இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் விவசாயம் எதிர்நோக்கிக்கொண்டிருக்கும் ஆபத்தினை ஒரு குறும் திரைப்படம் மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார் இயக்குனர்.
ஒருநாள் - New Tamil Short Film 2018
இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் விவசாயம் எதிர்நோக்கிக்கொண்டிருக்கும் ஆபத்தினை ஒரு குறும் திரைப்படம் மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார் இயக்குனர்.
அடக்க முடியாத கோபத்தை எப்படி சமாளிப்பது?

ஒருவர் தனது குழந்தையை கடைத்தெருவில் போட்டுஅடித்துக்கொண்டிருந்தார்.அவருடைய பையன் தான்.சுமார் எட்டு வயதுஇருக்கும்.அவ்வளவு பெரிய குற்றம் எதுவும் செய்திருக்கவாய்ப்பில்லை.எவர் ஒருவரும் உலகில் எந்த உறவையும் விட தனதுகுழந்தைகளை நேசிக்கிறான்.இருந்தும் ஏன்?
எல்லா நேரங்களிலும் ஒருவர் இப்படி நடந்து கொள்வதில்லை.ஏதேதோசிக்கல்கள்.போராட்டங்கள் எங்கோ காட்ட வேண்டியகோபம்.எரிச்சல்.அல்லது உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்கலாம்.சாதாரணசளி பிடித்தால் கூட எரிச்சலான மன நிலையில் இருப்பது பற்றிநினைத்தேன்.?
கோபம் ஒரு இயல்பான உணர்வு.இயலாமையில்,எதிர்பார்ப்புகள்சிதறும்போது சூழ்நிலைகளில் ஏற்படுவதைவிட,வலியவர்களிடம்வெளிப்படுத்த முடியாத கோபம் கொடுமையானது.பல நேரங்களில் நம் மீதுகோபப்படும்போது நம்மை அவர்கள் நேசிக்கவில்லை என்று நினைத்துவிடுகிறோம்.அதிகமாக பாதிக்கப்படுகிறோம்.
உங்கள் கோபத்தை எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா?ஏனென்று? எனதுகோபம் சரியானதா? ஏன் நான் கோபப்பட்டேன்?கோபத்தை புரிந்துகொள்வதேஅதை வெல்ல சரியான வழி. தண்ணீர் குடிப்பது,ஒன்றிரண்டுஎண்ணுவது,இடத்தை விட்டு வெளியேறுவது, மௌனம் சாதிப்பதுபோன்றவற்றால் கோபத்தை கட்டுப்படுத்த முயற்சிக்கலாம்.
நம்மைப்போலத்தான் மற்றவர்களும்.தவிர,மனிதர்கள் எப்போதும் ஒரே மனநிலையில் இருப்பதில்லை.மாத விலக்கு நாட்களில் பெண்களின்மனநிலையில் மாற்றம் இருக்கலாம்.உடல்நலம் இல்லாதபோதுசிடுசிடுவென்றுஇருக்கலாம்.ஏமாற்றங்கள், தோல்விகள்போன்றவையும்,இயலாமையும் தன் மீதோ,மற்றவர்கள் மீதோ கோபத்தைதூண்ட்த்தான் செய்கின்றன.
விலங்குகளுக்குக் கூட கோபம் உண்டு.ஆனால்,சிந்திக்கத்திறன் பெற்றமனிதன் அதை மேலாண்மை செய்ய முடியும்.ஏற்கனவே நமக்கு கோபத்தால்ஏற்பட்ட இழப்புகளை நினைத்துப்பார்த்தால்,தொடர்ந்து அதன் தீமையைப்பற்றி எண்ணிவந்தால் மனம் பக்குவமடைந்துவிடும்.
நியாயமான கோபமும் இருக்கத்தான் செய்கிறது.அநீதிக்கு எதிரான கோபம்தேவையானது.கோபம் உள்ளிட்ட உணர்வுகளுக்கு சிந்திக்க துவங்குவதுதான்வெளியே வர சரியான வழி.சிந்திப்பது மூலம் நம்மையும் பிறரையும்பாதிக்காமல் காத்துக்கொள்வது சாத்தியம்தான்.மனிதர்கள் அனைவருக்கும்சிந்திக்கும் திறன் இருக்கிறது.
தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?] /பகுதி:16
[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
நாம் மேலும் சில சுமேரியன்-தமிழர் தொடர்புகளை சுட்டிக்காட்டி அலச முன்பு,சுமேரியநாகரிகத் தின் காலவரிசையை குறுகிய விளக்கத்துடனும் படத்துடனும் கிழேதருகிறோம்.இது உங்களுக்கு அவர்களைப் பற்றியும் அவர்களின் நாகரிகத்தை பற்றியும்ஓரளவு மேலும் அறிய உதவும் என நம்புகிறோம்.
சுமேரியர்களின் ஆரம்ப இடம்/தோற்றுவாய் சரியாக தெரியாது.பொதுவாக இவர்கள்கிழக்கில் இருந்து வந்ததாக கருதுகிறார்கள்.அத்துடன் இவர்கள் தங்களை சுற்றி வாழ்ந்தஎந்த குழுக்களுடனும் மொழி அடிப்படையில் தொடர்பு இல்லாமல்இருக்கிறார்கள்.இவர்களை விட மற்ற எல்லோரும் செமிட்டிக் இனஞ்சார்ந்தவர்கள்.உதாரணமாக ஹீபுரு, அரபு ஆகியன செமிட்டிக் குடும்பத்தை சேர்ந்தமொழிகள் ஆகும்.கி மு 5000 ஆண்டளவில் விவசாய கிராமங்களின் தொகுப்பாகதொடக்கி,கி மு 2330 சார்கோன் மன்னனால் வெல்லப்பட்டு,இறுதியாக கி மு 2000ஆண்டளவில் அமோரைட்[Amorite] இன மக்களின் படையெடுப்பு மூலம் முற்றாக வீழ்ச்சிஅடைந்தது.அக்காடிய மொழியில் சுமர் என்றால் 'காலச்சார நாடு' என்று பொருள்.சுமேரியாவிலிருந்து தான் நாகரிகங்களும், கலாச்சாரங்களும் தோன்றியிருக்கலாம் என்று சிலஆய்வாளர்களின் கருத்தும் கூட.உதாரணமாக முதலாவது நாகரிகத்தைப் பற்றியநூலொன்றை எழுதிய பேராசிரியர் எஸ்.என்.கிரமர் (Samuel Noah Kramer) தனதுநூலுக்கு “சுமேரில் இருந்து வரலாறு ஆரம்பிக்கிறது” (History Begins at Sumar) என்றுபெயர் சூட்டியதில் இருந்து மொசப்பத்தேமிய நாகரிகமே முதலாது என்பது அறியமுடிகிறது.
சுமேரிய நாகரிகத்தின் வீழ்ச்சிக்கு மிக முக்கிய காரணங்களாக கருதப்படுபவை,ராணுவத்தைபராமரிக்க ஒரு சிறந்த தலைமை இல்லாதது,சுற்றியிருந்த கடல்களில் உப்பு தன்மைகூடியது,விளைநிலங்களை தரிசானது என குறிப்பிடுகிறார்கள்.
மெசொப்பொத்தேமியாவில் சுமேரிய நாகரிகம் /Sumer civilization in Mesopotamia
காலம்/PEROIDS: கி மு 5000-
நாடோடிகளாக கால்நடைகளை மேய்த்தபடி வேட்டையாடி உணவுதேடி அலைந்து திரிந்த "கருத்தத் தலை மக்கள்" என அழைக்கப்பட்டமக்கள் கூட்டம் மேசொபோடமியா வந்து அடை தல். அவர்கள்பயிர் நட்டு விவசாயம் செய்ய தொடங்கி னார்கள்.அது மட்டும் அல்ல முதல் பட்டணங்களையும் மா நகரங்களையும்அமைத்தார்கள் . இப் பிரதேசத்துக்குள் எப் பொழுது நுழைந்தார்கள்என்ப தில் அறிஞர் மத்தியில் கருத்து வேறுபாடுகள் நிலவினாலும்,சுமேரியர்களே இங்கு முதன் முதலில் குடியேறியவர்கள் எனநம்பப்படுகிறது.
காலம்/PEROIDS:கி மு 4000 -

காலம்/PEROIDS:கி மு 3500 -
நதிகள் காவிக் கொண்டு வரும் வண்டல் மண் வெள்ளப்பெருக்கின் போது கீழ்ப் பிரதேசங் களில்படியவிடப்பட்டதனால் அப்பகுதி வளமான விவசாய நிலமாகமாறியது அதனால் மேசொபோடமியாவின் தெற்கில் பலசுமர்[sumer] நகரங்கள் குடியிருப்பிடமாகக் தோன்றின . அவை ஊர்,உருக், எரிது,கிஷ், லாகாஷ், நிப்புர் [ Ur, Uruk, Eridu, Kish, Lagash, and Nippur]போன்றவை ஆகும்.இதில் உருக் உலகின் முதல் பெரும்நகரங்களில் ஒன்றாக கருதப் படுகிறது.மற்றது ஊர்.இது கி மு2900 ஆண்டளவில் சனத்தொகை 50,000 எட்டி உலகின்மிகப்பெரிய நகரமாக விளங்கியது.இந்த நகரத்தின் மிகப்புகழ்பெற்ற தலைவனாக
கில்கமேஷ் [Gilga mesh] என்ற அரசன் இருந்தான் . இவன்பின் புராண தலை வனாக மாறி உலகின் முதல் இதிகாசம் எனகருதப்படும் கில்கமேக்ஷ் காவியம் படைத் தான்.மேலும் சுமேரியமொழி யில் நீர்ப்பாசனத்துடன் தொடர் புடைய பல சொற்கள்காணப் படுகின்றன. ஆகவே தேர்ச்சி பெற்ற உழவர்கள் குழுவேஇங்கு வந்து நாகரிகத்தை தோற்று வித்தது என நம்பலாம்?கி. மு3500 ஆண்டளவில் சுமேரியா வில் 12க்கும் மேற்பட்ட சுதந்திரநகரங்கள் அங்கு இருந்தன.
காலம்/PEROIDS:கி மு 3300-
சுமேரியர்கள் எழுத்துகளை சித்திர வடிவில்தொடங்கி, வாக்கியங்களையும் சித்திரங்கள்மூலம் வரைந் தார்கள்.இப் படம் கூரிய எழுத்தாணியால் மரங்கள் அதிகம் இல்லாதசுமேரியாவில் மக்கள் ,களி மண் தகட்டில் வரைந்தார்கள். இப்படி, இது பட எழுத்தாக உருவானது.கிமு 2700-2500 காலப்பகுதியில் வட்ட முனை
எழுத்தாணியும் கூரிய எழுத் தாணியும்கைவிடப்பட்டு ஆப்புவடிவ எழுத்தாணி புழக்கத்துக்கு வந்தது. இதனால் இவ் வாறு எழுதப் பட்டஎழுத்து முறை ஆப்பெழுத்து எனஅழைக்கப்பட்டது.பொதுவாக தங்கள் வர்த்தககணக்கிற்காக முதல் இந்த எழுத்துகளைபயன்படுத்தி கொண்டார்கள். பின் மதவிடயங்களுக்கும் , ஏனையவைகளுக்கும் பாவித்தார்கள் .என்றாலும் மேல் வர்கத் தின்[அரசர்கள்,பணக் காரர்கள் , கோவில் நிர்வாகிகள்]ஆண் வாரிசுகளுக்கு மட்டுமே கல்விகற்பிக்கப்பட்டன. மற்றவர் களுக்குஅவர்கள் பெற்றோர் குலத் தொழிலில்பயிற்சி அளிக்கப்பட்டது மேலும் தன்கைவிரல்களை பயன்படுத்தி பத்து பத்தாககணக்கு வடிவம் மேற் கொண்டார்கள்அதுமட்டும் அல்ல உலகம்அறிந்த முதல் இலக்கியம்"கில்கமேக்ஷ் காவி யம்" அங்கு தான்தொடங்கியது. இவர்களே முதல் பதியப்பட்ட 'ஹம்முரபி சட்டத்தொகுப்பை '[Hammurabi's Code]யும் தந்தார்கள்
காலம்/PEROIDS:கி மு 3200-

காலம்/PEROIDS:கி மு 3000-

2]சந்திரனின் பிறைகளை ஆராய்ந்து பௌர்ணமி, அமா வாசைஅடிப்படையிலும், மேலும் இரவும், பகலும் சந்திரச்சுழற்சியால் வருகின்றன என்ற நம்பிக்கையாலும்சுமேரியர்கள், சந்திரச் சுழற்சியின் அடிப் படையில் ,நாட்காட்டிகளை அமைத்தனர். அங்கு 12 சந்திர மாதங்கள்இருந்தன. 3]இவர்கள் கட்டடங்கள் கட்ட களிமண் ணாலானசுட்ட/வெய்யிலில் காயவைத்த செங்கற்கள், பயிர்களுக்கு நீர் பெற நீர்பாசனம் அதாவதுஅணைகள் மூலமாக நீர் சேமித்து,கால்வாய்கள் வழியாக நிலங்களுக்கு நீர் விநியோகிக்கும்நீர்ப்பாசனம் ஏர் கலப்பைகள், கம்பளியில் இருந்து உடை நெய்ய நெசவுத் தறி, இப்படி பலகண்டு பிடித் தார்கள்.இவைகள் எல்லாம் ஒரு மனிதநாகரிகம் வளர்ச்சி யடையமுக்கியமானவை ஆகும்
காலம்/PEROIDS:கி மு 2700-
பொதுவான மற்றவைகள்:

2]உடைகள் ஆட்டுத் தோல் அல்லது கம்பளியால் செய்யப்பட்டன.ஆண்கள் முட் டளவேயான குறும்பாவாடை யையும் பெண்கள் நீண்டஉடையையும் அணிந்தார்கள்.
4] அவர்கள் விளைவித்த உணவு தானி யங்கள் ஏராளமாய்விளைய, அதனை தங்களுக்கு தேவை யான மரம்,கட்டிடக்கல், கணிம மற்றும் உலோகங்களுக்காக விற்றனர்.அவர்களின் எழுதும் திறன், எண்களைபயன்படுத்தும் அறிவு ஆகியவை அவர்களுக்கு நீண்டதொலைவு வரை வர்த்தகம் செய்ய உதவியது. ஆகவேஉலகின் மற்ற பகுதிகளிலிருந்து இவ்வாறு வர்த்தகம் செய்யஏதுவாக படகு களையும் வடிவைமைத்தார்கள் .மேலும் பண்டமாற்று முறை யையும்முதன்முதலில் அமுல் படுத்தினார்கள்.
காலம்/PEROIDS:கி மு 2330
அக்காடிய மக்களால் சுமேரியா முழுவதும் கைப்பற்றப்பட்டு,அக்காடியாவின் ஆட்சிக்கு அது உட்பட்டது.கி.மு 2340 ஆம்ஆண்டளவில் சார்கோன் மன்னனால் முதலாவது செமிட்டிக்அக்காடிய இராச்சியம் அங்கு நிலவியது.அவர் 55 வருடங்கள்கி மு 2334-2279 வரை ஆண்டார்.
மிகச் சிறந்த நாகரிகமாகப் போற்றப்படும்சுமேரிய நாகரிகத்துக்குப் பெருமை கொடுத்தது அது முதல்இலக்கியம் படைத்ததுதான். இலக்கியங்கள் பொதுவாக நாகரிகத்தின் வெளிப்பாடுகளாகும்.மேலும் சுமேரியாவில் கி.மு. 2700ஆம் ஆண்டிலேயே நூலகங்கள் இருந்ததற்கான ஆதாரங்களும்கிடைத்துள்ளன. அங்கே கவிதைகள், நாட்டுப்புறப் பாடல்கள்,புராணங்கள் முதலியவை எழுதப்பட்ட மண் பலகைகள்இருந்துள்ளன.சங்க இலக்கியமான புறநானூறு 183 உம் கற்றல்நன்றே! சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்; அரசும் செல்லும்;என்று வாதாடுகிறது.
"பிற்றை நிலை முனியாது, கற்றல் நன்றே!
பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்று உள்ளும்,
சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும்;
ஒரு குடிப் பிறந்த பல்லோ ருள்ளும்,
‘மூத்தோன் வருக’ என்னாது, அவருள்
அறிவுடை யோன் ஆறு அரசும் செல்லும்"[புறநானூறு 183]
அவர்[கல்வி கற்பிக்கும் ஆசிரியர்] சொல் சொன்னபடி, அவர் மனம்கோணாத படி கல்வி கற்பது சிறந்தது. ஒரே வயிற்றில் பிறந்தாலும்சிறப்பாக உள்ள மகனின் பால் தாயின் மனம் சாயும் , கல்வி கற்காத மகனை தாயும் மதிக்கமாட்டாள். ஒரே குடும்பத்தில் பிறந்தாலும் ஒரு விழா நடக்கும் போது, அந்த குடும்பத்தில்இளையவன் ஆனாலும், அறிவுள்ளவனுக்கே முதல் மரியாதை கிடைக்கும், அவன் பின்னர்அரசனும் செல்வர் .என்கிறது.
பகுதி:17அல்லது 01 வாசிக்க கீழேயுள்ள தலைப்பினை அழுத்தவும்.
Theebam.com: தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?] பகுதி:1.
Theebam.com: தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?] பகுதி:17.
Theebam.com: தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?] பகுதி:1.
Theebam.com: தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?] பகுதி:17.
⇎⇎⇎⇎⇎⇎⇎⇎⇎⇎⇎⇎⇎⇎⇎⇎⇎⇎⇎⇎⇎⇎
Subscribe to:
Posts (Atom)