தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?] பகுதி :08

 [தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
எமது மூதாதையர் 
குமரி கண்டம் கோட்பாடை ஆதரிக்கும் அறிஞர்கள் ,முதல் பரிணாமவளர்ச்சி குமரிக் கண்டத்தில் நடந்திருக்கிறது என்றும்,அதாவது குமரிக்கண்டத்தில் தான் உலகின் முதல் மனிதன் தோன்றினான் என்கின்றனர்
ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனோடு நாவே
மூன்றறி வதுவே அவற்றோடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றோடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றோடு செவியே
ஆறறி வதுவே அவற்றோடு மனனே

மெய்,வாய்,மூக்கு,கண்,செவி என ஐம்புலன்களின் படிநிலை வளர்ச்சியைதொல்காப்பியர் மேலே கூறியவாறு 3000-2500 ஆண்டுகளுக்கு முன்சொல்லி சென்றார்[தொல்காப்பியம்/பொருளதிகாரம்/மரபியல்:27-33].அதாவது உயிரினங்களை ஓர் அறிவு முதலாக ஆறு அறிவு உள்ளனவாகப்பகுத்து "மக்கள் தாமே ஆறு அறிவு உயிரேஎன மேலும் உயிர்களின்தோற்றம் வளர்ச்சி பற்றி படிப்படியான பரிணாம வளர்ச்சி நிலைகளைஅப்போதே கூறியுள்ளார் அவர் கூற்றில் சில சில பிழைகள்உண்டு.உதாரணமாக தேனீக்கு மெய்,வாய்,மூக்கு,கண் ஆகிய நான்குஅறிவுகள் உண்டென்று கூறியது,[தேனீக்கு மூக்கு இல்லை/Bees, Like All Insects, Do Not Have Noses With Nasal Passages]   மக்களுக்குமட்டுமே மனம் இருப்பதாக கூறியது[இது அறிவியல் முறைப்படிதவறாகும்ஏனென்றால் மனம் இல்லாத உயிர்களே உலகில் இல்லை.].போன்றவை ஆகும்எவ்வாறாயினும் தொல்காப்பியர் கூறும் மனிதஇனத்தோற்றம் பற்றிய ஆராய்ச்சி பெரும்பாலும் அறிவியல் முறைகளுடன்ஒத்துள்ளது குறிப்பிடத்தக்கது.அறிவியலின் கருத்துப் படி மனிதர்படிவளர்ச்சி மூலம் வழிவந்தவர்கள்சிம்பான்சி குரங்கு இனத்தில் இருந்து5–7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கிளைவிட்டனர்அதன் பின் பலமனித இடை நிலை இனங்கள் இருந்துதற்போதைய Homo sapiens 400,000 இருந்து 250,000 முன்னர் கிளை விட்டனர் என்கிறது.
அங்கு தமிழே 12000 வருடங்களுக்கு முன்பே உறுதிப்படுத்தப்பட்டமொழியாக இருந்துள்ளது எனவும்  நம்புகிறார்கள்.அத்துடன் அங்குதலைமை தெய்வமாக சிவா இருந்ததாகவும் மேலும் அது  வேத சமுகம் எனவும் சிலர்
கூறுகிறார்கள்இந்திய சமுத்திரத்தின் திடீர்வெள்ளத்தால் தள்ளப்பட்ட இவர்கள்,இரண்டு பிராந்தியத்திற்கு [நிலப்பரப்பிற்கு ]போயிருக்கலாம்.ஒரு தொகுதி சரஸ்வதி ஆறுவழியாக வட இந்தியாவிற்கும்[சிந்து சமவெளிநாகரீகம்மற்ற தொகுதி பெர்சியன் கடல் வழியாகமேசொபோடோமியா [இன்றைய ஈராக்துருக்கி,சீரியா போன்ற நாடுகளைஉள்ளடக்கிய மாபெரும் நிலப்பகுதிவிற்கும் போயிருக்கலாம் அல்லது வடஇந்திய ஊடாக போயிருக்கலாம்[சுமேரிய நாகரீகம்] .அவர்கள் இந்தகோட்பாட்டிற்கு பாகிஸ்தானில் உள்ள இடங்களின் பெயர்களை சான்றாக
கூறுகிறார்கள்.உதாரணமாக:கொற்கை (Gorkai. Gorkhai),வஞ்சி (Vanji), தொண்டி(Tondi),மத்ரை (Matrai), உறை (Urai),கூடல் கட் (Kudal Garh) & கோளி(Koli) ஆகும் அதே போலஆப்கானிஸ்தானில் :கொற்கை(Korkay. Gorkay). பூம்பகார்(Pumbakar)-அவைகள் சங்க காலநகரத்துடன் [ஊருடன்]  ஒத்துபோவதை கவனிக்க:கொற்கை.வஞ்சிதொண்டிமதுரை.உறையூர்கூடல்கோழிபூம்புகார் என்பனவற்றுடன்மொழியறிஞர்களின்கூற்றுப்படி ஒரு மொழி அது தோன்றிய இடத்திலேயே தான் செம்மையாகஇருக்கும்அந்த இடத்தினை விட்டு தொலைவுக் கூட கூட அந்த மொழிதிரியும் வாய்ப்பு அதிகமாக இருக்கின்றதுஇதன் அடிப்படையிலேவடக்கேசெல்ல செல்ல தமிழ் வேறு மொழிகளாக திரிந்து இருப்பதும்தெற்கேசெல்ல செல்ல அது செழித்து இருப்பதும்தமிழ் தெற்கிலேயே தோன்றியமொழி என்பதற்கு நல்ல சான்று என்று அவர்கள் கருதுகின்றனர்.இந்தவிடயங்களில் இருந்து மனிதன் தெற்கில் இருந்து வடக்கே சென்றுள்ளான்என்று நாம் கருத முடிகின்றது.

ஈனும் -மா - எல் - இசு(Enuma-Elish) - எனப்படும் சுமேரியாவை வென்றஅக்கடியர்களால் (Akkadians) எழுதப் பட்ட  சுமேரியஇலக்கியமும்...வீரனான அரசன் கில்கமெஷ் பற்றிய சுமேரிய செவிவழிக்கதைகளையும்செய்யுள்களையும் தொகுத்துப் பிற்காலத்தில்உருவாக்கப்பட்ட கில்கமெஷ்  (GILGAMESH) - எனப்படும்மேசொபோடமிய/பாபிலோனிய இலக்கியமும் உலகின் தொடக்கம் பற்றிக்கூறும் தொன்மையான நூல்கள்மேலும் அதிசயம் என்னவென்றால்இவ்விரண்டு நூல்களுமே வெள்ளத்தினால் அழிவுண்ட உலகத்தினைப்பற்றியும் அதில் இருந்து இறைவன் அருளால் மீண்டு வந்த மனிதனைப்பற்றியும் கூறுகின்றனமேசொபோடமியா இருக்கும் இடத்தில் இது வரைஉலகமே அழிந்து போகும் வண்ணம் வெள்ளம் வந்து இருப்பதற்கு சாத்தியக்கூறுகளே கிடையாது.பின்னர் எவ்வாறு இவர்கள் வெள்ளத்தினைப் பற்றிப்பேசுகின்றார்கள்.இது தான் நாம் கவனிக்க வேண்டியது.மேலும்அவர்கள் எப்படி பேசினார்கள் என்பதை அறிய அந்த மேசொபோடமியவெள்ள கதையில் இருந்து ஒரு பந்தி கிழே தரப்பட்டுள்ளது
"All the windstorms, exceedingly powerful attacked as one. 

The deluge raged over the surface of the earth. 
After, for seven days and seven nights. 
The deluge had raged in the land. 
And the huge boat had been tossed about on great waters. 
Utu came forth, who sheds light on heaven and earth. 
Ziusudra opened a window of the huge boat. 
Ziusudra, the king. 
Before Utu prostrated himself."
[One passage from Mesopotamian Flood Story]
இந்நிலையில் குமரிக்கண்டம் என்பது உண்மையா அல்லது வெறும்கற்பனையா என்ற கேள்வி எழுகிறதுகுமரிக்கண்டம் என்ற ஒன்றுஇருந்ததா இல்லையா என்பதனைப் பற்றிய முழுவீச்சான ஆராய்ச்சிகள்/முயற்சிகள் இந்தியாவால் அல்லது தமிழ் நாட்டால் தொடங்கப்பட்டதா?  2004 ஆம் ஆண்டு 26 ஆம் திகதி இதே பகுதியில் சுனாமி[Tsunami]அல்லது கடற்கோள் என்ற பெரும் ஆழிப் பேரலையில் இயற்கையின்கொடூரத்தை உலகம் கண்டது.சுனாமி என்பது யப்பானிய சொல்சு என்றால்துறைமுகம்நாமி என்றால் அலைஎனவே சுனாமி என்றால் "துறைமுகஅலைஎன்று பொருள்.கடலின் அடியில் உள்ள டெக்கான்தட்டுகளின்[tectonic plate] விலகல்[அல்லது நகர்தல்மூலம் இந்த ஆழிப்பேரலை உண்டானது.8.6 ரிக்டர் அளவுகள்[richter scale]  பூகம்பம்ஏற்பட்டது.ஆகவே குமரிக்கண்டத்தை மூழ்கடித்த அந்த ஆழிப் பேரலை,நாம் 9/10 வருடங்களுக்கு முன்பு  கண்ட சுனாமியை விட பல மடங்குபெரிதாக இருக்குமோஎன்று எண்ணத்  தோன்றுகிறது

பகுதி:09அல்லது 01  வாசிக்க கீழே தரப்படட தலைப்பினை அழுத்தவும் 
Theebam.com: தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?] பகுதி:1.

Theebam.com: தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?] பகுதி:9...

☁️☁️☁️☁️☁️☁️☁️☁️☁️☁️☁️☁️☁️☁️☁️

No comments:

Post a Comment