அன்று
சனிக்கிழமைகாலை ஆகையால் நிம்மதியாக என் அறையில் புரண்டு படுத்துக்கொண்டிருந்த நான்
பாட்டியின் குரல்கேட்டு திடுக்கிட்டுக் கண்விழித்தபோது மாமாவீட்டில் வசிக்கும்
அண்ணாமலைத் தாத்தாவுடன் ரெலிபோனில் பாட்டி அறுத்துக்கொண்டிருப்பதனை உணரமுடிந்தது.
"இல்லை, உவளுக்கு உதுகொழுப்பு.உதுவும்வேணும், இன்னமும்வேணும்."
பாட்டி என்ன சொல்லுகிறா
என்று எனக்குப் புரியாமலேயே என்காதை ஒருமுறை குடைந்து கொண்டேன்.
"ஏன் பறுவதம் அப்பிடிச்சொல்லுறாய்"
"வேறை என்ன தமையன்காரன் ஜெர்மனியில
இருந்துகனடாவுக்கு தன்னட்டை விசிற் பண்ணப்போறானெண்டு தமையன் மனுசிபிள்ளையளுக்கு
பவர்காட்ட அவசரம் அவசரமாய் இருந்த
வீட்டையும் வித்து, சொந்தக்காரர்
எல்லாரும் வச்சிருக்கிற வீடுகளை விடப்பெரிய வீடெல்லே வாங்கினவள். அதுமட்டுமே முதல்
இருந்த சோபாவில இருந்து அடுப்புவரை எல்லாம் திமிரா பேசிதூக்கி எறிஞ்சுபோட்டு
எல்லாம் நல்லகுவாலிற்ரியாய் எல்லோவாங்கிவீட்டை அலங்காரம் பண்ணி அவைக்கு
ஷோகாட்டினவள். கடைசியில அவை வந்துபோய் 6,7 மாதத்தில
வீட்டுக்கடனும் கட்டஏலாம நடுரோட்டுக்கு வந்துவிட்டினம்.
""அவன்தம்பி, தங்கச்சியாரை கைவிடமாட்டானே! நல்லாஉதவிசெய்வனே!"
"ஐயோ! அதுகள் இஞ்சைவந்து வீட்டையும் வசதியையும்
பார்த்துவிட்டு ஏங்கிப்போய்போனதுகள். வந்தஇடத்திலைகூட நிலைமையைபார்த்திட்டு
தங்களைவிட தங்கட்சி பெரும்வசதியாய் இருக்கிறாள் எண்டு காசு குடுக்கக்கூட
தமயன்காரனை மனுசிக்காரி விடேல்லையாம்."
"எல்லாம் கடன்பட்டகாசெண்டு
அவையழுத்தெரியுமே!"
"என்னெண்டு சொல்லுறது. இனிச்சொல்லவும்
முடியாதெல்லே. பிறகு இவையைப்பற்றி தரக்குரவாயெல்லெ நினைச்சுப்போடுவினம்."
"உதைத்தான் விரலுக்கேற்ற வீக்கம்வேணும்
எண்டுசொல்லுறது"
"வேறென்ன, உப்பிடித்தான் அடுத்தவை பார்த்துக் கதைக்கவேணும் என்பதற்காக
வீடு, விழாக்கள் என்று
பெருமெடுப்புக்கள் எடுத்துப்போட்டு அக்கடனை சமாளிக்கமுடியாமல் திண்டாடும்
எங்கடைஆட்கள் இன்னும் இங்கை இருக்கினம்."
"அதாலை என்ன பலனைகண்டவை?"
"நன்மை ஒண்டும் இல்லையே! கஷ்டம்தான்வந்தது.
போதாதெண்டு, இஞ்சை எல்லே போன்
பண்ணினம்."
"ஏன் என்னவாம்?"
"மேளிட்டை கடனாய் ஒரு 10,000 டொலர் கேட்கினம்."
ஆத்திரத்துடன் "மேள் என்ன சொன்னவள். ஓமேன்டிட்டாளே?"
"ஏன் அவள் என்ரை மேளெல்லே. நல்லபதில்தான்
சொன்னாள்."
ஆவலுடன் "என்ன
சொன்னவள்."
"நீங்கள் எங்களைவிட சரியான வசதியுள்ளனீங்கள்.
எங்களைப்போய் நீங்கள் கடன் கேட்கிறியளோஎண்டு ஏங்கியே கேட்டுவிட்டாள். அவளும் போனை
வைச்சுவிட்டாள்."
"வேறென்ன அவைக்கு காசையும் குடுத்திட்டு, கேட்டகப்போனா
வெருட்டுவினம், போலிசுக்குபோன்
பண்ணுவினம். அதெல்லாம் நமக்கேன்.”
"சரியாச் சொன்னியள். வேறஎன்ன?
கிச்சினில எனக்கு வேலை இருக்கு, பிறகு எடுக்கட்டே?"
"சரி பறுவதம் "
பாட்டி தாத்தாவின்
உரையாடலை எண்ணியவாறே நான் போர்வையினை சரிசெய்து புரண்டு படுத்துக்கொண்டேன்.
-பேரன்,செ -மனுவேந்தன்.
0 comments:
Post a Comment