[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
இப்பொழுது சங்ககாலத்துத் தமிழ் நூல் தொகுப்பான பத்துப்பாட்டில் அடங்கியபட்டினப்பாலையில் எப்படி இந்த காவிரிப்பூம்பட்டினத்தின் செல்வச் செழிப்பை 2000ஆண்டுகளுக்கு முன் கூறினார்கள் என்பதை அடிகள் 20-27 மூலம் பார்ப்போம்.
"அகல் நகர் வியன் முற்றத்துச்
சுடர் நுதல் மட நோக்கின்
நேர் இழை மகளிர் உணங்கு உணாக்கவரும்
கோழி எறிந்த கொடுங்கால் கனங்குழை
பொற்கால் புதல்வர் புரவி இன்று உருட்டும்
முக்காற் சிறு தேர் முன் வழி விலக்கும்
விலங்கு பகை அல்லது கலங்கு பகை அறியா
கொழும் பல் குடிச் செழும் பாக்கத்துக் (20-27)"
ஒளி பொருந்திய நெற்றியும், மென்மையான பார்வையும் நேர்த்தியாகச் செய்யப்பட்டஅணிகலன்களையும் அணிந்துள்ள மகளிர், அகன்ற வீட்டின் பரந்த முற்றத்தில்உலர்த்தியிருக்கும் உணவுப் பொருள்களைத் தின்ன வரும் கோழிகளை விரட்ட,வளைந்த அடிப்பாகத்தைக் கொண்ட கனத்த குழையினை (காதணி) எறிவர். அக்குழை,பொன்னாலான அணிகலன்களைக் கால்களிலே அணிந்துள்ள சிறுவர், குதிரையின்றிகையால் உருட்டும் மூன்று கால்களையுடைய சிறுதேரினை முன் செல்லவிடாமல்தடுக்கும். இவ்வாறு தடைகளாக வரும் பகையே அன்றி வேறு கலக்கமுறுவதற்குக்காரணமான பகையை அறியாத காவிரிப்பூம்பட்டினம். இக்காவிரிப்பூம்பட்டினம்செல்வம் நிறைந்த, பல இனத்து மக்களும் சேர்ந்து வாழ்கின்ற செழிப்பானகடற்கரையை ஒட்டிய ஊர் (பாக்கம்) என்கிறது.
தற் கால சரித்திரத்தை பொறுத்த வரையில் அப்படி கிறிஸ்துக்கு முன் 9000ஆண்டளவில் ஒரு நாகரிகம் தென் இந்தியாவில் இருந்ததாக தெரியவில்லை.ஆனால்மனிதரால் செய்யப்பட்ட [குதிரைலாட வடிவத்திலான] U வடிவ கட்டுமானகண்டுபிடிப்பு ,இது .இன்னும் கண்டுபிடிக்கப்படாத,கடலில் மிக ஆழத்தில் புதையுண்டஒரு நாகரிகத்தின் அடையாளம் என கருத தோன்றுகிறது.தேசியக் கடலாராய்ச்சிமையத்தின் தலைவர் எஸ்.ஆர்.ராவ், மாசி 2002 இல், இது எதோ ஒரு தனித்த கட்டிடம்என நம்பவில்லை என்றும் ,கூடுதலான ஆராச்சிகள் அதை சுற்றி உள்ள உண்மைகளைபுலப்படுத்தும் என்கிறார்.
சார்லஸ் டார்வின் பரிணாம கொள்கையில் கவரப்பட்ட,இங்கிலாந்தைச் சேர்ந்த உயிரியல் வல்லுனர் பிலிப்ஸ்க்லேடெர்[Philip Sclator] என்னும் ஆராய்ச்சியாளர்,மடகாஸ்கர் தீவில்[Madagascar Islands] ஆராச்சியில்ஈடுபட்டிருந்தார். அப்படி ஆராச்சியில் இருக்கும்போது,அங்கு வாழ்கிற இனங்களுக்கும் இந்தியாவில்இருப்பவைக்கும் ஒரு ஒத்த தன்மையுடைதைகண்டார்.அவரின் ஆராச்சி விலங்குகளின் புதைவடிவம்[ fossils/தொல் எச்சம்] ஆகும்.அவைகள் பக்கத்தில் இருக்கும் ஆஃப்ரிக்காவுடன் ஒத்து போகாமல் தூர இருக்கும்இந்தியாவுடன் ஒத்து போனது.ஆகவே ஒரு மிக பெரிய நிலப்பரப்பு ஆப்பிரிக்க- ஆசியகண்டங்களின்
பாலமாக, இருந்திருக்க வேண்டும் என முடிவுஎடுத்தார்.இதன் அடிப்படையில் இலெமூரியா [Lemuria]என்ற ஒரு கண்டத்தை முன் மொழிந்தார். உதாரணமாகஒரு வகை முதுகில் கொண்டையுள்ள எருதை[Zebutype cattle] குறிக்கலாம்.அப்படியே இன்று வாழும்இலெமூர்[Lemur/லெமூர் என்பது ஒரு விலங்கினம்.பார்ப்பதற்கு நாயின் முகத்தோடு கூடிய குரங்கினம் போலதெரியும்.] எனப்படும் புதுவின விலங்கினமும் ஆகும்.இவ் இன விலங்கினத்தின்தொல்லுயிர் எச்சம் மடகாஸ்கர் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளில் மட்டுமேஉள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.டி என் எ ஆராச்சி[DNA research/டி.என்.ஏ என்பதுஆக்சிசனற்ற ரைபோ கரு அமிலம் (Deoxyribonucleic acid அல்லது Deoxyribose nucleic acid - DNA) எனப் பொருள் தரும். இது எந்த ஒரு உயிரினத்தினதும்(ஆர்.என்.ஏ வைரசுக்கள் தவிர்ந்த) தொழிற்பாட்டையும், விருத்தியையும் நிர்ணயிக்கும்மரபியல் சார் அறிவுறுத்தல்களைக் கொண்ட ஒரு கரு அமிலம் ஆகும். டி.என்.ஏஎன்பதை இனக்கீற்று அமிலம் எனத் தமிழில் கூறலாம்.] இந்த முதுகில்கொண்டையுள்ள எருது 5000 வருடங்களுக்கு முன் இந்தியாவில் இருந்து இடம்பெயர்ந்தது என்கிறது.பண்டையக்காலத்தில் அழிவிற்குட்பட்டதாக கிட்டத்தட்ட 2000-2700 வருடங்கள் பழமை வாய்ந்த இலக்கியகூற்றுக்களான சங்க இலக்கியம் ,சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய காப்பியங்களில் கூறப்பட்ட குமரிகண்டமே இதுவாகும் என நம்பினர்.இப்படித்தான் குமரி கண்டக் கோட்பாடு மேலும்மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரால் வளர்ச்சி அடைந்து, குமரி கண்டம் தான்'மனித நாகரீகத்தின் தொட்டில்'[மனித நாகரிகத்தின் தொடக்கம்] என அவர் உரிமைகோரினார்.
மேலும் மிகவும் நிலை நாட்டப்பட்ட சுமேரியனைப்பற்றிய சரித்திர உண்மை என்னவென்றால் அவர்கள் அந்த நாட்டுப் பழங்குடி மக்கள்[சுதேசி] அல்ல ,அவர்கள்கிழக்கில் இருந்து அங்கு வந்து குடியேறியவர்கள் என்பதே.["Ancient Sumeria "Primary Author: Robert A. Guisepi /Portions of this work Contributed By:F. Roy Willis of the University of California 1980 and 2003].இது சுமேரிய நூலிலேயே பல இடங்களில் கூறப்பட்டுள்ளது.அந்த கிழக்கு ஒருவேலை ஹரப்பா அல்லது வெள்ளத்தால் மூழ்கிய குமரி நாடாக இருக்கலாம்.[Sumerian is Archaic Tamil and Not a Derivative of Turkish by Dr K.Loganathan, 2004].கில்கமெஷ் காப்பியத்தில்[Epic of Gilgamesh] ஒரு பெரும்வெள்ளத்தைப்பற்றிய குறிப்பு உண்டு.அது கூறுவது"கடவுள் வெள்ளத்தைகொண்டுவந்த்தார்.அது பூமியை[மண்ணை] விழுங்கியது" [Epic of Gilgamesh - Sumerian Flood Story 2750 - 2500 BC]என்று உண்டு.
பகுதி:08/01 வாசிக்க , கீழே தரப்படட தலைப்பினை அழுத்தவும்.
Theebam.com: தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?] பகுதி 08:.
Theebam.com: தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]பகுதி:01
Theebam.com: தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?] பகுதி 08:.
Theebam.com: தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]பகுதி:01
0 comments:
Post a Comment