இட்லி பேர்கர்
நம்மில் சிலரின் விருப்ப உணவு இட்லி, ஆனால் சிலருக்கோ இட்லி மிகவும் போரிங் உணவு; குண்டாக, மாவை
வைத்துக்கொண்டு இருக்கும். இரண்டும் ஒரு கரண்டி மாவால் தான் தயாரிக்கப்படுகிறது; ஆனால், எத்தனை
வித்தியாசங்கள் பாருங்கள்! சரி கருத்து கேட்டதெல்லாம் போதும், தற்பொழுது இட்லியை எப்படி இன்டெரெஸ்ட்டிங்
ஆக்குவது என்று படித்தறிவோம்..!
தேவையானவை!
வேக வைத்து தோல் உரித்து, மசித்த உருளைக்கிழங்கு – 50 கிராம், நறுக்கிய
கேரட் – 20 கிராம், நறுக்கிய பீன்ஸ் – 25 கிராம், நறுக்கிய
வெங்காயம் – 50 கிராம், நறுக்கிய கொத்தமல்லித்தழை, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, எண்ணெய்
– தேவையான அளவு.
செய்முறை
1. வாணலியில்
சிறிது எண்ணெயை காயவைத்து, வெங்காயம், பீன்ஸ், கேரட், கொத்தமல்லித்தழை, மிளகாய்த்தூள் இவற்றை சேர்த்து வதக்கி, மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக்
கிளறவும்.
2. மசித்து
வைக்கப்பட்ட உருளைக்கிழங்கை இதனோடு சேர்த்து, சிறு
தீயில் கிளறி இறக்கி, கலவை சற்றே
ஆறிய பின், இந்தக்
கலவையை வட்ட வட்டமாகத் தட்டிக் கொள்ளவும்.
3. இரண்டு
இட்லிகளை பொன்னிறமாகும் வரை பொரித்து, வட்டமாக
தட்டி வைத்திருக்கும் உருளை மசாலா, லெட்டூஸ்
இலை, சீஸ்
இவற்றை இரண்டு இட்லிகளுக்கு இடையே வைத்து, இட்லிக்கு
மேலே ஒரு செர்ரிப்பழத்தை வைத்தால், அவ்வளவே!
இட்லி பேர்கர் ரெடி...!
s.soudarya
0 comments:
Post a Comment