எந்த நாடு போனாலும் தமிழன் ஊர் ''நாகர்கோவில்''' போலாகுமா?

நாகர்கோவில் (Nagercoil), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி   மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறப்புநிலை நகராட்சி ஆகும். கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரமும் நாகர்கோவில் ஆகும். இந்நகருக்கு நாஞ்சில்நாடு என்ற பெயரும் உண்டு. ஸ்ரீ நாகராஜாவுக்கு திருக்கோயில் இவ்வூரில் அமைந்துள்ளதால் இவ்வூர்
நாகர்கோயில் என அழைக்கப்படுகிறது. இந்நகரின் வழியாக பழையாறு ஓடுகிறது. இம்மாவட்டத்தின் எல்லைகளாக திருநெல்வேலி மாவட்டமும் கேரள மாநிலமும் அமைந்துள்ளது. வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவ மழைகளால் மழை பெறும் மாவட்டமாகும்.

பொருளாதாரம்
 மீன்வலை தயாரிப்பு வளர்ந்து வரும் தொழில்களில் ஒன்று. வணிக மீன் பிடிப்புக்காக உள்நாட்டுச் சந்தைகளிலும் ஏற்றுமதிச் சந்தைகளிலும் இவ்வலைகள் விநியோகம் செய்யப்படுகின்றன. தென்னை நார் தயாரிப்பு, பூ வணிகம், கைத்தறி நெசவு, ரப்பர் பொருள்கள் தயாரிப்பு, உணவு பதனிடுதல், ஏற்றுமதிச் சந்தைக்காக பின்னற்பட்டி தயாரிப்பு போன்ற குடிசைத் தொழில்களும் இங்கு நடைபெறுகின்றன.

மதங்கள்
இந்நகரில் இந்து, கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமிய சமயத்தினர் வாழ்கின்றனர்.

கோயில்கள்
நாகராஜா கோவில்
அழகம்மன் கோவில்
ஸ்ரீ அற்புத வினாயகர் கோவில் மீனாட்சிபுரம்
கிருஷ்ணன் கோவில்
கிறிஸ்தவ ஆலயம்[தொகு]
புனித சவேரியார் பேராலயம், கோட்டாறு
வேதநகர் புனித மிக்கேல் ஆதிதூதர் ஆலயம்
பள்ளிகள்[தொகு]
இராணி சேது இலக்குமிபாய் அரசு மேல்நிலைப் பள்ளி(எஸ்.எல்.பி.)
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளி
ஜோசப் கான்வென்ட் மேல்நிலைப் பள்ளி
லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளி
கார்மல் மேல்நிலைப் பள்ளி
புனித பிரான்சிஸ் மேல்நிலைப் பள்ளி
கன்கார்டியா மேல்நிலைப் பள்ளி
டதி மேல்நிலைப் பள்ளி
தேசிக விநாயகம் தேவஸ்தானம் மேல்நிலைப் பள்ளி(டிவிடி)
புனித மிக்கேல் உயர்நிலை பள்ளி (வேதநகர்)
கல்லூரிகள்[தொகு]
பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி
தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி

சுற்றுலாத் தலங்கள்


கன்னியாகுமரி
முட்டம் கடற்கரை
திற்பரப்பு அருவி
பத்மநாபபுரம் அரண்மனை
மாத்தூர் தொட்டிப் பாலம்
குளச்சல் துறைமுகம்
மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோவில்
சுசீந்திரம் தாணுமாலயன் கோயில்
பேச்சிப்பாறை
பெருஞ்சாணி
முக்கடல் அணை
உலக்கை அருவி
சொத்தவிளை கடற்கரை

என நாகர்கோயில் நகரத்தை ஒட்டி ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன. 
குறிப்பு: ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரத்தில் தமிழனின் ஒரு ஒரு ஊர் தொடர்பான தகவல் தீபத்தில் வெளியிடப்படும்.
தொகுப்பு:கயல்விழி பரந்தாமன்.

No comments:

Post a Comment