அர்த்தமுள்ள இந்து சமயம் என்ன சொன்னது?


ஆகமங்கள்வேதங்கள்,  உபநிடதங்கள்மனுதர்மசாஸ்திரங்கள்
நம் சைவ சமயிகள் நமக்கான வேதநூல் எது கேட்டால் அடித்துச் சொல்ல என்று ஒருநூல் இல்லைசிலர்பொதுவான வேதங்கள்உபநிடதங்கள் என்பர்மறு சிலர் சைவஆகமங்கள் என்பர்வேறு சிலர் தேவாரதிருவாசகம் என்றும் கூறுவர்இல்லை,இல்லை மனுதர்ம சாஸ்திரமே நம் வாழ்வு முறை என்றும்  கூறுவர்வைணவபகவத்  கீதையின் பக்கம் சாய்பவர்களும் உளர்சரிஇந்தப் பண்டைய நூல்களில்என்னதான் எழுதப்பட்டு இருக்கிறது என்பது நம்மவர் பல பேருக்குத் தெரியாது.இந்தப் பூவுலகிலே கடவுள் எங்களைப் படைத்துவாழும் வசதியையும் செய்துகொடுத்து,மனிதனின் முன்னேற்றம் கருதிமனிதனுக்காகப் படைக்கப்பட்ட இந்தநூல்களில் அப்படி என்னதான் சொல்லப்பட்டிருக்கிறது என்று ஒருமேலெழுந்தவாரியாக ஒரு மனிதக் கண்ணோட்டம் விடுவோமாநான் ஒரு சமயஞானியோவேதாந்தியோசித்தாந்தியோ இல்லைஒரு சாதாரண மனுஷனாகஇருந்துஇந்த மனிதக் கண்ணால் கண்டதை இந்தச் சின்ன கட்டுரையின் மூலம்எழுதுகிறேன்.
ஆகமங்கள்:
ஆகமங்கள் மூன்று வகையானவைஅவைசைவவைணவசாக்த  ஆகமங்களாகும்சைவாகமம் சமயசம்பிரதாய முறைகளை மிகவும் விரிவாகவிளங்க வைக்கிறதுவெவ்வேறு கடவுள்களுக்கு எப்படிக் கோயில்கள் கட்டுவது,வழிபாட்டு முறைகள்சரியைகிரியையோகம்ஞானம் மூலமாக  பிறப்பிலிருந்து இரட்சித்து ஆன்ம ஈடேற்றம் அடைய  வழிகள்,  வழிபாட்டுக்குரிய தெய்வங்கள்,மந்திரங்கள்தந்திரங்கள்சட்ட திட்டங்கள்விழாக்கள்பூசை வழிமுறைகள்,வழிபாட்டுத் தலங்கள்பிரபஞ்சஆன்மீகத் தத்துவங்கள்உலக இரகசியங்கள் என்றுபல விடயங்களையும் பற்றி விளக்கம் அளிக்கிறது.
வேதங்கள்:
வேதங்கள் நான்குஇருக்குயசூர்ஜாமம்அதர்வம்.
                                 இருக்கு வேதம்:
இதன்முன்பகுதி இந்திரன்,அக்கினி,வாயு,சூரியன் எனப் பல உப தெய்வங்களைப்,பொருள் வேண்டிப்  புகழாரம் சூட்டும் சுலோகங்களைக் கொண்டதுபின்னர்,சோமபானம் வடிக்கும் முறை பற்றியும்கடைசியில் உடன் பயன் தரக்கூடிய  ஞானசக்திமந்திர சக்திகொண்ட வாக்கியங்கள்,  சடங்குகள்பூசைகள்மந்திரங்கள் என்பனபற்றி விளக்கம் கொடுக்கப் பட்டுள்ளது
                         யசூர் வேதம்:
யசூர் வேதம் வெவ்வேறு  கடவுளர்களுக்கும் செய்யக்கூடிய விதம் விதமானசடங்குகள்பூசைகள்யாகங்கள் பற்றிய வழிமுறைகள்விதிமுறைகள்பலமட்டத்தில் ஞானமுள்ளவர்களுக்கு ஏற்றவாறு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது.
                         சாம வேதம்:
சாம வேதம்வெவ்வேறு சடங்குகள்,பூசைகள்யாகங்களிலும் பாடப்பட வேண்டியஇனிய கீதங்களைக் கொண்டுள்ளது
                       அதர்வ வேதம்:
அதர்வ வேதம் வழிபாட்டு முறைகள்மந்திர உச்சரிப்புகள்தந்திர உத்திகள்கடவுள்,ஆன்மா பற்றிய விளக்கங்கள்கிரக வழிபாடுகள்அதற்கான பலிகள்சடங்குகள்,மற்றும் பேய்பிசாசுநோய்நொடிவிசமிகளிளிருந்து தப்புவதற்கான வழிபாட்டுமுறைகள் என்பனவற்றை விளக்குகிறது.
உபநிடதம்:
வேதங்கள் உலக இன்பங்களை வேண்டிச் சிறுதெய்வங்களை எப்படி வழிபடலாம்என்று கூடுதலாகக் கதைத்து ஆன்மீக ஈடேற்றம் பற்றி மேலாகவே தொட்டுச்செல்கின்றதுஆனால்உபநிடதங்கள் உலகப் பற்றுக்களைத் துறந்து எவ்வாறுஆன்மாவானது கடவுளின் காலடியில் சரணடையலாம் என்று போதிக்கின்றது.ஆன்மிக அனுபவம்வாழ்க்கைபிறப்புஇறப்புமறுபிறப்பு தத்துவம் என்பனபற்றிவிளக்கம் கொடுக்கின்றது.
மனுதர்ம சாஸ்திரம்:
மனுதர்மம் உலக சமுதாயம்படைப்புதிடமாக வரையறுக்கப்பட்ட நாலு உயர்-கீழ்சாதி வகுப்பு முறைகள்ஒவ்வொரு சாதியினரும் செய்ய வேண்டியசெய்யக்கூடாதவிடயங்கள்கீழ் சாதியினருக்கான கட்டுப்பாடுகள்தண்டனைகள்,தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகள்,  மேல்சாதியனருக்குச் செய்ய வேண்டியசேவைகள்வசதிகள்உரிமைகள்பெண்கள் இருக்க வேண்டிய கீழ்தர நிலைபற்றிவிதிகள் சொல்லப்பட்டிருக்கின்றனமந்திரங்கள்,  பூசைகள்சடங்குகள் எல்லாம்பிராமணர்களால் மட்டுமே செய்யப்பட வேண்டும்கீழ் ஜாதியினர்பிறப்பிலிருந்துகீழ் சாதியினராகவே இருந்து மேல் சாதியினருக்குச்  சேவகம் செய்வதன் மூலம்மாத்திரமே மறு பிறப்பில் கொஞ்சம் மேலே உயரலாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறதுபூசைகள்மந்திரங்கள்  பிராமணர் மட்டுமே செய்யவேண்டும்.கீழோர்செய்தால் தண்டனை உண்டு.
சாரம்:
சரி,சுற்றிச்,சுற்றிச் சுப்பன் கொல்லைதான்இந்தத் தெய்வீக நூல்கள் எல்லாம் முழுமுழு தெயவீகமாகவே இருக்கின்றன.ஒரு மனிதன் வாழ்வதற்கான நீதிமுறைகளோஅற நெறிகளையோ இவற்றில் கூறப்படவே இல்லைஎல்லாமேகடவுள் என்பவரை  உச்சியில் குஷிப்படுத்தினால் அவர் உள்ளம் மகிழ்ந்து மனிதனுக்கு  பிரதி உபகாரம் செய்வார் என்பது  திருப்பத் திரும்ப உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுஅவரே மனிதனை மனிதனாகப் படைத்து விட்டுசீச்சீ ,இந்த மனிதப்பிறப்பு பொய்யானதுவேறு ஒரு நல்ல வாழ்வு வேறு எங்கோ இருக்கிறது என்றுமனிதனைக் கொண்டுபண விரயம் செய்து பிராமணரின் வருமானத்திற்காக பெரும்பூசைகள் செய்ய வைப்பது என்ன விதத்தில் ஞாயம் என்று விளங்கவில்லை.இந்த,விடயம் எல்லாம் அறியும் அளவிற்கு எங்களுக்கு ஞானம் போதாது என்றுஞானம் பெற்றோர் கூறுவர்மன்னிக்கவும் மனிதனுக்கு மனித பாசையில்மனிதனுக்கு விளங்க ' றம் செய விரும்புஆறுவது சினம்' ' அன்னையும் பிதாவும்முன்னறி தெய்வம்என்று எழுதினால் மிகவும் இலகுவாகவே விளங்குமே?ஏற்கனவே செத்துப்போன தெய்வ மொழியான சமஸ்கிருதத்தில் வாக்கியங்களைக்கருத்து விளங்காமலே சொல்லி அதில் உண்டாகும் அதிர்வின் மூலம் தெய்வத்தைக்காண்பவர்களும் இருக்கிறார்கள்சொல்லும் சுலோகங்களை இறைவனை நோக்கிச்சொல்லாது மனிதனை நோக்கி அவன் வாழ்வில் செய்ய வேண்டியவை,செய்யக்கூடாதவை என்பவற்றைத் திரும்பத் திரும்பக் கூறினால்மாத்திரமே,மனிதனின் மனதில் ஆணி அடித்தால் போல் நிலைத்து நிற்கும்.தமிழில்உள்ள தேவாரதிருவாசகம்,சிவபுராணம் எல்லாமே தேவர்களை ஆரம் செய்யும்பாடல்களே.கடவுளைக் கடவுள் என்று நோக்காமல்,ஒரு சாதாரண இலஞ்சம்வாங்கும் மனிதன் என்றல்லவா நம் நடவடிக்கைகள் எல்லாம் செய்யப்படுகின்றன!
எல்லாம் வல்ல இறவனைப் போயும் போயும் சாதாரண மனுசனாய்ப் பிறந்தவன் நீவாழ்கநீ வெல்கஉனக்குப் போற்றிநீ அவரின் தந்தைஇவரின் மகன்மற்றவரின்மாமன்அவனை வென்றவன்இவனை அளித்தவன்   என்று ஆசீர்வாதம் அல்லதுஅங்கீகாரம்  செய்யும் அளவிற்கு நாம் என்ன அவ்வளவிற்கு வல்லவர்களா?அல்லதுஅவ்வாறு கூறாமல் விட்டால் கடவுள் என்ன “இறந்து' 'தோற்று' 'புகழ்இன்றிப்போய்விடுவாரா?இப்படியாகத்தினமும் பலதடவையும் ஒரு  கடவுளுக்குச் சொல்லிக்கொண்டே இருந்தால் அவருக்கு மட்டுமல்ல இப் புதுமையான உலகில்சிந்திக்க தொடங்கியிருக்கும் இளைய சமுதாயத்திகும்  விசர்,அலுப்பு அல்லது சினம்பிடிக்காதா?ஆதலால்நமது சமய ஆராதனை முறைகளில் நம் வருங்காலசந்ததியினரின் கேள்விகளுக்குத்  திருப்தியான  பதில் கொடுக்கக்கூடிய முறையில்சீர்திருத்தம் செய்யப்படுதல் அவசியம்  ஆகும்.
 …………………………………………………..ஆக்கம்:செல்லத்துரை-சந்திரகாசன்.

2 comments:

  1. மதன்-துரைTuesday, May 29, 2018

    நமது சமயம் மனிதனை நல்வழிப்படுத்த எவ்வகையிலும் முயற்சித்ததில்லை. புரியாத மந்திரமும் ,அரோகரா சத்தமும் ,பிரதடடையும் மனிதனை நல்வழிப்படுத்தப் போவதில்லை. கோவில் வருமானம் கருதி மட்டுமே அனைத்து முறைகளையும் ஆரியர் வகுத்து ஆண்டார்கள். அவர்கள் ஆடசி இன்று இல்லாவிடினும் சமயம் என்ற பெயரில் ஆடசி நடந்துகொண்டுதான் இருக்கிறது.

    ReplyDelete
  2. கண்ணன்Wednesday, May 30, 2018

    யார் சொன்னது ஆரியன் இன்று ஆளவில்லை என்று? தமிழ் நாட்டினை வடக்கில் இருந்துதானே (இந்திய சிறுபான்மை) ஆரியன் இன்னமும் ஆண்டு கொண்டு இருக்கின்றான்!
    ஒருகாலத்திலும் தமிழன், தமிழனை ஆளவே மாட்டான்!

    ReplyDelete