எந்த நாடு போனாலும் தமிழன் ஊர் ''கடலூர்'' போலாகுமா ?


ST.DAVID FORT
கடலூர் (ஆங்கிலம்:Cuddalore), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

சொற்தோற்றம்
முற் காலத்தில் கடலூர், கூடலூர் என்று அழைக்கப்பட்டது. பெண்ணையாறு, கெடிலம், பரவனாறு ஆகிய மூன்று ஆறுகள் கடலில் கலக்கும் இடம் ஆதலால் இப்பெயர் பெற்றது. பிரித்தானிய ஆட்சிக் காலத்திலிருந்து இது கடலூர் என்று அழைக்கப்பட்டது. கி.பி. 1746ஆம் ஆண்டில் பிரித்தானியரின் தென்னிந்தியாவுக்கான   தலைமையகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

வரலாறு
இந்தியாவுக்கு வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் செஞ்சியை ஆண்ட மன்னர்களிடம் இருந்து கடலூரில் இருந்த புனித டேவிட் கோட்டையை வாங்கினார்கள். சென்னை புனித ஜார்ஜ் கோட்டையை பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றிய போது புனித டேவிட் கோட்டைக்கு தங்கள் மாகாணத் தலைநகரை மாற்றி இந்தியாவின் தென் பிராந்தியத்தை இந்தக் கோட்டையில் இருந்து ஆண்டு வந்தார்கள். ஆங்கிலேயர்கள் தங்கள் நாட்டுடனான வாணிபத் தொடர்புகளுக்கு, கடலூர் துறைமுகத்தை அதிக அளவில் பயன்படுத்தியதாக சரித்திரக் குறிப்புகள் தெரிவிக்கின்றன,

கடலூரில், கடலூர் முதுநகர் மற்றும் கடலூர் புதுநகர் என இரண்டு முக்கிய பகுதிகள் உள்ளன. 1866 வரை நகராட்சி அலுவலகம் போன்ற அரசு அலுவலகங்கள் முதுநகர் பகுதியிலேயே இருந்தன. 1866க்கு பிறகு அவை புதுநகர் பகுதியில் உள்ள மஞ்சகுப்பம் எனப்படும் இடத்திற்கு மாற்றப்பட்டது.

சரித்திரக் குறிப்புகள் படி இவ்வூர் சோழர், பல்லவர், முகலாயர் மற்றும் ஆங்கிலேயர் ஆகியோரால் ஆட்சி செய்யப்பட்டுள்ளது. பாரம்பரியப்படி சைவ சமயக் கோட்பாடுகள் இங்கு பின்பற்றப்படுவதன் மூலம் சோழர்கள் இப்பகுதியை ஆட்சி செய்துள்ளது புலனாகிறது.


ஆங்கிலேய ஆட்சி
FISH-BUSINESS 
ஆங்கிலேயர் வருகைக்கு முன்னர் இந்நகரம் மைசூர் மன்னர் ஹைதர் அலியின் கட்டுப்பாட்டில் இருந்தது (1780). அவர்கள் கட்டுப்பாட்டில் இந்நகரம் இஸ்லாமாபாத் என வழங்கப்பட்டது. அவரது மறைவிற்கு பிறகு (1782) ஆங்கிலேயர் இந்நகரை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர திட்டமிட்டனர். இதன் விளைவாக கடலூர் போர் (1783) மூண்டது. இப்போருக்குப் பின்னர் கடலூர் நகரை ஆங்கிலேயர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். ஆங்கிலேயர் இந்நகரை ஒரு பெரிய துறைமுகமாக மாற்றினர். சரக்கு கப்பல் போக்குவரத்திற்கு இந்நகரை பெரிதும் பயன்படுத்தினர். குறிப்பாக நெல்லிக்குப்பத்தில் தாங்கள் துவங்கிய சர்க்கரை ஆலையின் (EID Parrys Ltd (1780)) சரக்குகள் கடலூர் துறைமுகத்தில் கையாளப்பட்டது.

ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இவ்வூர் ஒரு முக்கிய பங்கு வகித்ததனால் இங்கு சில தெரு மற்றும் ஊர் பெயர்களில் ஆங்கிலப் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

புரூக்கீச் பேட்டை : 1767 முதல் 1769 வரை இவ்வூரை ஆட்சி செய்த ஹென்ரி ப்ரூக்கர் எனும் ஆங்கிலேயர் பெயர் வைக்கப்பட்டுள்ளது
கமியம் பேட்டை : 1778 களில் இவ்வூரை ஆட்சி செய்த வில்லியம் கம்மிங் என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
கேப்பர் மலை : 1796 களில் ஆங்கில படைத்தளபதியாக விளங்கிய ப்ரான்சீச் கேப்பர் அவர்களை முன்னிட்டு பெயர் என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
வெலிங்டன் தெரு : ஆங்கில ஆட்சியாளராக விளங்கிய வெலிங்டன் துரை என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
கிளைவ் தெரு : ஆங்கில ஆட்சியை பாரத தேசத்தில் நிருவிய ராபர்ட் கிளைவ் என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.



கடலூரில் தோன்றிய குறிப்பிடத்தக்கவர்கள்
ST.LOURDS CHURCH 
சுப்பராயலு ரெட்டியார் - மதராஸ் மாகாண முதல் முதலமைச்சர்.
ஜோதி இராமலிங்க சுவாமிகள் - சிதம்பரம் அருகில் பிறந்தார்.
எஸ். எஸ். ராமசாமி படையாட்சியார் - நிறுவனர் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி
ஜெயகாந்தன் - சிறந்த கதாசிரியர், பத்திரிகையாளர் மற்றும் பல விருதுகள் பெற்றவர்.
கி. வீரமணி - திராவிடர் கழகம் கட்சியின் தலைவர் மற்றும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்.
ஆற்காடு இரட்டையர் என்படும் ஆற்காடு சகோதரர்கள் என்று அழைக்கப்படும் ஆற்காடு ராமசாமி முதலியார் மற்றும் ஆற்காடு லட்சுமணசாமி முதலியார் கடலூரில் பிறந்து வாழ்ந்து வந்தார்கள்.
சி.கே. ரங்கநாதன் - வியாபார துறையில் வெற்றி பெற்றவர்
வி. வைத்திலிங்கம் - புதுவை மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர்.
நீதிபதிகள் கே. கண்ணன், ஆர். பாலசுப்ரமணியம், கே.சம்பத்.
கலைமாமணி கடலூர் எம். சுப்ரமணியம் (1920–1997)
எஸ். பாலாஜி, ஆர். ராம்குமார் - துடுப்பாட்ட வீரர்கள்Peter Tranchell (1922–1993 ) பிரித்தானிய இசை
அமைப்பாளர்
கடலூர் மாவட்ட முதல் இஸ்லாமிய தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் ஜனாப் கி. அப்துல் லத்தீப் எங்கிற ஹிலால்
என். டி. கோவிந்தசாமி கச்சிராயர் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் 1952)
மும்பை ஹாஜி மஸ்தான் கடலூரில் வாழ்ந்து வந்தார்.

கடலூர் துறைமுகம்
200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கடலூர் இயற்கைத் துறைமுகம், இந்தியாவுக்கு வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்களின் தென் இந்தியாவின் முதல் தலைநகரமாக விளங்கியது. தங்கள் நாட்டுடனான வாணிபத் தொடர்புகளுக்கு, கடலூர் துறைமுகத்தை அதிக அளவில் பயன்படுத்தியதாக சரித்திரக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் இரண்டாவது பள்ளிகூடம் புனித டேவிட் பள்ளி கி.பி 1717 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியாவின் ராபர்ட் கிளைவ் தங்கியிருந்தது கடலூர் தான். இன்றும் கடலூர் துறைமுகத்தில் கிளைவ் தெரு, சைமன் கார்டன், கிங் ஜான் பேட்டை, லாரன்ஸ் ரோடு, புரூகிஸ் பேட்டை, இன்றும் நிலவில் உள்ளது. தமிழகத்தின் முதல் வங்கி இம்பிரியல் வங்கி இங்கு தான் செயல்ப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. பரங்கிப்பேட்டையில் இருந்த இரும்பு உருக்கு ஆலைகளில் தயாரிக்கப்பட்ட இரும்புத் தளவாடங்கள், கடலூர் துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் மூலம் இங்கிலாந்துக்கு
கொண்டு செல்லப்பட்டன. சுதந்திரத்துக்குப் பின் கடலூர் துறைமுகத்தில் இருந்து, சேலத்தில் வெட்டி எடுக்கப்பட்ட இரும்புக் கனிமங்கள், வெள்ளைக் கற்கள் போன்றவை கப்பல்கள் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

1985 வரை 150 ஊழியர்களுடன் இத்துறைமுக அலுவலகம் செயல்பட்டது. 500 சரக்கு விசைப் படகுகளுடன், சுமார் 1 லட்சம் தொழிலாளர்களுக்கும், இங்கு வேலைவாய்ப்பு இருந்தது. தற்போது 7 ஊழியர்களுடன் இயங்கிக் கொண்டு இருக்கிறது.

வேளாண்மை
சாகுபடி பரப்பு : 2,46,125 ஹெக்டேர். இதில் நெல் சாகுபடியாகும் பரப்பு 1,31,000 ஹெக்டேர். விவசாயத்தில் ஈடுபட்டிருப்போர் : 6,33,768 பேர். கொள்ளிடம் பாயும் பகுதிகளில் நெல்லும், பண்ருட்டி வட்டத்தில் பலாபழமும், முந்திரியும் பெருமளவில் விளைகின்றன. மணிலாப்பயிர் விளைச்சல் இம்மாவட்டத்தில் அதிகம் நல்ல எண்ணெய் சத்து உள்ள காரணத்தால் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நெல்லையடுத்து, நஞ்சையிலும், புஞ்சையிலும் கரும்பு விளைகிறது. இனிப்புச்சத்து அதிகம் உள்ள கரும்புகள் இங்கு உற்பத்தியாகின்றன. புஞ்சை நிலத்தில் கேழ்வரகு, கம்பு, எள், சோளம், துவரை, வரகு விளைகின்றன. கரிசல் மண் உள்ள சில இடங்களில் குறைந்தளவு பருத்தியும் விளைகிறது.

ஆலைகள்

சர்க்கரை ஆலைகள், கடலூர் வட்டத்தில் நெல்லிக் குப்பம், விருத்தாசலம் வட்டத்தில் பெண்ணாடத்திலும் உள்ளன. கடலூரில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையும் பண்ருட்டி, கடலூர் முதலிய இடங்களில் இரசாயனக் கலவை உரத்தொழிற்சாலைகளும் உள்ளன.

சுற்றுலா தலங்கள்
வெள்ளி கடற்கரை (கடலூர்)
செயிண்ட் டேவிட் கோட்டை
பாடலீஸ்வரர் கோயில்
திருவந்தீபுரம் சுவாமி கோயில்
திருவந்தீபுர ஹையக்றேவேர் கோயில்
பள்ளிவாசல்
நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்.எல்.சி) நெய்வேலி
சிதம்பரம் நடராஜர் கோயில்
பிச்சாவரம், உலகின் மிகப்பெரிய மாங்கிரோவ் காடுகள்
திருமுடம் பூவராக சுவாமி கோயில்
வடலூர் வள்ளலார் சத்ய ஞான சபை
குறிஞ்சிபடி சுப்றை சுவாமிகள் கோயில்
வேங்கடம்பெட் வேனுகோபல சுவாமி கோயில்
திருவதிகை வீரடநேச்வர் கோயில்
திருச்சோபுரம் சுவாமி கோயில்
  தகவல்:கயல்விழி.பரந்தாமன்  


0 comments:

Post a Comment