பொய்மை குறுகி வர
உண்மை எங்கும் நின்று விட
ஒன்று கூடி காதல் கொள்வோம் வாரீர்
பொய் மனங்களை புதைத்து
விட்டு
உண்மையையும்
வளர்த்துவிட்டு
உலகம் எங்கும் அமைதியான
விடிவை காண்போம் வாரீர்!
உள்ளத்துள் உலவுகின்ற
உண்மை
உள்ளத்தின் ஆரோக்கிய
இன்பம்,
அதுவே கொடியென்று ஏறியே
யாவர்க்கும் அன்பை
கொடுத்து
தன்னையும் இன்பமடைய அது
வைக்கும்!
உள்ளத்தில் உண்மை
வளர்த்தால்
தவறுகள் வராமல் கண்டித்து
உள்ளத்தை வளப்படுத்தி
விடும்!
விழும் போதும் உண்மை
காயம் செய்து கொல்லாது
அதிகம் நேசம் கொண்டு,
கூடி வாழ்வோம் வாரீர்!
................................................ .காலையடி,அகிலன் ராஜா
No comments:
Post a Comment