ஓர் அம்மையார் எழுதிய பாடலாகும்.கொற்றவையே இங்கு'ஈனன்னா'[Inanna] எனப்படுகின்றார் என முனைவர் கி.லோகநாதன்,அறிவியல் பல்கலைக்கழகம்பினாங்கு பல சான்றுகளுடன் கூறுகிறார்.கொற்றவை ஒரு சுயாதீனமான தெய்வம் என்றும் ,பின்னர் சிவாவுடன் இணைந்தார் விவாகம் செய்யப்பட்டார் என்றும் கற்றறிவாளர்கள் கூறுவார்கள்  பிராமண வேதத்தில் சிறந்த/பெரிய   பெண் தெய்வம் என்றபொதுக் கருத்து அங்கு இல்லை ,ஆனால் இந்து சம வெளி நாகரிகத்திலும்,பின்னைய இந்து சமயத்திலும் உண்டு.அஸ்கோ பர்போலா[AscoParpola.] என்ற அறிஞர்  தமது புத்தகத்தில் துர்காவிற்கும் ஈனன்னாவிற்கும் தொடர்புஇருப்பதை எடுத்து காட்டியுள்ளார் .மிக அற்புதமான தெய்வீகப்பாடலாகியஏண் உடு அன்னா எனும் அம்மையாரின் ' ஈனன்னை சீர்பியம்என்ற பாடலைதமிழ் படுத்தி சில குறிப்புக்களையும் தந்து ஓர் விருந்தாகப் படைக்கிறார்முனைவர் கி.லோகநாதன்,இந்த அம்மையார் ஏறக்குறைய கி.மு. 2200வாக்கில் சார்கோன் (Sargon) எனும் பேரசனின் புதல்வியாகவிளங்கியவர்.மேற் கூறிய 'ஈனன்னாபாடலின் மூலத்தை களிமண்வட்டுகளிலிருந்து தொகுத்து எழுத்துப்பெயர்ப்பு மொழி பெயர்ப்புஆகியவற்றை செய்தவர்கள் William W.Halloவும் J.J.A. Van Dijkஎன்பாரும் ஆகும்.'The Exaltation of Inanna' என்பதே இங்குசுமேருத்தமிழில் 'ஈனன்னை சீர்பியம்எனப்படுகின்றது.18 பாடல்களைகொண்டது இது . பிற்காலத்தில் சைவசித்தாந்தமாக வளர்ந்துள்ள சைவத்தின்நல்லவோர் வளர்ந்த நிலையை இப்பாடல்கள் காட்டுகின்றதுஇதின் முதல்பாட்டை மட்டும் [முதல் 8 வரிகளை மட்டும் ] கிழே தருகிறேன்.
"அனைத்து சக்தி அன்னைதெள்ளிய ஒளி வடிவினள்
மிகப் பிரகாச ஒளியையே ஆடையாக தரித்துள்ள அழகிய மாது;
விண்ணிலும் புவியிலும் இருக்கும் அனைத்தாலும் விரும்பப்படுகின்றவள்.
ஆண் எனப்படும் மகாதேவனின் நங்கைசிகையில் பெரும் பெரும்அணிகளை  சூட்டியவள்.
மெய்யான அழகோடு விளங்குபவள்உயர்ந்த பதவிக்கு தகுந்தவள்.
ஏழுவகை மெய்களை கைகளில் (வளையல்களாகஅணிபவள்;[மெய்சக்தி)]
என் அன்னையேபெரும் பெரும் மெய்களை சிரசில் கட்டுபவள் நீயேதான்
அனைத்து மெய்களையும் எடுத்து உடம்பில் அணிகளாய் அணிகின்றாய்:
மெய்களை திரட்டி மெய்யான உன் கவசாக நெஞ்சில் தைத்துக்கொள்கின்றாய்"

மேலே கூறிய பாடலின் முதல் வரியே இன்றளவு 
சைவத்தின் ஓர் கூறாகஇருக்கும் மெய்ஞானத்தை 
விளம்புகின்றது.இதன் முதல் இரண்டு வரிகளைப்பாருங்கள்.

1. nin-me-sar-ra u-dalla-e-a
Lady of all the me's resplendent light
நின் மெய் சர்வ உள் தெள்ளிய

(சர்வ மெய்களின் அன்னைதெள்ளிய ஒளி வடிவினள்நின் : அன்னை;nin:நில் அல்லது நீள் என்ற அடியில் பிறந்து "உயர்ந்தவள்என்ற கருத்தில்அன்னைக்கும் அக்கைக்கும் வழங்கிய சொல்; "நம்என்றும் "நன்என்றுசங்க இலக்கிய வழக்கில் உண்டுசர்ர[sar-ra] > சர்வ : அனைத்தும் இதன்அடியில் பிறந்தனவே சர்வம் சகஸ்ரம் ஆயிரம் போன்ற சொற்கள்.இத்தகையவடமொழி சொற்களின் மூலம் சுமேருத் தமிழே என்று தெரிகின்றதுமெய்:சக்தி.u> உள்ஒள் , ஒளி; dall-e-a > தெள்ளியஇங்கு அகர ஈறுஇன்றும் தமிழில் "பெரி-" "சிறி-என்பனபோன்ற சொற்களில்விளங்கும் பெயரடை உணர்த்தும் இலக்கணச் சொல்லே)

2.mi-zi me-lam gur-ru ki-aga-an-uras-a
Righteous woman clothed in radiance, beloved of heaven and earth
மை-சீ மேலம் கூறு காங்க வான் ஊரஸ்ய

(மிகப் பிரகாச ஒளியையே ஆடையாக தரித்துள்ள அழகிய மாதுவிண்ணிலும்புவியிலும் இருக்கும் அனைத்தாலும் விரும்பப்படுகின்றவள்.mi> மை:உயர்ந்த பெண்மகள்' zi> சீ : திரு நிறைந்தசீசீர்>ஸ்ரி > திரு.  மேளம் –மெள்ளம் > வெள்ளம் > வெள்ளை அல்லது me-lam: மெருகுமேரம்>மேலம்பிரகாசமானமெருகுடைய; gur-ru> கூறுகூறைகூறுசெய்யப்பட்டு உடுக்கப்படும் ஆடை;ki-aga> காங்ககாமம்,விரும்பும்; an>வான்; uras-a> ஊரத்தியஇங்கு " as>அத்துசாரியை ஆகும்.வடமொழியில் இதுவே ‘அஸ்யஎன்று மிக விரிவாக வழங்கி வருகின்றது.)

இதன் கருத்து என்ன?

அன்னையாகிய நின்னாசர்வ மெய்களின் தலைவி என்பதோடு  தெள்ளியஒளியானவள்  என்றும்சீர் மிகு பெண்மைஎன்பதோடு தூயவெள்ளொளியையே அணிந்திருப்பவள்கூறுஎன்றும்,உலகில் (ஊர்)விண்ணில் உள்ள அனைவராலும் விரும்பப்படுகின்றவள் ( காங்ககாமஎன்றும் பொருள் படும்.சர்வ மெய்களின் நின்னா’ என்பதை இன்று ‘தத்துவநாயகி” என்போம். ‘தெள்ளிய ஒளி’ என்பதை ‘பரஞ்சுடர்’ என்றும் ‘பராபரைஎன்றெல்லாம் கூறுவோம்'

சீர் மிகு மங்கையாகிய இவள் தூய வெள்ளொளியையே ஆடையாகஅணிகின்றாள் என்னும் போது அவள் ஒளிப்பிரகாசமாய் அன்றே இந்தஅம்மையார் கண்களுக்கு காட்சி தந்துள்ளது மெய்யாகின்றது.எல்லாதத்வங்களின் நாயகியாக விளங்கும் அம்மை பரஞ்சுடராக தூயவெள்ளொளியில் தெள்ளிய ஒளியில் சுடரும் அவளை மாந்தர்களும்தேவர்களும் விரும்புகின்றார்கள் என்றால் என்ன பொருள்?

வெள்ளொளிப் பிழம்பு வீடுபேறு அளிக்கும் ஞானத்தின் வடிவுயார்இறைவனை ஒளி வடிவில் தரிசிக்கின்றார்களோ அவர்களே மேலானஞானிகள் ஆகின்றார்கள்.

இந்த ஞான தரிசனத்தைப் பெற்று உய்ய வேண்டும் என்ற வேட்கை எல்லாஉயிர்களுக்கும் இருக்கின்றது என்பதே இங்கு அம்மையார் விளம்பும்மெய்ஞானக் கருத்து ஆகும் என்கிறார் முனைவர் கி.லோகநாதன்.

இதனை சிவன் மேல் ஏற்றிக் கூறுகின்றார் ஏறக்குறைய 2700 ஆண்டுகட்குப்பிறகு நம்  திருமூலர் கிழ் வரும் பாட்டில்:

நான்காம் தந்திரம்-889

"தானே பரஞ்சுடர் தத்துவமாய் நிற்கும்
தானே அகர் உகரமாய் நிற்கும்
தானே பரஞ்சுடர் தத்துவக் கூத்துக்குத்
தானே தனக்குத் தராதலம் தானே"

சிவன் என்றாலும் பரஞ்சுடர் என்றுதான் பொருள்படும். ‘உள்(ஒள்)தெள்ளிய” என்பதும் அதுதானே. ‘சர்வ மெய்களின் அன்னை’ என்றாலும்தானே தத்துவமாய் நிற்கும்’ என்பதும் ஒன்றுதானே?

தானே ஆதி என்றும் ஆகவே அநாதி என்றும் ‘நின்நின்னா” என்ற சொல்லின்பொருள் காட்டும்.  அவளே எல்லா தத்துவங்களின் தலைவி எனும் போது,தானே மண்ணிலும் விண்ணிலும் நடக்கும் எல்லா தத்துவக் கூத்துகட்கும்தராதலமாக அமைகின்றாள் என்று மேலும் முனைவர் கி.லோகநாதன்கூறுகின்றார்.

No comments:

Post a Comment