மது மேகத்தில் உறங்கி
மது போதை போல வாழ்வைத்
தள்ளாட வைக்காதே _ மானுட
உன் வாழ்வு
மதுவால் பிரிக்கப் பட்டால்
தூக்கி எறியப்படுவது
குடும்பத்தின் வேர் அல்லவா!
உன் கிளையான பிள்ளைகளும்
இலை போல நொந்து
ஒடிந்து விழுவார்கள்!
பாசம் தீண்ட தீண்ட
அழகாகிறது வாழ்வும்
மது போதை தீண்ட தீண்ட
வாழ்வும் அலங்கோலமாக
மாறுகிறது_மானுட!
உன் வாழ்வை
மரிக்கும் மது திரையை
கதிரவனாய் மாறி
கொளுத்திவிடுவோம்
காயங்கள் இன்றியே
வாழ்வை காத்துடுவோம்!
ஆக்கம் :காலையடி,அகிலன் .
No comments:
Post a Comment