தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]/பகுதி:13

ந்தியாவில் இருந்து வந்த திராவிடர்களே மேசொபோடமியாவை[மெசெப்பொத்தோமியாவைநாகரிகமாக்கினார்கள் என்று டாக்டர் எச்.ஆர்.ஹால் முன் வைத்த கொள்கையை மேலும் வலுவூட்டுவது போல ஒருகண்டுபிடிப்பு இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான,மெஹெர்கரில்[Mehrgarh] 2001 ம் ஆண்டில் நிகழ்ந்தது.அதாவது,இன்றையபாகிஸ்தானிலுள்ளபண்டைக் காலக் குடியேற்றப் பகுதியான மெஹெர்கர்நகரில் 2001 ஆண்டுஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல்ஆய்வாளர்கள் அகழ்வாராய்ச்சி செய்த போது ,இரண்டு சிந்து சமவெளிநாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தனஇந்த மனித மண்டைஓடுகளை ஆய்வுகளுக்கு உட்படுத்திய போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்கஅல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது .


7000 BC யில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாகசொத்தை விழுந்த [cavity ]பற்களை கூர்மையானஒரு வித கற்களை கொண்டு,வில்லினால் சுற்றி[bow drills] துளையிட்டு அறுவை சிகிச்சைசெய்து அகற்றியது தெரிய வந்தது .ஆகவே மேலேகூறிய கண்டு பிடிப்பு சிந்து சமவெளிமக்கள்,சுமேரியர் மேசொபோடமியாவில் குடியேற முன்பே,பல் பராமரிப்புபற்றிய அறிவு கொண்டிருந்தார்கள் என சாட்சி கூறுகிறது
  
அது மட்டும் அல்ல கி மு 5000/4000 ஆண்டுசுமேரிய நூல் ஒன்றும்,பண்டைக் கிரேக்க இதிகாசக்கவிஞர் ஹோமர்[Homer] என்பவரும்  பல்சொத்தை தேய்விற்கு பல் புழுவே["tooth worm"]காரணம் என்கிறார்கள் .இது ஒரு அறிவுப் பூர்வமானவிளக்கம் அல்ல.எப்படி இந்த சொத்தைஉண்டாகியது   என்பதற்கு பகுத்தறிவுக் கேற்றவிளக்கங் கூறாமல்,அதற்குப் பதிலாக பல் புழுபற்றிய புராணக்கதையையே தந்துள்ளார்கள்.இது மிகதெளிவாக சிந்து சமவெளி மக்கள் எவ்வளவு தூரம் சுமேரியரை விட மருத்துவ துறையில் வளர்ந்து இருந்தார்கள் என்பதை காட்டுகிறது.அதுமட்டும் அல்ல இந்த பெரும் அறிவை சுமேரியர்கள் மேசொபோடமியாவிற்குவருவதற்கு முன்பே கொண்டிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அண்மையில் நடந்த ஹரப்பா தொல்பொருள் இயல் பற்றிய சர்வதேசமகாநாடு ஒரு எதிர்பாராத ஒரு அறிவிப்பு செய்தது.இந்தியாவை சேர்ந்த இருதொல்பொருளியல் ஆய்வாளர்கள் BR மணி,KN டிக்ஷிட்[BR Mani and KN Dikshit] ஆகியோர் முன்பு கருதப்பட்ட ஹரப்பா பண்பாட்டு காலத்தை விடஅது இன்னும் 2000 ஆண்டு பழமை வாய்ந்தது என்கின்றனர்இந்த அறிவிப்புஇந்தியாவில் உள்ள சண்டிகர்[Chandigarh] நகரத்தில் நடை பெற்றமகாநாட்டில் அறிவிக்கப்பட்டது.இந்த அறிவிப்பு மூலம் இது வரைஏற்றுகொள்ளப்பட்ட கி மு 3750 ஆண்டு அளவில் குடியேற்றம்ஆரம்பமாகியது என்ற கொள்கைக்கு சவால் விடுகிறது.இந்த ஆரம்பகண்டுபிடிப்பு மேலும் உறுதிபடுத்தப்பட்டால் , ஹரப்பா நாகரிகம் சுமேரியநாகரிகத்துடன் ஒரே காலத்துக்குரிய நாகரிகம் ஆகிறது என்பதை கவனிக்க

மேலும் கி பி 1920ஆம் ஆண்டு சார்.ஜான் மார்ஷல் என்பவரால்மொஹெஞ்சதரோ (Mohenjo Dora) நகரம் கண்டுப்பிடிக்கப்பட்டதுஎன்பதையும்அது சிந்து நதியின் அருகாமையில் இருந்ததால் அதற்கு அவர்சிந்து சமவெளி நாகரிகம் (Indus Valley Civilization) என்று பெயரிட்டார்என்பதையும்பின்பு தொடர்ச்சியாக ஹரப்பா (Harappa) நகரம் ,லோதல்(Lothal) நகரம்,மெஹெர்கர்[Mehrgarh, Balochistan District, Pakistan] நகரம்,என்று பல பகுதிகள் கண்டுப்பிடிக்கப்பட்டது என்பதையும்.இந்த நாகரிகம் அப்பொழுது 4000-3500 ஆண்டுகளுக்கு முன் நிலவியதமிழர்/திராவிடர்  நாகரிகமாகும் என கருதப்பட்டது என்பதையும் கவனத்தில்கொள்க

இனி சுமேரிய நூலில் காணப்பட்ட பல் புழு[“tooth worm”] பற்றியபுராணக் கதையை பார்ப்போம்

"சொர்க்கத்தை அனு[Anu:வான் கடவுள்படைத்த பின்பு,
சொர்க்கம் பூமியை படைத்தது
பூமி ஆற்றை  படைத்தது
ஆறு சதுப்பு நிலத்தை படைத்தது
சதுப்பு நிலம் புழுவை படைத்தது,
புழு   அழுதுகொண்டு ஷாமாஷ்[Shamash:சூரிய கடவுள்]] முன் சென்றது,  
அதன் கண்ணீர் ஈஅ [Ea:கடல் கடவுள்முன்னால் ஒழுகிக்கொண்டுஇருந்தது 
என்னத்தை எனக்கு உணவாய் தருவாய்?  
என்னத்தை எனக்கு சப்புவதற்கு[உறிஞ்சுவதற்குதருவாய்?  
நான் உனக்கு பழுத்த அத்திப்பழமும் சர்க்கரை பாதாமியும்[fig and the apricot] தருவேன் 
அத்திப்பழமும் சர்க்கரை பாதாமியும் என்னத்திற்கு நல்லது?  
என்னை தூக்கி,பல்லுக்கும்  முரசுக்கும்[teeth and the gums] இடையில்எனக்கு இடம் ஒதுக்கு!
நான் பல்லின் இரத்தத்தை உறிஞ்சுவேன்  
அதன் வேரை முரசில் கொறிப்பேன்  
 புழுவே,நீ இப்படி சொன்னதால்
உன்னை "ஈஅபலமாக தனது வலிமைமிக்க கையால் அடிக்கட்டும்!" 

No comments:

Post a Comment