பழனி - பழநி
பழனி என்பதே சரியான சொல். பழம் நி என்று புராண அடிப்படையில்
பிரித்துப் பொருள்கொள்ளும் சிலர் பழநி என்று எழுதுகின்றனர்.
அறுவெறுப்பு என்பது பிழை. அருவருப்புஎன்பதே சரி. கத்திரித்தான் என்பது பிழை. கத்தரித்தான் என்பதே சரி. வருகை புரிந்தார்எனல் வேண்டா. வந்தார் என்பதே போதும். சிறிது நாள் சென்று வா எனல் வேண்டா. சிலநாள்
சென்று வா என்க.
எனது மகன் - என் மகன்
எனது மகன் என்பது பிழை. என் மகன், எனக்கு மகன், என்னுடைய மகன் என்பன சரி.ஏழ்மை என்பது பிழை. ஏழைமை என்பதே சரி. அடகுக் கடை என்பது பிழை, அடைவுக்கடை என்பதே சரி.
நிறை - நிரை
நிறை, நிரை ஆகிய சொற்கள் பொருள் வேறுபாடு உடையன. நிறை என்னும் சொல்லுக்குநிறைந்த, முழுமையான என்னும் பொருள்களும், நிரை என்னும் சொல்லுக்கு வரிசை,கூட்டம் என்னும் பொருள்களும் உண்டு. நிறைமதி, ஆநிரை ஆகிய சொற்களைக் காண்க.
வலதுபக்கம் - வலப்பக்கம்
வலது பக்கம், இடது பக்கம் என்று எழுத வேண்டா, வலப்பக்கம், இடப்பக்கம் என்று எழுதுக.முகர்ந்து பார் என்பது பிழை, மோந்து பார் என்பதே சரி. வாசல் எனல் வேண்டா, வாயில்என்று எழுதுக
எண்ணை - எண்ணெய்
எண்ணை என்று எழுதுவது தவறாகும். எள் 10 நெய் ஸ்ரீ எண்ணெய் எள்ளிலிருந்து எடுக்கும்நெய் என்பது பொருள். எனவே மண்ணெண்ணெய் விளககெண்ணெய் என்று எழுதும்போதுஎண்ணெய் என்பது ''ழடை'' என்று பொருள்படும் காரணப் பெயர்ப்பொருளை இழந்துவிடுகிறது.
நெல்லைக் குத்தினாள் - நெல்லைக் குற்றினாள்
நெல்லைக் குத்தினாள் என்பது தவறு. நெல்லைக் குற்றினாள் என்றும், கையால் முகத்தில்குத்தினான் என்றும் எழுதுக. அடமழை, உடமை ஆகிய சொற்கள் தவறாகும். அடைமழை,உடைமை என எழுதுக.
எல்லாரும் - எல்லோரும்
எல்லாரும் எல்லோரும் என இவ்விரு சொற்களும் சரியானவையே.
செய்யுளில் மட்டும்எல்லாரும் என்பது எல்லோரும் என்று வரும். ''ஆ ஓ ஆகலும் செய்யுளில் உரித்தே''என்னும் இலக்கணப்படி செய்யுளில் நல்லான் என்னும் சொல்லில் உள்ள ''ஆ'' ''ஓ'' மாறிவில்லோன் என்றும் தொடியாள் என்பது தொடியோள் என்றும் வரும். உரைநடையில்எல்லாரும் என்று எழுதுவதே சிறப்பு.
எய்தல் - எய்துதல்
இவ்விரு சொற்களைப் பல பிழைபட எழுதுவதைக் காண்கிறேன். எய்தல், எய்துதல் ஆகியசொற்களைப் பொருள் உணர்ந்து கையாள வேண்டும். எய்தல் என்னும் சொல்லுக்கு அம்புபோன்றவற்றை எய்தல் என்றும், எய்துதல் என்பதற்கு ஒரு குறிப்பிட்ட இடத்தை எய்தல்என்றும் பொருள் கொள்ள வேண்டும். இராமன் அம்பை எய்தான். இராமன் காட்டைஎய்தினான்.
வினாயகர் - விநாயகர்
வி+நாயகர்= விநாயகர் தமக்குமேல் தலைவன் இல்லாதவர் என்பது பொருள் எனவேவிநாயகர் என எழுத வேண்டும்.
உரியது – உரித்தது
உரியது என்பது இந்நூல் அவனுக்கு உரியது என்றும், உரித்தது என்பதை
தேங்காய்உரித்தது என்றும் பொருள் உணர்ந்து எழுதுதல் வேண்டும். நன்றியை உரித்ததாக்குகிறேன்(உரித்தது 10 ஆக்குகிறேன்) என்று எழுதுவதும் பேசுவதும் பிழையாகும். நன்றியைஉரித்தாக்குகிறேன் என்பதே சரி.
- நன்றி,கி.பாரதிதாசன்கவிஞா் (அடுத்தவாரம் தொடரும்)
✬✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக
0 comments:
Post a Comment