எந்த நாடு போனாலும் தமிழன் ஊர் ''ஊட்டி'' போலாகுமா?


ஊட்டி என்றும், உதகை என்றும் அழைக்கப்படும் உதகமண்டலம் (ஆங்கிலம்: Udhagamandalam) தென்னிந்திய மாநிலமான தமிழகத்தில் நீலகிரி மலையில் அமைந்துள்ள ஒரு நகராட்சி ஆகும். இதுவே நீலகிரி மாவட்டத்தின் தலைநகரமுமாகும்.
இது கடல் மட்டத்திலிருந்து 7347 அடி (2239 மீ) உயரத்தில் உள்ளதால் குளுமையாக உள்ளது.


மக்கள்
2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 64.36% ஆக இருக்கின்றனர். அதையடுத்து கிருஸ்துவர்கள் 21.25% இஸ்லாமியர்கள் 13.37% என்ற விகிதத்தில் இருக்கின்றனர். உதகமண்டலம் மொத்த மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் 28.98%, பழங்குடியினர் 0.30% ஆக உள்ளனர். உதகமண்டலத்தில் 23,235 வீடுகள் உள்ளன

வரலாறு
தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டத்தில், நீலகிரி மலையின் மேல் உள்ள ஒரு அழகிய ஊர் ஊட்டி. உதகமண்டலம் என்ற பெயர், சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சுருங்கி ஊட்டி என்றானது. இந்த அழகிய மலைப்பிரதேசதிற்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். ஊட்டியைச் சுற்றிலும் அமைந்துள்ள 'புளூ மவுண்டைன்' எனப்படும் நீலகிரி மலையே ஊட்டிக்கு அழகு சேர்க்கிறது. நீலகிரி என்ற பெயருக்கு பல காரணக் கதைகள் உண்டு.
மலர் கண்காட்சி

12 வருடங்களுக்கு ஒரு முறைப் பூக்கும் நீல நிறம் கொண்ட குறிஞ்சிப் பூ, இங்கு பூத்துக் குலுங்கும் போது, மலை முழுதும் நீல நிறமாக காட்சி அளிப்பதால் தான் இந்தப் பெயர் வந்தது என்று சிலர் கூறுகின்றனர். இந்த மலையில் படர்ந்துள்ள யுகலிப்டஸ் மரத்திலிருந்து வரும் புகை நீல நிறத்தில் இருப்பதால் தான் இந்தப் பெயர் வந்தது என்றும் சொல்லப்படுகிறது. இப்பொழுது புகழ்பெற்ற சுற்றுலா ஸ்தலமாகத் திகழ்ந்தாலும், ஊட்டியின் வரலாறு பற்றி
ஊட்டி ஏரி 
நம்மிடம் எந்தத் தகவலும் இல்லை. ஊட்டி ஏதேனும் ஒரு ராஜ்ஜியத்தைச் சேர்ந்ததா இல்லையா என்று அறிவதற்கு கூட எந்தவொரு சுவடியோ வேதாங்கமோ இல்லை.
19ம் நூற்றண்டில், கிழக்கிந்திய கம்பேனி ஊட்டியை ஆக்கிரமிப்பதற்கு முன்பு , தோடர் குலம் இங்கு வசித்தது என்னும் வரைக்குமே நம்மிடம் வரலாறு உள்ளது.
12-ஆம் நூற்றாண்டில் நீலகிரி மலையில் ஹொய்சாளர்களின் ஆட்சி புரிந்தனர். பின்னர், திப்பு சுல்தானின், மைசூர் அரசுப் பகுதி ஆன உதகமண்டலம் 19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயரின் கைக்கு மாறியது.
அப்போது கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஆளுனராக இருந்த ஜான் சல்லிவன் என்பவர், இப்பகுதியின் குளுமையான தட்பவெட்ப நிலையை விரும்பி இங்கிருந்த தோடர், இரும்பா, படுகர் முதலிய பழங்குடியினரிடம் இருந்து நிலங்களை வாங்கினார். ஆங்கிலேயரின் ஆட்சியில் இம்மலைப் பிரதேசம் நல்ல வளர்ச்சியைக் கண்டது. வளைந்து நெளிந்து செல்லும் சாலைகளும், நீலகிரி மலை இரயில் பாதையும் அமைக்கப்பட்டது. இதன் காரணமாக உதகை, ஆங்கிலேயருக்கு கோடைக்காலத் தலைநகரமாக விளங்கியது.
ஊட்டியில் உள்ள சில கட்டடங்கள் அந்தக் கால வடிவமைப்புடன் இருப்பதால், இந்த ஊரே ஒரு பழமைத் தோற்றத்துடன், பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இதன் வளர்ச்சி ஆங்கில ஆட்சியிலிருந்துத் தொடங்கியது. நவீன உலகிற்கு, ஊட்டியின் வரலாறு ஆங்கிலேயர்கள் குடியேறிய சமயத்திலிருந்து தொடங்குகிறது.கட்டிடங்களின் வடிவமைப்பு மற்றும் வீடுகளின் கட்டுமான பாணி அனைத்தும் பிரிட்டிஷ் காலத்தை நினைவூட்டுவதாக உள்ளது. பிரிட்டிஷ் பண்பாடும் நடைமுறைகளைகளும் உள்ளூர் மக்கள் வாழ்வில் ஆழமாக பதிந்து இருக்கிறது. உள்ளூர் உணவில் கூட ஆங்கில உணவுகளின் தாக்கம் தெரிகிறது. இதன் விளைவாக, ஊட்டியின் சிறந்த உணவில், பிரிட்டிஷ் மற்றும் இந்திய மசாலாக்களின் சுவையை காணலாம்.

கற்பூர மரம்
உதகைமண்டலத்தில் அமைந்துள்ள கற்பூர மரம் 12 மீட்டர்கள் சுற்றளவு கொண்டதாக உள்ளது. இதனை 12 ஆட்கள் கைகோர்த்தால்தான் கட்டி பிடிக்க முடியும். இம்மரம் பழைய மைசூர் சாலையில் அமைந்துள்ளது.

சுற்றுலா
மலை உச்சியில் இருந்து
 அவலாஞ்சி ஏரியின் தோற்றம்
அவலாஞ்சி ஏரி நீலகிரி மாவட்டத்தில் ஒரு முக்கியமான சுற்றுலா தலமாக உள்ளது. இந்த செயற்கை ஏரி 1824ல், 65 ஏக்கர் பரப்பளவில், ஜான் சல்லிவன் என்பவரால் கட்டப்பட்டது. மழை காலத்தில் மலையிலிருந்து கீழே பாயும் நீரைச் சேகரிக்கும் விதமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் நீர்மட்டம் ஏரியின் அளவைக் கடந்ததால், மூன்று முறை நீர் வெளியேற்றப்பட்டது. உள்ளூர் மீனவர்கள் மீன்பிடிக்க உதவுவதற்காக இந்த ஏரி அமைக்கப்பட்டது. பல்வேறு புவியியல் காரணங்களாலும் பஸ் ஸ்டாண்ட், ரேஸ் கோர்ஸ் மற்றும் ஏரிப்பூங்கா போன்றவற்றாலும் ஏரி அதன் உண்மையான அளவில் இருந்து இன்று சுருங்கி விட்டது. ஏரியில் படகுச் சவாரி உள்ளதால், சுற்றுலா பயணிகள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. அமைதியான படகுச் சவாரி மூலம், ஏரியின் கண்ணுக்கினிய அழகை அனுபவிக்க முடியும். ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் போது, மாநில அரசு, இரண்டு நாட்கள் நீடிக்கும் படகு போட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.  இந்த ஏரியைச் சுற்றி வளைந்த பாதைகளும், மெக்னொலியாஸ், மல்லிகை, ரோடோண்ட்ரோன்ஸ் போன்ற பூக்கள் பூக்கும் தாவரங்களுடன் இயற்கை சூழ்ந்த சூழலின் உள்ளது. சுற்றுலா பயணிகள் இந்த ஏரியை சுற்றி முறுக்கு பாதைகள் வழியாக ஏரி அருகில் பயணிக்கலாம். ஏரிக்கு சென்று சுற்றுலா பயணிகள் தாங்களே தூண்டில் கொண்டு மீன்பிடித்தலில் ஈடுபடலாம் . ஏரிக்கு அருகில் ஒரு மீன் குஞ்சுப்பொரிப்பகம் நிறுவப்பட்டுள்ளது. பயணிகள் இங்கு மீன்பிடி தூண்டில்கள் மற்றும் மீன் மீன்பிடிக்கத் தேவையான மற்ற மீன்பிடி சாதனங்களைப் பெற முடியும்.ஏரிக்கு அருகில் உள்ள இடத்தில் சுற்றுலாப் பயணிகள் சிலர் கூடாரம்போட்டு தங்குகின்றனர். மேலும் சில சுற்றுலாப் பயணிகள் ஏரியின் எதிர்பக்கத்தில் மேகம் தவழும் மலைமீது மலை ஏற்றத்தில் ஈடுபடுகின்றனர். அதாவது அப்பர் பவானி போன்ற அடர்ந்த காட்டுப் பகுதிகளில் மனித நடமாட்டமற்ற பகுதிகளுக்குச் செல்கின்றனர்.
-போவோமா ஊர்கோலம் [தொகுப்பு:கயல்விழி,பரந்தாமன்.]

No comments:

Post a Comment