வாழ்வில் வெற்றியடைய 2வது மனதை கொன்று விடுங்கள்!

வாழ்வில் வெற்றியும் தோல்வியும் வழமை எனக் கூறும் மூத்தோர்கள் மத்தியில் இத் தலைப்பு சற்று வித்தியாசமாகவே தோன்றுகிறது.

மனிதனிடம் உள்மனம் ,வெளிமனம் என இரு கூறுகள்  அவனை செயல்படுத்திக்கொண்டிருப்பது பலரும் உணர்ந்ததில்லை. ஆனால் இவ் அவசர உலகில் வெளிமனத்தின் ஆட்சி அவனை ஆட்டிப் படைப்பதனாலே அவன் தினமும் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருக்கிறான்.


கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவன் காலையில் எழுந்து படிக்க ஆவல்கொண்டு அலாரத்தினை வைத்துப் படுக்கிறான். காலையில் அலாரம் ஒலிக்கிறது. 'எழும்பு' என்று அவன் உள்மனம் கூறுகிறது . ஆனால் வெளிமனம் 'புரண்டு படு'எனச் சொல்கிறது அல்லது அதே அலாரத்தினை ஓங்கி அறைந்தால் என்ன எனவும் சொல்கிறது.


இன்று ஒரு அலுவலாக வெளியில் செல்ல அது கை கூடாது என்று உள்மனம் சொல்கிறது. ஆனால் அவசர நிலையில் அதை  இன்றே முடித்துவிடு என்று வெளிமனத்தின் சொல் கேட்டு சென்று ஏமாந்து வந்து நொந்து கொண்டவர்களை நான் அவதானித்திருக்கிறோம். 

காதலியிடம்  இருந்து ஒரு துக்கச்செய்தி வருகிறது. உடனே சென்று அவள்  துக்கத்தில் பங்குகொள் என்று உள்மனம் கூறுகிறது. ஆனால் உன் சோம்பேறித்தனம் கொண்ட வெளிமனம் புரண்டு படுக்கச் சொல்கிறது. படுத்துவிட் டாய். விளைவு உறவு முறிகிறது. இப்படி முறிந்த உறவுகள் பல.

 ஏன் , குடும்பத்தில் கூட மனைவி ஒரு அலுவலாக வெளிக்கிட கணவன்  தன் உள் மனதில் தோன்றியதை கூறி தடுத்திட ,அதனை மீறி சென்று அவள் ஏமாந்து வந்து , மனுசனின் மனம்போல அது சரிவரவில்லை என்று கணவனில் குற்றம் சாட்டுவதனை நாம் அவதானித்து இருக்கிறோம். அச்சமயத்தில் அவளின் ஏமாற்றம் கணவனின் தடையால் ஏற்படவில்லை. கணவனின் உள்மனம் மனைவியிடம் கூறிய உண்மைநிலை. இதை அவள் உணரவில்லை. சென்றாள் . ஏமாந்தாள் .

''மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?' என்ற கவிஞரின் வரிகளும் வெளிமனம் கருதியே பிறந்திருக்கவேண்டும். எனவே வாழ்க்கையில் வெற்றிபெற  அந்த வெளிமனம் என்றதனை கொன்று விடுங்கள்.


-ஆக்கம்;செல்லத்துரை,மனுவேந்தன். 


No comments:

Post a Comment