ஏன் படைத்தாய் இறைவா என்னை?

[இன்று மனிதன் இப்படியும் சிந்திப்பானா ? உழைக்கவேண்டும், சேர்க்கவேண்டும், கூட்டவேண்டும்,  பெருக்கவேண்டும், சிந்திக்க நேரம் எங்கே? ]
ஆட்டுக்குட்டி ஒன்று  பெற்றோர், உற்றார் உறவு இன்றி, தானே மேய்ந்து, தானே வளர்ந்து, பருவமெய்தி, கணவரும் இன்றி, துணைவரும் இன்றி ஒற்றைப் புணர்தலில் கருவும் தரித்து, கர்ப்பகால பராமரிப்பும் இன்றி, மருத்துவ சோதனையோ, மருந்துகளோ, மாத்திரைகளோ இன்றி, வைத்தியர் உதவியோ, தாதியோ இல்லாது, உரிய காலத்தில் சுகமாகவும், சுலபமாகவும் இன்னொரு குட்டியைப் பிரசவித்து, பிறந்த  குட்டியை ஆசையோடு நக்கி, சுத்தமாக்கி விடவே, அந்தக் குட்டியும், தள்ளு வண்டிப் பயிற்சி இன்றி,  வேறொருவர் உதவியும் இன்றி, கணப் பொழுதில்  தானாகவே எழுந்து, கால் தூக்கி நடந்து, தாய் முகம் அறிந்து, பால் மடி உணர்ந்து, அம்மா என அழைத்து, அதன்பால் சென்று, பயிற்றப் படாமலேயே முலைகளைச்  சூப்பி, பாலை உமிழ்ந்து , தாய் வழி தொடர்ந்து, தந்தை  வழி நடத்தல் இன்றி, சகோதர பாச உணர்வுகள் இன்றி, உறவினர் அரவணைப்பு இன்றி, சொந்தங்கள், பந்தங்கள் இன்றி, ஊரார் உலகினர் தொடர்பும் இன்றி, இளம் வயதிலேயே தாயை விட்டுப் பிரிந்து, கவலை இன்றி, குரோதம் இன்றி, பொறாமை இன்றி, பேராசை இன்றி, கொலை வெறி இன்றி, பட்டினி இன்றி, வேதனை இன்றி, மிகவும் அமைதியான, சந்தோசமான, திருப்திகரமான வாழ்வு வாழ்ந்து,  இந்த . . . .(திரும்பவும்)

ஆட்டுக்குட்டி ஒன்று  பெற்றோர், உற்றார் இன்றித் தானே மேய்ந்து, தானே வளர்ந்து,  பருவமெய்தி . . . . . . . .

ஆனால், மனிதப் பிறப்போ, பிறந்ததில் இருந்து இறக்கும் வரை அளவில்லா சிக்கல்கள், எத்தனையோ பிய்த்தல்கள், மீளாத துன்பங்கள்,   தீராத வியாதிகள், தாங்காத வேதனைகள், தீராத பட்டினிகள், ஓயாத ஓட்ட்ங்கள், எண்ணிலா ஏமாற்றங்கள், ஒட்டாத  பாசங்கள், உடைந்திடும் உறவுகள், ஓட்டிடும் சுற்றத்தினர், தாங்காத துரோகங்கள், விரும்பாத கொலைகள், ஏமாற்றுக் கொள்ளைகள்,   இயலாத பேராசைகள், எட்டாத  அபிலாசைகள்,  கிடைக்காத எதிர்பார்ப்புகள், தொலையாத வறுமைகள் என்றும்,  சொந்தங்களுக்குள் இழுக்கப்பட்டு, பாசங்களுக்குள் கட்டுப்பட்டு, நாளாந்தம் அல்லல் பட்டு, கஷ்டப்பட்டு, வருத்தப்பட்டு, நொந்து, நொடிங்கி வாழவேண்டி இருக்கின்றதே.....

இறைவா, ஏன் என்னை மனிதனாய்ப் படைத்தாய்? 

ஓர் ஆடாய், ஒரு மாடாய், ஒரு குரங்காய் அல்லது ஒரு பூச்சியாய், ஒரு புழுவாய் என்னைப் படைத்திருந்தால் ஒன்றுமே இன்றிச் 'சும்மாவே'  இருந்து, வாழ்ந்து, மடிந்திருப்பேனே!


              எண்ணம்: செல்வதுரை,சந்திரகாசன்                

1 comment:

  1. புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.மிருகங்கள்,பறவைகள் அவை அவை தங்கள் உணவுகளையே உண்டு வருகின்றன. தங்கள் வாழ்க்கையினையே வாழ்ந்து வருகின்றனர். எனவே அவைகளுக்கு துன்பம் ,வருத்தம் இல்லை.ஆனால் மனிதன் மட்டும் [பணம்,உணவு]அனைத்தையும் விழுங்க தயாராக இருக்கிறான். அதனாலேயே இன்று அவனுக்கு புதுப் புது வியாதிகள். அதிலும் இறைச்சிக்காக வளர்ப்பதாக கூறி மிருகங்கள் பறவைகளை அடைத்து வைத்து வேறு உணவுகளைக் கொடுத்து அவைகளின் நலங்களையும் கெடுத்துவிட் டான்.நான் கடவுளாக இருந்தால் அவனை மிருகம்,பறவைகளாகப் படைத்து அவனுக்கு விடுதலை கொடுக்க மாடடேன்.

    ReplyDelete