தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?] பகுதி :12

[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
[2]சுமேரியா [பண்டைய மேசொபோடமிய/மெசெப்பொத்தோமியா],இன்றைய ஈராக்/Sumeria [Ancient Mesopotamia],corresponding to modern-day Iraq


[படம்-[1]:1935 இல் ஒல்டுவை பள்ளத்தாக்கில்நடைபெற்ற ஆய்வுப்பயணம்.தொல்பொருள்ஆய்வாளர் லுயிஸ் லீக்கி[மத்தியில்] +தொல்பொருளியல் மாணவி மேரி நிகோல்[வலதுபக்கம்].இவர்கள் பின் 1936 இல் திருமணம்செய்து கொண்டார்கள்./A 1935 expedition to Olduvai/Louis Leakey(center) and archaeology student Mary Nicol (right). They wed in 1936]

[படம்-[2]:ஆரம்ப  மனிதக் குடும்பத்தின்எச்சங்களின் புதைகுழிகள் நிரம்பியமுக்கியமான இடங்கள்/Major early hominin sites]





[படம்-[3]:
ஹோமோ எரெக்டஸ்
/Homeoerectus]





[படம்-[4]:எசுன்னா நகரத்தின் ஒரு பகுதியானகாபாஜேயிலும் [கி மு 2500],லகாஷ் நகரத்திலும்[கி மு 2350] கண்டுபிடிக்கப்பட்ட சுமேரியன்உருவச் சிலைகள் /Left - 2500 BC Sumerian statue from Khafaje/part of the city-state of Eshnunna; Right - Sumerian scribe circa 2350 BC from Lagash.]

பேராசிரியர் மீவ் லீக்கி[Professor meave leakey/இவர் தொல்பொருள் ஆய்வாளர் லுயிஸ்லீக்கியின் இரண்டாவது மகனை திருமணம்செய்தவர்தலைமையிலான  குழு கிழக்குஆஃப்ரிக்காவில் கண்ட முந்தைய மனித இனத்தின் எலும்புக் கூடுகளின்படிமங்களை (fossil) தொடர்ந்து ,உலகில் இரண்டு மிகப் பெரிய மனிதஇடப்பெயர்வு நடந்து இருக்கலாம் என தெரிகிறது.மனித இனத்துக்குமுந்தைய இனமாகக் கருதப்படும் ஹோமோ எரெக்டஸ்[Homo erectus:இதன் கருத்து நிமிர்ந்து நிற்கும்/நன்கு நிமிர்ந்து நடக்கும் மனிதன்],  இன மக்களின் பெரிய மனிதப் புலப்பெயர்வு 1.5 மில்லியன்வருடங்களுக்கு முன் முதல் ஆரம்பமானது.இந்த இனம் ஆஃப்ரிக்காவில்தோன்றி ஜார்ஜியா[இது கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியா ஆகியகண்டங்களை இணைக்கும் நாடு ]இந்தியா,இலங்கை,சீனா,ஜாவா[இந்தோனீசியாவில் உள்ள ஒரு தீவு ] வரை பரவியது.இதுஹோமோஎரெக்டஸ்கல்லால் செய்யப்பட்ட ஆயுதங்களை பாவித்ததுடன் நெருப்பைதமது கட்டுப்பாட்டில் வைக்கக் கூடிய ஆற்றல் உடைய முதல் மனிதஇனமாகவும் இருந்துள்ளதுஇதுவே இன்றைய நவீன மனிதனின்நேரடியான மூதாதையர் ஆகும்.இது எம்மைப்போல உடல் அமைப்பைகொண்டுள்ளது ஆனால் சின்ன கையுடனும் நீண்ட காலுடனும் ஆகும்.இது1.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி 2000,000 ஆண்டுகளுக்குமுன்பு வரை வாழ்ந்துள்ளது.இதன் பிரதான உணவு இறைச்சி ஆகும்.இது ஒருவேடுவர் சமூகமாக இருந்துள்ளதுஅதன் பின்புநீண்ட இடைவெளியின்பிறகு ஹோமோசப்பியன்ஸ் என்று சொல்லப்படுகின்ற நவீன மனிதர்கள்ஆஃப்ரிக்கா முழுவதும் 150,000 வருடங்களுக்கு முன் குடியிருந்து,70,000வருட அளவில் ஆஃப்ரிக்காவை விட்டு வெளியேறியதாக தெரிகிறது.
                        
அதன் பின்பு ஒரு நீண்ட இடை வெளியின் பின்  கோமோ சப்பியன்ஸுக்கு உரிய ஆதிமுன்னோர் சார்ந்த திராவிடர்கள் ஆபிரிக்காவில் இருந்து உணவு,புகலிடம் தேடி சுற்றித்திரிந்தது மத்தியத் தரைக்கடல் [மெடிடேரியன் கடல்]பகுதியை அடைந்தார்கள்.கூட்டமாக வாழ்ந்து.மிருகங்களைவேட்டையாடியும்சைகை மூலம் மற்றவர்களுடன் தொடர்பு கொண்டும்,மற்றும் நெருப்பை கண்டுபிடித்து இருந்தாலும் அவர்களை நாகரிகம்அடைந்தவர்கள் என அழைக்க முடியாது இவர்கள் மினாஸ் பக்கத்தில்இருந்த  பண்டைய கோஸ் தீவை[The old island of “Cos” near MINAS]தமது வாழ்விடமாக அமைத்தார்கள் என கிமு 5 ம் நூற்றாண்டில் வாழ்ந்தகிரேக்க  வரலாற்றின் தந்தை ஹெரோடோட்டஸ் [கி.மு484-425/Egyptian historian Hiridotus] சான்று கூறுகிறார்.பின் அது எரிமலை வெடிப்பால்அழிந்து போக,அங்கு வாழ்ந்தவர்கள் சிதறி சுமேர் என அழைக்கப்படும்தெற்கு மேசொபோடமியா பகுதிக்குள் நுழைந்தார்கள்.இவர்கள்திராவிடர்கள் தான் என்பது பின்வருவன வற்றில் இருந்து நம்பப்படுகிறது.தென் இந்தியாவில்/இலங்கையில்  பேசப்படும் தமிழைப் போன்ற திராவிடமொழியுடன் சுமேரியன் மொழி ஒரு சேய்மை தொடர்பு[remote relationship] கொண்டுள்ளது.சுமேரியர்கள் முதலாவது சிறப்புமிக்க பாரிய கோயிலையும் நகரத்தையும் மேலும் எழுத்தையும்கண்டுபிடித்தவர்கள்.அந்த நகரத்தை ஊர் என்றே அழைத்தனர் என்பதுகவனிக்கத்தக்கது.ஆலய வழிபாடு,குன்றில் சந்திரன்  தெய்வம் வழிபாடுபோன்றவை சுமேரியனுக்கும் தமிழனுக்கும் உள்ள தொடர்பை காட்டுகிறது.

சுமேரியன் தங்களை கறுத்த தலையர்["Sag-giga" meaning the “black-headed"]என அழைக்கின்றனர் . கிரேக்க வரலாற்றின் தந்தைஹெரோடோட்டஸ் இரண்டு விதமான எதியோபியனை குறிப்பிடுகிறார் .ஆஃப்ரிக்காவில் வாழும் மேற்கு எதியோபியனும் இந்தியாவில் வசிக்கும்கிழக்கு எதியோபியனும் கறுத்த நிறத்தவர் எனவும்,ஆக ஒருவர் சுருட்டைமயிரையும் மற்றவர்   நேரான மயிரையும் கொண்டவர்என்கிறார்.மேலும்"The Ancient History of the Near East, pp. 173–174, London, 1916." இல் சுமேரியனை கறுத்த தலையர் அல்லது கறுத்த முகம்உடையவர் என்கிறதுநினைவுச் சின்னங்கள் தாடி இல்லாமலும் மொட்டைதலையாகவும் உள்ளது.இது இவர்களை செமிடிக் பபிலோனியர்களிடம்இருந்து வேறு படுத்துகிறதுபபிலோனியாரின் இதிகாசத்தில் இருந்தும்பாரம்பரியத்தில் இருந்தும் நாம் அறிவது அவர்களுடைய[சுமேரியர்களின்]பண்பாடு தெற்கில் இருந்து வந்தது எனஆகவே சேர்  ஹென்றரோலின்சன்[Sir Henry Rawlinson] என்பவர்
சுமேரியர் ஆஃப்ரிக்கா எதியோபியன் என இதில் இருந்தும் வேறுசான்றுகளில் இருந்தும் முடிவுக்கு வருகிறார்.ஆனால் இந்த கொள்கையைடாக்டர் எச்.ஆர்ஹால்[Dr Henry Reginald Holland Hall] முற்றாகநிராகரிக்கிறார்.இந்தியாவில் இருந்து வந்த திராவிடர்களேமேசொபோடமியாவை நாகரிகமாக்கினார்கள் என வாதிடுகிறார்?சுமேரியர்களின் இன மாதிரி அவர்களின் உருவச் சிலைகளில்காணக்கூடியதாக உள்ளது என்றும் அவை அவர்களை சுற்றிஇருந்தவர்களிடம் இருந்து முற்றாக வேறுபடுவதாகவும் அப்படியே மொழியிலும் என்கிறார்.இந்தியா திராவிட இன மாதிரியுடன் அவர்கள்ஒத்து போவதுடன் செமிடிக் அற்ற,ஆரியர் அற்ற இவர்களே மேற்கைநாகரிகமாக்க கிழக்கில் இருந்து வந்தவர்கள் என்றும்,இதை நாம் எமதுகண்களாலேயே எப்படி இந்தியனும் சுமேரியனும் உருவ ஒற்றுமையில்ஒன்றுபடுகிறார்கள் என காண முடியும் என்றும் கூறுகிறார்.

ஹோமோ எரெக்டஸைஆஃப்ரிக்காவிற்கு வெளியேபரவிவிட்டு  பின்  அது திரும்பி வந்துமீண்டும் ஆஃப்ரிக்காவில்ஹோமோசப்பியன்ஸ் ஆகபடிவளர்ச்சியுற்று மீண்டும்ஆஃப்ரிக்காவை விட்டு வெளியேறியது என்பது ஒரு விந்தையாகஉள்ளது.அதாவதுஹோமோசப்பியன்ஸ் எல்லாம் ஒரேஇடத்தில் தோன்றியது என்றுசொல்லுவது எனக்கு புரியவில்லை,ஏனென்றால் அதற்கு முதல் ஹோமோஎரெக்டஸை இந்தியா,இலங்கைஉட்பட பல இடங்களுக்கு பரவிவிட்டது என
கூறிவிட்டு.பின் இது வேறுஇடங்களில் உயர் படிவளர்ச்சிஅடைய ஒரு சந்தர்ப்பமும் இல்லைஎன கூறுவது போலவும் அல்லதுமீன் முழுவதும் ஒரு கடலிலோஅல்லது  ஒரு குளத்திலோபடிவளர்ச்சியுற்றது என கூறுவதுபோலவும் உள்ளது?பூமத்திய ரேகைபகுதியில் பல இடங்கள் படிவளர்ச்சிஅடையக்கூடிய சூழ் நிலையைகொண்டுள்ளன.இந்த கருத்தே முன்புதொடக்கத்தில் நாம் சுட்டிக்காட்டியஇன்னும் ஒரு கொள்கைக்கு வழி வகுத்தது.இது பல்பிராந்திய மாதிரிஆகும்.முற் காலத்துக்குரிய ஆஃப்ரிக்கா ,ஆசிய,ஐரோப்பியா பிராந்தியகுழுக்களில் இருந்து ஒரேசமயத்தில் அந்தந்த இடங்களில் நவீனமனிதர்களாக பரிணாமம் அடைந்ததாக கருதுகிறது.இந்த மாதிரி தான்பரிணாமம் அடைந்தது என்றால்,நாம் மிக இலகுவாக டாக்டர் எச்.ஆர்.ஹால் இன் மேல் கூறிய கூற்றையும் புரிந்து கொள்ள முடியும் 

சுருக்கமாக,"ஆஃப்ரிக்காவிற்கு  வெளியேமாதிரி இரண்டாவதுஇடப்பெயர்வு 100,000 ஆண்டு களுக்கு முன்பு நடை பெற்று,பழையமனித இனத்தை முற்றாக  ஈடு செய்தது என்கிறது[Model A). பல்பிராந்தியமாதிரி Model D ஆகும்  அல்லது பங்கிட்டுக்கொடுக்கும் பல்பிராந்தியமாதிரி Model C ஆகும்  ஒரு சமரச இணக்கம் கொண்ட ஆஃப்ரிக்காவெளியே மாதிரி Model B ஆகும்

பகுதி-13 or 01 வாசிக்க கீழே உள்ள தலைப்பினை அழுத்தவும் 


↹↹↹↹↹↹↹↹↹↹↹↹↹↹↹↹↹↹↹↹

0 comments:

Post a Comment