இளம் குழந்தைகள் உயரமாக வளர....?


ஊட்டச்சத்து பற்றாக்குறை உள்ள குழந்தைகள் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால், ஆரோக்கியமாக, உயரமாக வளர்வார்கள் என்று ஆறு மாதங்களாக எக்வேடோரில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
இளம் குழந்தைகள் உயரமாக வளர தினமும் ஒரு முட்டை?படத்தின் காப்புரிமைDERKIEN/GETTY
முட்டையை சமைத்தோ, அரை வேக்காடாகவோ, முழுமையாக வேகவைத்தோ, அல்லது ஆம்லேட்டாகவோ எந்த வடிவில் சாப்பிட்டாலும், அது இளம் குழந்தைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
வளர்ச்சி குறைவைத் தடுக்கும் எளிய, மலிவான, எளிய வழி இது என்று `பீடியாட்ரிக்ஸ்` சஞ்சிகையில் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் முதல் இரண்டு வருடங்கள், அதன் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் முக்கியமானது.
வயதுக்கு குறைந்த வளர்ச்சி
உயரமாக வளர்வதற்கான முக்கியத் தடை ஊட்டச்சத்துக் குறைபாடுதான். சிறுவயதில் ஏற்படும் நோய்தொற்றுகளும், நோயும் குழந்தைகளின் உயரத்தை பாதிக்கின்றன.
உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, ஐந்து வயதுக்கு குறைவான 155 மில்லியன் குழந்தைகள் தங்கள் வயதிற்கு ஏற்ற உயரத்தில் இல்லை, குள்ளமாக இருக்கிறார்கள்.
         நன்றி:புஷ்பா,ராஜ்           


No comments:

Post a Comment