சுமை கொண்ட கனவில்
சுவை இருக்காது
கனவு போல இன்பம்
வேறேதும் கிடையாது.
சொந்தமென கனவு
இடைவிடாது அரவணைக்க
கனவுதனை நாமும் அரவணைத்து
காதல் கொண்டு இருப்போம்.
கலைந்து போன கனவுகள்
கரையாமல் மனதோடு இருக்க
வாழ்வும் தான் நொந்து போகிறது.
கனவுகளை வென்றிருந்தால்
வாழ்வும் தான் அர்த்தமாகி போயிருக்கும்
கனவுகளை இழந்ததால் தான் வாழ்வும்
வலியாகி போனதோ!
எண்ணங்களின் சாட்சியாக
உதித்ததே கனவு
அதை வென்றுவிட நினைக்கையில்
ஏக்கத்தை உண்டாக்கி
கனவை கலைத்ததே இறந்த காலம்
No comments:
Post a Comment