நடந்தது என்ன? ....ஒரு ஆய்வு
வேதகால [ கிமு 1500 ஆம் ஆண்டளவில் தொடங்கி கி.மு. 500ஆம் ஆண்டு வரை நீடித்தது என்பதுஐதிகம் ] தொடக்கத்தில் அசுரரும் தேவர்களும் சிறு தெய்வங்களாகவே கருதப்பட்டார்கள்.சிலர்இரண்டு நிலையையும் கொண்டிருந்தார்கள்[வருணன்].அசுரர் என்ற சொல் வலிமை மிக்கவர் என்றபொருளில் மட்டுமே வேதத்தில்[ வேதம்= மறை ] பயன்படுத்தப்பட்டுள்ளது. ரிக் வேதத்தில் சுரர் என்றசொல்லே இல்லை. அசுரர் என்ற சொல்லிலிருந்து ‘அ’ என்ற எழுத்தை நீக்கிப் பிற்காலத்தில் சுரர்[தேவர்] என்ற சொல்லை உருவாக்கினார்கள். பல இடங்களில் அசுரர்கள் வலிமை மிக்கவர்கள் யோக்கியர்கள்என்றுள்ளது. வேதப் பாடல்களில் உள்ள துதிகள் இயற்கையையே பாடுகின்றன. இந்திரன், வருணன், அக்னி என்று சொல்லப் படுபவை ஐம்பூதங்களே.அசுரர் என்றால் தீயவர்கள்,அவர்களுக்கும்தேவர்களுக்கும் எப்பொழுதும் சண்டை நடக்கும் என்பதை மட்டும் கேட்டுப் பழகி வந்த நமக்கு இதுபெரும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கும்..
பிந்திய பிரமாண நூல்களான புராணங்கள்[புராணம் என்ற சொல் பண்டைக் கதைகள்,உலகவரலாறுகள் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்படுகின்றது.பரம்பரையாகக் கூறப்பட்டு வந்தபுராணங்கள் 18. இவை மகாபுராணங்கள் எனப்படும்.வேதவியாசர் புராணக்கதைகளைக்கூறுகிறார்.வேதவியாசர் வாழ்ந்த காலத்தைக் கருத்திற் கொண்டு, புராணங்களின் காலம் கி.மு.6 அல்லது கி.மு. 7-ஆம் நூற்றாண்டு என்று சமய நூல் விற்பன்னர்கள் கருத்துத்தெரிவித்துள்ளனர்.மேலும்.குப்தர்கள் காலத்தில் வடமொழியிலுள்ள தொன்மையான புராணங்கள்ஒழுங்குபடுத்தித் தொகுக்கப் பெற்றன என்பர். எனவே வடமொழியில் புராணங்கள் தோன்றிய காலம்கி.பி.300 க்கும் முற்பட்டதாகக் கருத இயலும் ] ,இதிகாசங்கள் , உபன்யாசங்கள் , கீதை என்பனை சமஸ்க்ருதத்தில் எழுதும் போதே இருக்கு வேதத்தில்[வேதங்களை ரிக், யஜுர், சாமம், அதர்வணம் எனநான்காகப் பிரித்துள்ளனர். "ரிக்' என்றால்"துதித்தல்'. முதல் வேதமான ரிக்வேதம் இந்திரன், வருணன்ஆகிய தேவர்களைத் துதித்துப் போற்றுகிறது. "யஜ்' என்றால்"வழிபடுதல்' . வேள்வி செய்து வழிபடும்முறையை யஜுர் வேதம் குறிப்பிடுகிறது."ஸாம்' என்றால் "சந்தோஷப்படுத்துதல்'அல்லது"சமாதானப்படுத்துதல்'. இனிமையோடு பாடலாகப் படிக்கும் விதத்தில் இந்த வேதம் அமைந்துள்ளது. நான்காவது வேதம் அதர்வனமாகும். "அதர்வன்' என்பதற்கு "அக்னியையும், சோமனையும் வழிபடும்மதகுரு' என்று பொருள்.] உயர்வாக சொல்லப்பட்ட அசுரர் என்ற சொல்,உயர்ச்சிப் பொருளை மாற்றி, இதற்கு அரக்கர் என்று பொருளிட்டுவிட்டார்கள்.மேலும் தேவர்கள் நேர்மறை சக்திகளாகவும் அசுரர்கள்எதிர்மறை சக்திகளாகவும் சித்தரித்தார்கள். .
புராணங்களை உற்று கவனித்திருக்கிறீர்களா? அசுரர்களை எப்படி காட்டிஇருப்பார்கள், மாமிசம் உண்பவர்கள், அட்டுழியம் செய்பவர்கள். தேவர்கள் அமிர்தம்[கள்ளுமது] அதாவது சைவம்உண்பவர்கள்[சோமக்கள்ளைக் குடிப்பவனே! எங்கள் யாகத்திற்கு(கால்நடைகளைக் கொன்று நடத்தும் விருந்துக்கு) வருக; கள்ளைஅருந்துக, செல்வங்களைத் தரும் – பசுக்களைத் தரும் உனது செயல்திருப்தி அளிக்கிறது./ரிக் வேதம் – இந்திரன் துதி/மண்டலம் 1, அதிகாரம்(சூக்தம்) 4, பாடல் (சுலோகம்) 2 மேலும் சுரன்[தேவர்] என்றால் சுரபானம்(மது) அருந் துபவர்கள் எனவும் பொருள் படும்], அப்பாவிகள். இது நாம்சாதாரணமாக பார்ப்பது. உற்று கவனியுங்கள். அசுரர்கள் அளவு கடந்தபக்திமானாக இருப்பார்கள். பெண்கள் பக்கம் செல்லவே மாட்டார்கள். நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டார்கள். அவர்கள் செய்வது எல்லாம் ரவுடியிசம் மட்டுமே. உதாரணமாக யாகத்தைத்[யாகம் = வேள்வி ] தடுப்பார்கள்.
ஆனால் மாறாக தேவர்கள் எந்த அராஜகத்திலும் ஈடுபடமாட்டார்கள். ஆனால் பெண் பித்தர்கள், அடுத்தவன் மனைவியை கவர்பவர்கள், சூதாடுவார்கள், துரோகம் செய்பவர்களாக இருப்பார்கள்.[ “வழிப்போக்கர்களிடமிருந்து கொள்ளையடிக்கும் திருடனைப்போல், தெய்வமற்ற தாசர்களுடையசெல்வங்களைத் திருடி இந்திரனைப்போற்றும் ஆரியர்களுக்கு அளிக்க வேண்டும். ஆரியர்களின்புகழையும் பலத்தையும் சிறப்பிக்க வேண்டும்”/ரிக் வேதம் – இந்திரன் துதி/மண்டலம் 1, அதிகாரம்(சூக்தம்) 103, பாடல் (சுலோகம்) 3,6 / குறிப்பு:- ஆரியரல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர் (சூத்திரர்)கள்என்றும், தஸ்யூக்கள் என்றும், அசுரர்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது.] ஆனால் அவர்கள் நல்லவர்கள். இது கொஞ்சம் முரணாக இருக்கிறதல்லவா?
மறைமலை அடிகள் என்ன சொல்லுகிறார் என்று பார்போம்
ஆரியர்கள் இந்திய பகுதிக்கும் வரும்பொழுது வடக்கே, ஆப்கானிசுதான் வரை தமிழர்கள் அரசாட்சிவழங்கியதாக குறிப்பிடுகிறார். ஆடு, மாட்டை ஓட்டி வந்த ஆரியர்கள்{இந்திரா!“மரங்களில் தங்கி, இன்பமாகி, இரையை நாடிப் பறந்து செல்லும் பறவைகளைப்போல், ஆரியர்களாகிய நாங்கள்ஓரிடத்திலிருந்து வேறோரிடத்திற்குப் போகும் போது எங்கள் தேர்களைக் காப்பாற்றவும்/மண்டலம் 2, அதிகாரம் (சூக்தம்) 31, பாடல் (சுலோகம்)
1, இந்திரன்! ஒவ்வொரு நாளும் நல்லதையே செய்துகொண்டிருக்கிறான். அவனை எங்களுடைய (ஆரியர்களுடைய) பாதுகாப்பிற்காக, பால்காரன் பால்கறப்பதற்குக் கறவைப்பசுவை அழைப்பது போல் அழைக்கிறோம்./மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 4, பாடல் (சுலோகம்) 1] }இந்திய பகுதியில் வரும் பொழுது, அக்காலத்திலேயே மாட மாளிகைகளையும், கோட்டைகளையும் கட்டி, நல்லாட்சி புரிந்த அரசர்களை கண்டு வியந்தனராம். அரசியல்முறைதவறாது வாழ்ந்த அரசர்களை "அசுரர்" என்று பெயரிட்டு வழங்கினார்களாம். இருக்கு வேதத்தின்(Rigveda) முதல் ஒன்பது மண்டிலங்கள் முழுவதூஉம் "அசுர" என்னஞ்சொல் "வலிய" அல்லது"அதிகாரமுடைய" என்னும் பொருளில் உரிச்சொல்லாய் வழங்கப்பட்டு வருகின்றதென்றும், "அசுரர்" எனப்படுவதற்கு "தலைவர்" என்று பொருள் வழங்கப்பெற்றதாகவும் கூறுகிறார்.
1, இந்திரன்! ஒவ்வொரு நாளும் நல்லதையே செய்துகொண்டிருக்கிறான். அவனை எங்களுடைய (ஆரியர்களுடைய) பாதுகாப்பிற்காக, பால்காரன் பால்கறப்பதற்குக் கறவைப்பசுவை அழைப்பது போல் அழைக்கிறோம்./மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 4, பாடல் (சுலோகம்) 1] }இந்திய பகுதியில் வரும் பொழுது, அக்காலத்திலேயே மாட மாளிகைகளையும், கோட்டைகளையும் கட்டி, நல்லாட்சி புரிந்த அரசர்களை கண்டு வியந்தனராம். அரசியல்முறைதவறாது வாழ்ந்த அரசர்களை "அசுரர்" என்று பெயரிட்டு வழங்கினார்களாம். இருக்கு வேதத்தின்(Rigveda) முதல் ஒன்பது மண்டிலங்கள் முழுவதூஉம் "அசுர" என்னஞ்சொல் "வலிய" அல்லது"அதிகாரமுடைய" என்னும் பொருளில் உரிச்சொல்லாய் வழங்கப்பட்டு வருகின்றதென்றும், "அசுரர்" எனப்படுவதற்கு "தலைவர்" என்று பொருள் வழங்கப்பெற்றதாகவும் கூறுகிறார்.
ஞிமிறு (தமிழ்)= மிஞிறு (ஆரியம்)
தசை (தமிழ்)= சதை (ஆரியம்)
விசிறி (தமிழ்) = சிவிறி (ஆரியம்)
என்று பல சொற்கள் எழுத்து மாறி வந்ததுப் போன்றே அரசர் என்பது அசுரர் ஆனது என்கிறார்.
[மேலும் வரலாற்று ஆசிரியர்கள் பி.டி.சீனிவாச அய்யங்காரிலிருந்து பண்டித ஜவகர்லால் நேரு, விவேகானந்தர் உள்பட கூறியிருப்பது எல்லாம் - இந்த அரக்கர்கள், அசுரர்கள் என்பவர்கள் எல்லாம்திராவிடர்கள்தாம்]
உதாரணமாக பால் கடல் கடைதலில் தேவர்களை பொதுவாக நல்லவர்களாகவும் அசுரர்களைதீயவர்களாகவும் அழைத்துள்ளனர்.ஆனால் உண்மையில் இருவரும் மிகவும் கடின மூர்க்கத்தனமானஒற்றுமை இல்லாத தொடருந்து எதிர் அணியுடன் முட்டி மோதும் வீரர்களாகும்.
தேவர்களின் பலத்தினாற் மட்டும் பாற்கடலை கடைவதியலாதகாரியமென யறிந்த மகாவிஷ்ணு ,தேவர்களிடம் உங்கள் முன்இருக்கும் வேலை மிகவும் கடினமானது ,உங்களால் மட்டும்தனியாக பாற்கடலைக் கடைய முடியாது ,அசுரர்களும் சேர்ந்துதான்அதைச் செய்யமுடியும்.அதனால் உங்களுக்கு அசுரர்களின் உதவிவேண்டும் என்று எடுத்து கூறினார் .அதனால் தேவர்கள் அசுரர்களின்உதவியை நாடினார்கள். திரண்டெழும்(சாகாமல் உயிர்வாழ உதவும்)அமுதத்தில் சரிபகுதி என்றனர். நம்பினர் அசுரர்கள் .ஆனால் இதுஒரு தந்திரமே.
“அசுரர்கள் ஆக தமது ஆற்றலை மட்டுமே பயன்படுத்துவார்கள், அவர்களின் பங்கான "சாவ வரம்" கிடைக்காது,நான் அதை பார்த்துக் கொள்வேன்” என மகாவிஷ்ணு உறுதி கூறினார் தேவர்களுக்கு.மேலும் மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்கள் எல்லாம் அசுரர்களை - அரக்கர்களைக் எமாற்றிகொல்லத்தான். இராவணனைக் கொன்றதும் அப்படியே! ராவணன் செய்த தவறு என்ன? அடுத்தவன்மனைவியை கடத்தி சென்றது. ஆனால் இந்திரன் மாதிரி கற்பழிக்கவில்லையே. தன் தங்கைக்குதீங்கிளைத்தவனை தண்டிக்க வேண்டும் என்று எந்த அண்ணனுக்கும் ஆசை இருக்கும். இதுநியாயமான ஆசைதானே? சொல்லப்போனால் சீதையை மரியாதையாகத்தான் நடத்தினான். ராவணன் மிகச்சிறந்த பக்திமான். நல்ல அரசன். கடைசி வரை நேர்மையாக போரிட்டவன்.கடைசியில்இராமன் ஏமாற்றுகளால் சீதையை மீட்டான். எனினும், சீதையின் தூய்மையை .நம்பவில்லை.
சீதையை "அரக்கன் மாநகரில் வாழ்ந்தாயே, ஒழுக்கம் பாழ்பட இருந்தாயே, மாண்டிலையே?" என்றுராமன் குற்றம்சாட்டுகின்றான். இராவணனின் சிறையில் உறுதியாய் உயர்ந்து நின்ற அந்த சீதையைப்பார்த்து, "இனி எமக்கும் ஏற்பன விருந்து உளவோ?"என மேலும் ராமன் கூறுகிறார்.
கெளமதனின் மனைவி அகலிகை. இந்திரனுக்கு அவள்மீது ஆசைபிறந்து விட்டது.பொழுது புலர்ந்ததாய்ப் பொய்த் தோற்றம் ஏற்படுத்திகெளதமனை அக்குடியிலிருந்து போகச்செய்கின்றான். பிறகுகெளதமனின் தோற்றத்தில் உள்நுழைந்து அகலிகயைப்புணர்கின்றான். அகலிகையும் ஆரம்பத்தில் வந்தவன் தன் கணவர்என்று நினைக்கின்றாள். ஆனால் வந்தவன் கணவன் இல்லைஎன்பதை விரைவில் உணர்ந்த பொழுதும் அவனை ஒதுக்கவில்லை.
"புக்கவ ளோடும் காமப்புதுமணத் தேறல்
ஒக்கஒண் டிருத்தலோடும் உணர்ந்தனள், உணர்ந்த பின்னும்
தக்கதன்று என்ன ஓராள் தாழ்ந்தனள்"
அத்தகைய அகலிகைக்கு இராமன் கருணை காட்டுகின்றான். புனர் வாழ்வளிக்கின்றான்.
"நெஞ்சினாள் பிழை இலாளை நீ அழைத்திடுக"
"மாசுஅறு கற்பின் மிக்க அணங்கினை அவன் கை ஈந்து"
அன்று நடந்தது என்ன? இன்று நடப்பது என்ன ?
அதை நிரூபிப்பதற்காக சீதை தீக்குள் புகுந்து வெளிவர வேண்டியதாயிற்று. மீண்டும் ஒருநாள்அயோத்தியின் குடிமக்களில் ஒருவன், சீதை இராவணனால் கடத்திச் செல்லப்பட்டதைக் குறித்துஐயுற்றுப் பேசியதை அறிந்த இராமன் சீதையை நம்பாமல் காட்டுக்கு அனுப்பினான். அப்போது சீதைகருவுற்றிருந்தாள். சீதைக்கு நடந்த கொடுமைக்கும் அவள் அடைந்த துயரங்களுக்கும் யார் காரணம்? ?மகாத்மா காந்தி என்ன கூறினார் தெரியுமா ?"என்னுடைய ராமன் வேறு, அயோத்தி ராமன் வேறு. என்ராமன் சீதையின் கணவனல்ல-தசரதன் மைந்தனல்ல. ராமாயணக் கதையில் வரும் ராமனை நான்பூஜிக்கவே மாட்டேன்."என்றல்லவா?
சிறிதளவு உழைப்புக்கு பெருமளவு பயன்களை அனுபவிப்பது ஆளும்வர்க்கம். உழைக்கும் வர்க்கமக்களுக்கு மிகக்குறைந்த பயன்களையே அது அனுமதிக்கும். இது நாம் அறிந்த உண்மை
இப்ப கூறுங்ககள் "எந்த பக்கம் நல்லது ? எந்த பக்கம் தீயது ?"
இருவரும் தமது நம்பிக்கைக்காக கொலை செய்யக் கூடியவர்கள். இருவருமே தமது சுயநலத்திற்க்காக தமது வித்தியாசங்களை ஒரு புறம் தள்ளியவர்கள் , இருவருமே கொடூர வீரர்கள்.
இன்றைய நவீன உலகில், ஒரு உதாரணத்திற்கு இஸ்ரேலியர்களையும் பலஸ்தீனியர்களையும் எடுங்கள் ."வெஸ்ட் பாங்கில்" ஒரு பகுதி நிலத்திற்காக வருடக்கணக்காக ஒரு மோதலில்இடுபட்டுள்ளார்கள் இருவருமே அந்த இடத்திற்கு தாமே உரிமை உடையவர்கள் எனநம்புகிறார்கள்.இருவருமே ஒரு கூர்மையான விரோதிகள். .இரு பக்கத்திலும் உள்ள தீவீரவாதிகள்மிகவும் கொடூர தந்திரங்களை தமது இலக்கடைய பாவிக்கிறார்கள் .என்றாலும் ஒரு சமாதானத்தின்அடிப்படையில் தமது வேறுபாடுகளை ஒரு பக்கம் ஒதுக்கி கொள்கையளவில் ஏற்றுள்ளார்கள் .
ஆகவே மீண்டும் உங்களை கேட்கிறேன் "எந்த பக்கம் நல்லது ? எந்த பக்கம் தீயது ?"
மீண்டும் நாம் "பால் கடல்" பக்கம் போவோம் .இது தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் ஒரு கூட்டு முயற்சி. மந்தர மலையை மத்தாக்கி வாசுகிப்பாம்பை நாணாக்கி பாற்கடலை கடைந்தனர். கயிறான பாம்பின்தலைப் பக்கம் பற்றி, வலிந்து கடைந்தோர் (கதைப்படி) அசுரர்கள். வாலைப் பிடித்து கடைந்தோர்தேவர்கள்.தலைப்பக்கமாக அசுரர்கள் இருந்ததால் பாம்பின் விஷக்காற்று பட்டு, அசுரர்களின்சிவந்தமேனி கறுப்பாகி விடுகிறது.சிவந்தமேனி கறுப்பாகிற அளவிற்கு அசுரர்கள் கடுமையாகஉழைத்து பொருட்களை உருவாக்குகிறார்கள்.அப்போது பாற்கடலை கடைய, கடைய காமதேனு, கற்பகவிருட்சம், உலக அழகியான லக்ஷ்மி என்று ஒவ்வொன்றாக பாற்கடலில் இருந்து வெளியே வருகிறது. அவை எதற்குமே அசுரர்கள் ஆசைப்படவில்லை. எல்லாவற்றையும் தேவர்களேஎடுத்துக்கொண்டனர்.இறுதியாக அமுதம் வெளிவருகிறது. சாகாமல் உயிர்வாழ உதவும் அமுதத்திற்குமட்டுமே அசுரர்கள் ஆசைப்பட்டார்கள். அதைக்கூட முழுதாக தமக்கே வேண்டுமென அசுரர்கள்கேட்கவில்லை. தங்களுக்கும் கொஞ்சம் அமுதம் தரப்பட வேண்டுமென்றுதான் கேட்டார்கள்.
இடையில் வந்த பொருளையெல்லாம் தம தாக்கிக் கொண்ட தேவர்கள், இறுதியிலும் செய்து கொண்டஒப்பந்தப்படி அமுதம் அசுரருக்குத் தர மறுத்து விட்டனர். இதனால் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும்சண்டை ஏற்பட்டபோது, மோகினி வடிவத்தில் வந்த மகாவிஷ்ணு தேவர்களைப் பார்த்து நீங்கள் இப்படிஅநியாயம் செய்யலாமா? இது எனக்குக் கொஞ்சமும் பிடிக்காது! என்று தேவர்களை வெறுப்பதுபோலும், அசுரர்கள் பக்கம் சார்ந்து பேசுவது போலும் நடிக்க, அதை நம்பிய அசுரர்கள் மோகினியிடம்அவளையே அனைவர்க்கும் அமிர்தத்தைப் பங்கிட்டளிக்குமாறு வேண்டினர். தேவர்களும் அதனைஆமோதித்தனர். பின்னர் தேவர்களை ஒரு பக்கமும், அசுரர்களை மற்றொரு பக்கமும் வரிசையாகஉட்காரச் செய்தாள். பின்னர் அசுரர்களைத் தன் மோகனச் சிரிப்பால் வசப்படுத்திக்கொண்டேஅவர்களுக்கு சுராபானத்தையும், தேவர்களுக்கு அமிர்தத்தையும் பங்கிட ஆரம்பித்தாள். மோகினியின்மாயத்தால் அசுரர்களுக்குச் சுராபானத்திற்கும் அமிர்தத்துக்கும் வேறுபாடுதெரியவில்லை.மேனியெல்லாம் கருக கடுமையாக உழைத்து அசுரர்கள் பாற்கடலை கடைந்ததுஉயிர்வாழ உதவும் அமுதத்திற்காகத்தான். அதைக்கூட தராமல், தேவர்கள் மகாவிஷ்ணு உதவியுடன்ஏமாற்றிவிட்டர்கள் .
ஏமாற்றுவது மகாவிஷ்ணுவிற்கு கை வந்த கலை.மாவலி சக்கரவர்த்தி, பெரும் புகழ் பெற்ற மன்னன். அவனை தீயவன் என்றும், கொடியவன் என்றும் வர்ணித்து, அவன் தொடர்ந்து ஆண்டுகொண்டிருந்தால், நாம் ஆட்சிக்கு வர முடியாது.இப் பொழுதே அவனை வீழ்த்தி விட வேண்டுமென்றுஅவனைப்பற்றி இல்லாததும், பொல்லாததுமாகச் சொல்லி, அவனை அழிப்பதற்காக தேவர்கள்மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டு, அதற்கு அவர், ``பயப்படாதீர்கள், நான் அவனை அழித்துவிடுகிறேன் என்று சொல்லி வாமனாவதாரம் எடுத்தா ரென்றும், எடுத்து மூன்றடி மண் கேட்-டாரென்றும், அவனும் கொடை வள்ளல் என்ற காரணத்தால் தருவதாக வாக்களித்தான் என்றும், வாக்களித்தபடி மூன்றடி மண் கொடு என்று கேட்டு, இரண்டடியை பூமியிலே அளந்து விட்டு, மூன்றாவது அடிக்கு நிலம் இல்லாத காரணத்தால் அவன் தலையிலே காலைப் பதித்து அவனைஅழித்து விட்டான் என்றும், அப்பொழுது இறக்கும் தறுவாயில் மாவலி மன்னன், மகாவிஷ்ணுவைப்பார்த்து, ``சரியாகவோ, தவறாகவோ என்னை நீங்கள் இன்றைக்கு வீழ்த்தி விட்டீர்கள், ஆனால் நான்என்னுடைய மக்களை ஆண்டுக்கொரு முறை போய்ப் பார்த்து அவர்கள் நன்றாக இருக்கிறார்களா, வளமாக வாழ்கிறார்களா என்று தெரிந்து கொள்ள என்னை நீங்கள் அனுமதிக்க வேண்டும் என்றுகேட்டுக் கொண்டானென்றும், அதற்கேற்ப அவனுக்கு அந்த வரம் வழங்கப்பட்டது அதுதான் ஓணம்பண்டிகைத் திருநாள் ஆகும்
இதிலிருந்து நீங்கள் புரிந்து கொள்ளலாம். மாவலி என்ற மன்னன், அரக்கன் அல்ல, நல்லவன், மனிதன்தான் மக்களை வாழ வைத்தவன், தன்னுடைய குடிமக்களுக்கு செங்கோல் மூலமாகச் சிறப்புசெய்தவன், அவர்களுடைய வாழ்வையெல்லாம் செழிக்க வைத்தவன், இப்படித்தான் தேவர்கள்அசுரர்கள் என்ற இந்த இரண்டு பிரிவினர் பற்றிய வரலாறு இருக்கிறது.
இன்னும் ஒரு அவதாரத்தில் கடவுள் விஸ்ணு ராமனாக அனுமனின் சகோதரனை பின்னல் யுத்த தர்மத்திற்கு புறம்பாக கொலை செய்து அனுமனின் உதவியை பெற்றார் .ஒரு தனிப்பட்ட உதவியைபெற ,எப்படி கடவுள் இந்த கொடூர செயலை செய்தார் ?
இந்த கடவுள் அவதாரமான ராமன் மேலும் மிகவும் ஈவு இரக்கமின்றி சம்புகாவின் உயரை தவம்செய்கிறான் என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே பறித்து எடுத்தான். இப்போது ராமர் போல் ஒரு அரசன்இருந்தால் சூத்திரர்களின் கதி என்ன ?
ஒரு சமயம் என்பது நீதி, அன்பு ,மானிடம்,சம உரிமை என்பனவற்றினை முலமாக,அடிப்படையாககொண்டிருப்பதுடன் உயர் மனித நேயத்தை ,இயல்பை திருப்தி படுத்தக் கூடியதாகவும் ,தனதுபடைப்பின் உயிர்களுக்கிடையில் வேறு பாட்டை காட்டாமல் ,அது கருப்போ வெள்ளையோ உயரமோகுட்டையோ பணக்காரனோ ஏழையோ எல்லோரிடமும் ஒரே தன்மை ,நிலைபாட்டை உடையதாகஇருக்க வேண்டும்.
[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
No comments:
Post a Comment