[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
[என்லில்லும் அவரின் மனைவி நின்லில்லும்/Enlil with his wife, Ninlil]
சுமேரியர்கள் மகன், டில்முன் ,மேலுஹா[Magan, Dilmun, and Meluhha] போன்ற நாடுகளுடன்வர்த்தகம் செய்தார்கள் என அவர்களின் இலக்கியத்தில்திரும்ப திரும்ப குறிக்கப்பட்டுள்ளது.பல கல்விமான்கள்மேலுஹாவை சிந்து சம வெளி எனசுட்டிக்காட்டுகின்றனர்.பின்லாந்து நாட்டை சேர்ந்தபேராசிரியர் அஸ்கோ பர்போலா,சிம்மோ பர்போலா[Asko and Simo Parpola],மேலுஹாவை மே-லா-க எனஅடையாளம் கண்டு அதை "மேல் அகம்" என விளக்குகிறார்கள்.உண்மையில் பல வர்த்தக பொருள்களான மரம்,கனிப்பொருள்கள்,நவரத்தினக் கல் என்பன சிந்து சம வெளியில் உள்ள குன்று அல்லது மலைசார்பகுதியில் இருந்தே பிரித்து எடுக்கப்படுகின்றன.மேலும் கி மு 2200ஆண்டளவிலான சுமேரியா நூல் மேலுஹாவை கிழக்கில் இருப்பதாககுறிப்பிடுகிறது.ஆகவே அது சிந்து சம வெளியையோ அல்லதுஇந்தியாவையோ பரிந்துரைப்பதாக கருதலாம்.அதுமட்டும் அல்ல சிந்து சமவெளி முத்திரைகள் ஊர்,மற்றும் மெசெப்பொத்தோமியா நகரங்களில் கண்டுஎடுக்கப்பட்டு உள்ளன. இவைகள் மேல்கூறிய பரிந்துரையைஆதரிக்கின்றன.மேலும் மெசெப்பொத்தோமியா கைவினை பொருள்கள்அதாவது மனிதனால் செய்யப்பட்ட பொருள்கள் சிந்து சம வெளியில்காணப்பட்டது. இவை மெசெப்பொத்தோமியா ஒரு பழமை வாய்ந்ததாகஇல்லாவிட்டாலும்-அதாவது அப்படி கருதினாலும், தனது வர்த்தக நாடானசிந்து சம வெளி அளவாவது பழமை வாய்ந்தது என காட்டுகிறது.மேலும்டில்முன் எந்த நாட்டை/இடத்தை குறிக்கிறது என்பதில் பல கருத்துகள்உண்டு.சாமுவேல் நோவா கிராமர் என்ற புகழ் பெற்ற அறிஞர் இதையும் சிந்து சம வெளியுடன் தொடர்பு படுத்துகிறார்.இதற்கு சுமேரியஇலக்கியத்தில்[கில்கமெஷ் காப்பியம்] இது சூரியன் உதிக்கும் திசையில்இருப்பதாக எழுதியிருப்பதை சுட்டிக்காட்டுகிறார். மேலும் தில்முன்[டில்முன்]என்பது தில்,முன் ஆகிய இரண்டு சொற்களின் கூட்டு.‘தில்’ என்ற சொல் சங்கஇலக்கியத்தில் ‘வாழ்க தில்' என்றவாறு காணப்படுகிறது.இங்கு ‘தில்’என்றால் வாழ்தல் ஆகும்." வாழ்க தில் அம்ம" என்பனபோன்ற சங்கத் தமிழ்வழக்குகளைக் காண்க. "நலமே வாழ்க" என்பதாக இதன் பொருள்இருக்கலாம்.இந்த சொல் இப்ப தின் என காணப்படுகிறது.அதாவது தில்>தின்: உயிர் வாழதற்கு உதவும் உணவு ஆகும் மேலும் ‘தீனி’=தீன்=சாப்பாடு,இரை ஆகும். இவ்வாறாக ‘வாழ்க தில்/தின்' என்பதைநலமுடன் வாழ்க[நல்ல சாப்பாடு உண்டு] என கருதலாம்.முன் என்பதுமுன்னுக்கு என்பதாகும். இது மேலும் 'முன்னைய,முன்னர்,ஆரம்ப'என்பதையும் குறிக்கும். இதன் படி, தில்-முன் என்பதை வாழ்ந்த முன்னையஇடம் என எடுக்கலாம்.எனவே இந்த கருத்தின் படி நாம் இன்றையவழக்கத்தில் கூறும் ' தாய் நாடு' என இதற்கு பொருள் கொள்ளலாம்.அதாவதுநாம் முதல் தோன்றிய இடம் என கருதலாம் . ஆகவே சுமேரியன் சிந்து சமவெளியில் இருந்து வந்தவர்கள் என எடுத்து கொண்டால்,சாமுவேல் நோவாகிராமர்[S. N. Kramer] மற்றும் டாக்டர் க்ளைட் வின்டர்ஸ் (Dr Clyde Ahmad Winters ] போன்றோர் தில்முன் என்பதை ஹரப்பா என உரிமைகோரியது சரி போல இருக்கும் ஏனென்றால்,தங்களது மூதாதையார்பிறந்த,வாழ்ந்த இடத்தின் ஞாபகார்த்தமாக ஹரப்பானை 'தாய் நாடு' எனபொருள் படும் 'தில்முன்' என்ற சொல்லால் அழைத்திருக்கலாம் என நாம்கருத இடமுண்டு. மேலும் தொல் பொருள் சான்றின்படி, திராவிட
மக்களால்,அதாவது ஆதிதமிழர்களால் குடியேறிய சிந்து சமவெளியில் வைடூரியம் இருந்ததுதெரியவருகிறது.இவை கிட்டத்தட்ட6,000 ஆண்டுகளுக்கு முன்பாகவேசுரங்கம் வைத்துஎடுக்கப்பட்டுள்ளது.இச்சுரங்கங்களைசுற்றியே ஹரப்பா மற்றும்மோகன்ஜதாரோ நாகரீகங்கள்தோன்றியதாக கூறப்படுகிறது. இந்த வைடூரியம் தான் தில்முன்னைமுதன்மை ஆக்கியது.அது மட்டும் அல்ல இந்த இரண்டு நாகரிகங்களுக்கும்இடையில் வலுவான பண்பாட்டு தொடர்பு/பரிமாற்றம் இருந்ததை தொல்பொருள் ஆராச்சி மேலும் உறுதிப்படுத்துகிறது.
சுமேரியன் நூலில் பதினொன்று இடங்களில் மேலுஹா என்ற சொல்வருகிறது[சம்பவிக்கிறது].அதன் ஒரு உதாரணம் கிழே தரப்படுகிறது.
"என்னை காண[அறிய] மேலுஹா,மகன் , டில்முன் மக்களைவிடு.டில்முன்னுடன் வர்த்தகம் செய்யும் படகுகளை மரக் கட்டைகளை ஏற்றவிடு.மகனுடன் வர்த்தகம் செய்யும் படகுகளை வாண் உயருக்கு ஏற்ற விடு.மேலுஹாவுடன் வர்த்தகம் செய்யும் பெரும் மதிப்புள்ள பொருட்களைகைப்பற்றும் அந்த படகுகளை தங்கம்,வெள்ளிகளை கடத்தி நிப்பூருக்கு,அனைத்து நாட்டின் அரசனான என்லில்லுக்கு, கொண்டு வர விடு" [என்கியும்உலக விதிமுறையும்/Enki and the world order 123-130 ]
C.லியோனர்ட் வூல்லே[Sir Charles Leonard Woolley (17 April 1880 – 20 February 1960) ] தனது "சுமேரியன்" என்ற புத்தாகத்தில்மெசெப்பொத்தோமியாவில் கடைசியாக குடியேறியவர்கள் சுமேரியர்கள்என்றும் அவர்கள் கறுத்த முடியுள்ளவர்கள் என்றும் ஒட்டுநிலை மொழி(Agglutinative language / நேரடியாக ஒட்டும் இயல்புடைய, சொற்களைகொண்ட ஒரு மொழி]யை பேசினார்கள் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.ஒட்டுநிலை மொழி, ஒருவகைப் பிணைப்பு நிலை மொழி (synthetic language) ஆகும். பிணைப்பு நிலை மொழிகளில் ஒவ் ஒரு ஒட்டும்பொதுவாக எண், இடம், காலம் போன்றவற்றைக் காட்டும் ஒரு பொருள்அலகைக் குறிக்கிறது. உதாரணமாக திராவிட மொழிகள் ஒட்டுநிலைமொழிகள் ஆக உள்ளன .மொழியில் பொருள் உடையதாக அமைந்த மிகச்சிறந்த சொல் கூறு உருபன் ஆகும். இதனுடன் ஒட்டுகள் சேரும். ஒட்டும்உருபன்கள், ஒட்டு உருபன்கள் எனப்படும்.உதாரணமாக "செய்தான்" என்றசொல்லில்
செய்- வினை நிகழ்ச்சியைக் குறிக்கும் உருபன்.
த் - இறந்த காலத்தைக் காட்டும் ஒட்டுருபன்
ஆன் - ஆண்பாலைக் காட்டும் ஒட்டுருபன்.
எனவே, செய்+த்+ஆன் - என்று உருபன்கள் ஒட்டி நின்று ‘செய்தான்’ என்றசொல் உருவாகிறது.
சுமேரிய மொழி பிராந்திய மொழிகளான எபிரேய மொழி[hebrew language], அக்காத் மொழி[Akkadian language ], அறமைக்மொழி[Aramaic language], போன்ற செமிடிக் மொழி(Semitic languages) களிலிருந்து வேறுபட்டதாகும்.பண்டைய துருக்கிமொழி(Turanian) போன்று காணப்பட்டாலும் சொற்பிறப்பியலில்(etymology) அப்படி அல்ல. தொடக்கத்தில் இந்த எழுத்து அமைப்புமுறைக்கு வரலாற்று ஆசிரியர்களால் பொருள் கண்டுபிடிக்க முடியாமல்போய்விட்டது. இறுதியாக அவர்கள் அங்கு ஒரு நாகரிகம் இருந்தது என்றும்சுமேரியன் என்ற ஒரு மொழி பேசப்பட்டதாகவும் உறுதி படுத்தினார்கள்.
மிக முந்தய தமிழ் சங்கம் பழமை[தொடக்கநிலை] தமிழையேபாவித்தது.சுமேரிய மொழி ஒரு பண்டைய அல்லது பழைய முதல் சங்கத்திற்குஉரிய தமிழ் என இப்ப ஆராய்ச்சியாளர்கள், அறிவியலாளர்கள்நம்புகிறார்கள்.அது மட்டும் அல்ல இவர்கள் சுமேரியானை சுமேரிய தமிழ் எனஅழைக்கின்றனர். J.V.கின்னியர் வில்சன்[J.V.Kinnier Wilson] (1986)என்பவர் ஹரப்பானும் சுமேரியானும் ஒரே இன மக்கள் என கூறுகிறார்.சுமேரியன் ஒரு இந்தோ-சுமேரியன் என்றும், மூல கூட்டமான ஹரப்பானில்இருந்து பிரிந்த ஒரு சிறு கூட்டமே அங்கு குடியேறி சுயாதீனமாக வளர்ந்ததுஎனவும் கூறுகிறார்.மேலே நாம் கூறிய 'தில்முன்' விளக்கத்துடன்['தாய் நாடு'] இது ஒத்து போவதை கவனிக்க.
பண்டைய சுமேரியா திராவிட மொழிகளுக்கிடையில் ஒரு ஒற்றுமைஇருப்பதாக அருட் தந்தை ஞான பிரகாச அடிகளார் நம்புகிறார்.அப்படியானஒற்றுமைகளை AS தியகராஜா, மலேசியா முனைவர் கி.லோகநாதன்ஆகியோர் சுட்டிக்காட்டி உள்ளார்கள்.மேலும் ராமசுவாமி ஐயர் ஒரேமாதிரியான தொடர்புகள் உடைய சுமேரியா,தமிழ் நிலவியற் சொற்களைபட்டியலிட்டு வெளியிட்டுள்ளார்.நான் இப்ப அப்படியான ஒற்றுமையுள்ள 15சொற்களை கிழே தருகிறேன். இப்படி ஏராளமான சொற்கள் உள்ளன.
கருத்து/மொழி: சுமேரியன் திராவிடன்
Tie/bind KAD கட்டு
house/family GUD குடி
mother ama அம்மா
house bitu வீடு
five ia ஐ [ஐயிரண்டு பத்து]
the land /place kalam களம்
sheep udu ஆடு
city ur ஊர்
love ‘‘ am அன்பு
love aka அகம்
to grind ara அரை
boat kalam கலம்
quay kar-ra கரை
to make, do ag, ak aakku
what a-na என்ன
மலேசியாவை சேர்ந்த முனைவர் கி.லோகநாதன்[Malaysian professor, Dr. K. Loganathan], சுமேரு மொழி பழந் தமிழே! என்று நம்புகிறார்.தென்இந்தியாவில் பிளக்கத்தில் இருப்பது இந்த தமிழ் மொழியே அதாவதுசுமேரியனுக்கும் தமிழனுக்கும் மூதாதையர் பொதுவான ஒருவரே.அமலாசிங்க்[Amala Singh] மற்றும் சிலரும் தமிழுக்கும் சுமேரு மொழிக்கும்உள்ள ஒற்றுமையை சுட்டிக்காட்டி உள்ளார்கள். எப்படி யாயினும் சாமுவேல் நோவா கிராமர் " சுமேரு மொழி-துருக்கிமொழி,ஹங்கேரிமொழி,சிலகவ்காசியன் மொழிகளை போல ஒரு ஒட்டு மொழி என்றும்,எதுஎவ்வாறாயினும் சொல் அகராதி[சொற்றொகுதி],இலக்கணம்,சொற்புணர்ச்சி[வசனம் அமைத்தல் ]ஆகியவற்றில் ஒரு மொழியையும் சாராது தனித்தே நிற்கிறதுஎன்கிறார்.தமிழும் ஒரு ஒட்டு மொழி என்பது கவனிக்கத்தக்கது.டாக்டர்அசோக் மல்ஹோத்ர ,மனித நாகரிகத்திற்கான சுமேரியர்களின்முதன்மையான பங்கு,அந்த பண்டைய சுமேரியன், எங்கிருந்துவந்தான்என்பதை ஆராய தூண்டுகிறது என்கிறார்.இந்த சுமேரியர்கள் மனிதநாகரிகத்தை 5500 ஆண்டுகளுக்கு முன்பு மெசெப்பொத்தோமியாவில்விதைத்தார்கள் என எடுத்து உரைகிறார் மேலும் இவர்கள் இந்தியாவின்மேற்கு கரையோரம் இருந்து அங்கு குடியேறினார்கள் என்கிறார். Dr Clyde Ahmad Winters கறுத்த ஆபிரிக்க மக்கள்,திராவிடர்,எலமைட்மக்கள்,சுமேரியர் இவர்களுக் கிடையில் ஒரு வம்சாவளி தொடர்பு இருப்பதாககூறுகிறார்.Dr David Neiman சுமேரியர்கள் காரகோரம்(Karakoram)மலைத்தொடரில் இருந்து வந்ததாக கூறுகிறார்.இது பாகிஸ்தான், சீனா,இந்தியா ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஒருமலைத்தொடர். மேலும் இது ஒரு முக்கியமான சாத்து வழி[caravan route]யாகவும் இந்த மூன்று இடங்களுக்கும் அமைந்துள்ளது. எங்களுக்குதெரியும் சிந்து சம வெளி நாகரிகம் சிந்து ஆற்றுடன் தொடர்புடையது என.இந்த சிந்து ஆறு தெற்காக காரகோர,இமய மலைத்தொடரில் இருந்துஓடுகிறது. மேலே கூறிய அனுமானங்களை ஆராய்வு செய்து உறுதிபடுத்துவதற்கு இரண்டு வழிகளை பின்பற்ற வேண்டும் . முதலாவதுஇந்தியாவில் இப்ப உள்ள ஏதாவது ஒரு மொழி குடும்பத்துடன்[தமிழ் ]பொதுவாக எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக சுமேரு மொழி ஒத்துஉள்ளதா என அறிய வேண்டும் ?இரண்டாவது சுமேரு மக்களின்கிடைக்கப்பெற்ற எலும்பு மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தி அவைஅந்த மொழி குடும்பத்துடன் ஒத்து போகுதா என கண்டுபிடித்தல் வேண்டும் ?
பகுதி/PART :20 அல்லது 01 வாசிக்க கீழேயுள்ள தலைப்பினை அழுத்தவும் .
Theebam.com: தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?] பகுதி 01
Theebam.com: தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?] /பகுதி 20.
Theebam.com: தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?] பகுதி 01
Theebam.com: தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?] /பகுதி 20.
↝↝↝↝↝↝↝↝↝↝↝↝↝↝↝↝↝↝↝
No comments:
Post a Comment