தமிழே அழகே அழகே
உலகின் அழகே அழகே
தாய் மொழியின்
விழியாய் இருக்கும்
அழகே அழகே
உலகம் முழுவதும் பரவி
அறிவு கண் திறக்கும்
உன் மொழியின் ஆழம்
அழகே அழகே.
உன் மொழியின் உறவுகள்
உலகத்திலே பரவி
பிரிந்து இருந்தாலும்
உலகின் அத்தனை
மொழியின் புரிதலாக
நீ இருப்பது அழகே அழகே
நெஞ்சுரம் நமக்கு ஊட்டி
கருணையை எமக்கு அளித்து
பிறர் பசியை போக்கும் உணர்வை
நெஞ்சில் ஊட்டி
மொழியின் சிறப்பை உயர்த்தி
தமிழின் பெருமையை
அழகாக்கும் அழகே அழகே
எத்திசையில் புகழ் மணக்க
எத்திசையிலும் வாசம் வீச
சிந்தனைகளோடு உறவாடி
எழுத்து முத்துக்களில் ஊடல் கொண்டு
இலக்கிய குழந்தைகளை பிரசவித்து
வாசம் வீசும் தனித்துவம்
அழகே அழகே!
------- காலையடி,அகிலன்.
No comments:
Post a Comment