ஜெயம் ரவியின் புதிய படங்கள்



Jayam Ravi S Tik Tik Tik Releasing On June 22nd
ஜெயம் ரவி நடித்துள்ள டிக் டிக் டிக் 
திரைப்படம் வரும் 22ம் தேதி 
வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் விண்வெளி படமான டிக் டிக் டிக் படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாகவும், நிவேதா பெத்துராஜ் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். சக்தி சவுந்தர் ராஜன் படத்தை இயக்கியுள்ளார்.
ஜெயம் ரவி மகன் ஆரவ் இந்த படத்தில் நடித்துள்ளார். ஆரோன் ஆசிஸ், ஜெயப்பிரகாஷ், ரமேஷ் திலக், வின்சென்ட் அசோகன், அர்ஜுனன், உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். நேமிசந்த் ஜபக் படத்தை தயாரித்துள்ளார்.
இசையமைப்பாளர் டி.இமானுக்கு இது நூறாவது படமாகும். ஏற்கனவே பாடல்கள் வெளியான நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இந்நிலையில் டிக் டிக் டிக் படம் வரும் 22ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Jayam Ravi
ஏ.எல்.விஜய்யின் ‘வனமகன்’ படத்தின் 

வெற்றிக்கு பிறகு சுந்தர்.சியின் 

‘சங்கமித்ரா’, அறிமுக இயக்குநர் 

கார்த்திக் தங்கவேலின் ‘அடங்க மறு’ மற்றும் ‘என்றென்றும் 

புன்னகை’ புகழ் இயக்குநர் அஹமத் இயக்கவுள்ள புதிய 

படம் என அடுத்தடுத்து படங்கள் வண்டிகட்டி நிற்கிறது.


இதில் ‘அடங்க மறு’ படத்தை ‘ஹோம் மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. இது ஜெயம் ரவியின் கேரியரில் 24-வது படமாம். ஜெயம் ரவிக்கு ஜோடியாக ராஷி கண்ணா டூயட் பாடி ஆடி வருகிறார். இப்படத்தில் ஜெயம் ரவி போலீஸாக வலம் வரவுள்ளார். சாம்.சி.எஸ் இசையமைக்கும் இதற்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார், ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
தற்போது, படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் ஃபைனல் ஷெடியூல் சென்னையிலுள்ள கோகுலம் ஸ்டுடியோஸில் போடப்பட்டுள்ள கோர்ட் செட்டில் நடைபெற்று வருகிறதாம். இம்மாத இறுதிக்குள் படப்பிடிப்பை நிறைவு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. வெகு விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் & டீசர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


No comments:

Post a Comment